Wednesday, 14 April 2010

மருதாணி, மருதாணி

சிறுவயது முதலே எனக்கு மருதாணி வைத்துக் கொள்ள ஆசை. எங்கள் பக்கம் இது எல்லாம் வழக்கம் இல்லை. என் கணவரது இஸ்லாமியத் தோழியின் திருமணத்தின் போதுதான் முதல் முறையாக வைத்துக் கொண்டேன். ஆனால் அது பெரிய புள்ளிகளாக மட்டும் இருந்தது. இப்படி அழகாக! என் கையில் போட்டுக் கொள்வேன் என்று அப்போது நினைத்துக் கூடப் பார்த்து இருக்கமாட்டேன். ;)

அறுசுவையில் வனிதா, ஜலீலா மற்றைய சகோதரிகள் எல்லோரும் பேசிக் கொண்டதைப் பார்த்து எனக்கும் ஆசை வந்தது. அதுவரை இலையை அரைத்துத் தொப்பி மாதிரி வைத்தால் சரி என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு நிறைய விஷயங்கள் பிடிபட்டது. ;)
(இது ப்ளாஷ் போட்டு எடுத்தேனா, போடாமல் