Friday, 30 April 2010

செவி வழி இலக்கியம்

"தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை".... என்று இல்லாவிட்டாலும் சுடியாகவாவது இருப்போமே. ;)

'ஆசிரியையாய் என் அனுபவங்கள்' என்று நானும் எழுதுவதாகத் தீர்மானித்தாயிற்று.

இன்று... சிரித்த அனுபவம்.

'அறை எண் 15' மாணவர்கள் இன்னமும் செபங்கள் மனனம் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஏனைய அறை மாணவர்கள் எல்லோரும் பாடம் சொல்லி முடித்தாயிற்று. இவர்களைச் செவிமடுக்க சமய ஆசிரியருக்கு வேளை போதவில்லை என்று என்னிடம் உதவி கேட்டார் நேற்று. சம்மதித்தேன். என்கையில் மாணவர்கள் பெயர் அடங்கிய தாளைத் திணித்துவிட்டு விலகினார். செம்மஞ்சள் நிறத்தில் (வகுப்பிற்குரிய நிறம் அது) அட்டவணை போட்டு, பாடம் கேட்க வேண்டிய செபங்களின் பட்டியலும் இருந்தது.

நேற்று பாடசாலை முடிந்ததும் மாணவி ஒருவர் என்னைத் தேடி வந்தார். "அம்மா வர அரை மணி இருக்கிறது. செபம் சொல்லட்டுமா?"  என்றார். எனக்கும் 'அப்பா' வர அரை மணி இருந்தது. செம்மஞ்சள் வர்ணத் தாளோடும் பேனாவோடும் அமர்ந்தேன். செபங்கள் அனைத்தும் சரியாக ஒப்பித்தார்.

இன்று காலை சிலர் வந்தார்கள். சரியாக ஒப்பித்தவற்றைக் கணக்கு வைத்துக் கொண்டு மீதியைக் கற்றுக் கொண்டு வருமாறு திருப்பி விட்டேன்.

தேநீர் இடைவேளையில் சிலர் வந்தார்கள். குண்டுக் கன்னத்தோடு கொழுக்மொழுக்கென்று ஒரு பிலிப்பீனோக் குட்டியர் இருக்கிறார். அவர் பெயர் சட்டென்று நினைவு வராது. சில சமயங்களில் 'எரிக்'என்று வாய் தவறி அழைத்து மாட்டி இருக்கிறேன். ;) இந்த எரிக் வந்து என்னருகே அமர்ந்தார். அனைத்துச் செபங்களும் மனப்பாடம் என்றார். சொன்னார். சில சொற்கள் நடு நடுவே காணாது போய் இருந்தன.

கடைசியாகக் கேட்டேன் "Do you know 'Eternal Rest'?" "Yes, Miss," என்று ஆரம்பித்தார். உதடுகள் அதிகம் அசையாது வேக வேகமாகச் சொன்னார். வாய் நிறையச் சாக்லட் குதப்புவது போல கன்னம் அசைந்தது அழகாக இருந்தது. அவர் கையில் ஒரு ஐஸ் ப்ளாக் (blog இல்லை), பாதி உறிஞ்சிய நிலையில். என் கையில் லிசா போட்டுத் தந்த 'பால்க்'கோப்பி!! அதுவும் பாதி உறிஞ்சிய நிலையில்.

"Eternal rest grant to him O! Lord. May pe.t..l light shine upon him. May he.." என்ன சொல்கிறார்! நடுவில் தடுத்து மீண்டும் சொல்லக் கோரினேன். "Eternal rest grant to him O! Lord. May pe..t..l light shine..." காது சரியாகக் கேட்கவில்லை. "Hold on Eric. Can I have that line again please!!!" இப்போது நானே எடுத்துக் கொடுத்தேன். "Eternal rest grant to him O! Lord. May..." தொடர்ந்தார்  "May... May.. um. May petrol light shine upon him. May he rest in peace. Amen."

perpetual என்பது தான் மருவி, பெட்ரோல் ஆகி இருந்தது. ;)
 
பிறந்ததும் இறந்துபோனவர் இவர். வயிற்றுப்புறம் வற்றி இருந்தது. ஆகாரம் போதாது இருந்திருக்கும் போல.

17 comments:

  1. இமா,
    // எனக்கும் 'அப்பா' வர அரை மணி இருந்தது. //
    நான் சொன்னேன் அல்லவா இமா இன்னும் குழந்தை தான் என்று.

    ம்ம்ம்... தொடர்ந்து எழுதுங்கோ. நல்லா இருக்கு.

    ReplyDelete
  2. இன்னும் நிறைய இது போல போடுங்க. பிலிப்பைனி பேச்சு கிளிப்பேசுவது மாதிரி இருக்கும். உச்சரிப்பு அப்படி

    ReplyDelete
  3. க்யா ஹை யே? ஆன்ரீ..ஆப் தோ ஏக் பார் மஜாக் கர்த்தே ஹோ..பிர் தித்லி கி தஸ்வீர் திக்காகர் ஜீனோ கோ ரோனே தேத்தே ஹோ!! அப் ஜீனோ ஹசேகா யா ரோயேகா?
    ஆன் த ஹோல் ஜீனோ தோ "விசர்" ஹோ கயா!

    ஆன்ரீ..பயம் படாம படியுங்கோ..ஜீனோ இந்தி பேசோ ட்ரையிங் பண்ணிக்கினு இருக்கு..அதான் இப்பூடி!! ஹி,ஹி!!

    இந்தி தெரிஞ்ச பீப்பிள் ப்ளீஸ் அஜஸ்ட்..இலக்கணப் பிழைகள்,சொற்குற்றம்,பொருள்குற்றம் இருந்தால் காக்கா:)
    போங்கோ எண்டு ஜீனோ எச்சரிக்கிறது. கர்...ர்ர்..ர்ர்!

    ReplyDelete
  4. இமா, அங்கு ~மிஸ்~ என்றுதான் கூப்பிடுவினமோ? இங்கெல்லாம் பெயர் சொல்லித்தான் கூப்பிடுவார்கள் ஆசிரியர்களை.

    பட்டாம்பூச்சி... இறந்தபின்பும் அழகில் குறையவில்லை.

    ஜீனோ... ஒண்டு ரண்டென்றால் காக்காபோ சொல்லலாம்.. முழுவதும் எல்லோ காக்காபோவாக்கிடக்கு.... முறைக்கப்படாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  5. அன்பு பப்பி அறிவது,

    "எப்புடி சுகம் ஆன்டி?" (நல்ல சுகம்.)

    ம்.. ஒரு பார்... பார் சோப்பா?
    (கர்த்தரே! காப்பாற்றும் அப்பா! நான் தெரியாமல் பிழை விட்டு விட்டேன். இனிமேல் தமிழ் தவிர வேற எந்தப் பாஷையும் கதைக்க மாட்டன். என்னை மன்னியும்.) ;D நல்லா போட்டு தேச்சு குளியுங்கோ பப்பி.

    என்ன! பப்பி "பீர்" குடிக்கப் போகுதோ! ;( வேணாம் பப்பி. அதெல்லாம் நல்ல பழக்கம் இல்ல. பதிலா, வல்லாரை ஜூஸ் குடியுங்கோ. மெமரிக்கு நல்லதாம்.

    எதுக்கு இப்ப திக்காக கர்ர்ர் சொல்றீங்கள்! நான்தான் மொழி பெயர்ப்பு போட்டு இருக்கிறேனே!

    பப்பிக்கு தேத்தா வேணுமா? ஓகே. ஜலீலா அக்கா நல்ல டீ ரெசிபி ஒண்டு போட்டு இருக்கிறா. வாங்கோ, அதப் பார்த்து உங்களுக்கு திக்காக தேத்தா போட்டுத் தாறன்.

    //அப் ஜீனோ// மேல வைங்கோ. ;)

    //ஹசேகா யா// ஓம். ஹாஸ்யமா இருக்கு. ;)

    //ரோயேகா?// ஓம். ஓம். நல்லா விளங்கீட்டு. ;))))

    // "விசர்" ஹோ கயா!// நானும். ;))))) x 23546874768278 ;)

    அன்புடன் இமா

    ReplyDelete
  6. எனக்கு அதெல்லாம் தெரியாது ஜெய்லானி.

    இங்க பள்ளியில எல்லாரும் இங்ளிஷ்ல மட்டும்தான் கதைக்க வேணும் எண்டு சொல்லி வச்சு இருக்கிறம். இல்லாட்டி எங்கள முன்னால வச்சுக் கொண்டே தங்கட பாஷைல சண்டை பிடிப்பாங்கள். ;) கன பகிடி நடக்கும். பரிசுத்தமான வார்த்தைகள் சொன்னாலும் எங்களுக்கு விளங்காது. ;))

    ReplyDelete
  7. //தொடர்ந்து எழுதுங்கோ. நல்லா இருக்கு.//
    பெரிய பெரிய எழுத்தாளர் எல்லாம் வந்து இப்புடிச் சொன்னால்... எனக்கு அப்பிடியே ஐஸ்க்ரீம்ல குளிச்சு எழும்பின மாதிரி இருக்கு. நன்றி, நன்றி, நன்றீ. ;)

    ReplyDelete
  8. प्रिय Geno,

    आप कैसे हैं? कैसे डोरा है?
    मैं आप हिन्दी में जवाब चाहता था. ;)
    तो, इन कुछ शब्दों को सीखा. आशा है कि मैं उन्हें सही है! ;)
    अब तुम क्या करने जा रहे हैं? हँसने या रोने? ;D

    'Grrr मत कहो'. Athira akka आप एक बड़ा तौलिया दे देंगे. ;D

    मज़े करना.

    प्यार चाची

    ReplyDelete
  9. Dear Geno,

    How are you? How is Dora?
    I wanted to reply you in Hindi. ;)
    So, learnt these few words. Hope I have got them right! ;)
    What are you going to do now? Laugh or cry? ;D

    Don't say 'grrr'. Athira akka will give you a big towel. ;D

    Have fun.

    Love Aunty

    ReplyDelete
  10. wow

    engada vanthu parthal..egapatta lanugage

    katukidalam pol erukirathu..

    hm great imma..

    what a talent you are..

    salute..mis

    tcr

    c

    you again.

    ReplyDelete
  11. //great imma..// Hi.. Hi. ;))

    //what a talent you are.. salute..mis// Hi.. Hi. ;) x 25

    Thanks Surya. ;)

    ReplyDelete
  12. இங்கும் அதிரா சொல்வது போல் பேர் சொல்லி தான் அழைப்பார்கள்.

    நல்ல பதிவு.தொடருங்கோ......

    ReplyDelete
  13. ஜீனோவுக்கு எழுதியதை நானும் படிச்சுட்டேன் இமா;-)

    ஆஹா! வசனத்தை பிள்ளைகள் எப்படியெல்லாம் சொல்றாங்க!!! அது கூட நல்லா தான் இருக்கு இமா:-)

    ReplyDelete
  14. அதிரா,

    //~மிஸ்~// என்ன செவி? ;)
    ம். கூப்பிடுவினம். நான் சொல்லிருறது, அதெல்லாம் மிஸ் பண்ணிக் கன காலம் ஆச்சுது. மிசிஸ் ஸோ & ஸோ எண்டு சொல்ல வேணும் எண்டு.

    //பெயர் சொல்லி// ம்.

    //பட்டாம்பூச்சி... இறந்தபின்பும் அழகில் குறையவில்லை.// அப்பிடியே இருக்கும் எப்பவும்.
    ~~~~~~~~~~
    Sorry Athees. ;)

    ReplyDelete
  15. இங்கும் பெயர் சொல்லித்தான் அழைப்பது விஜி. ஓரிருவர் மட்டும் இப்படி. ;)

    ~~~~~~~~~~

    செல்வி, சரியாக எழுதி இருக்கிறேனா? ;) (எப்புடி இப்புடி? என்று யாரும் கேட்கப் படாது.) ;)))

    ReplyDelete
  16. பெர்பெசுவல் - பெட்ரோல் - குழந்தைகள்!!

    தவறானாலும் சிரிப்புத்தான் வரும்!!

    ReplyDelete
  17. ;) ஹுசேன், இதை அந்த ஆசிரியரிடம் சொன்னதும் அவர் சொன்னார் "முன்னால காரையோ, ட்ரக்கையோ கொண்டு போய் விட்டால் பெட்ரோல் லைட் ஷைன் பண்ணும்,' என்று. ;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா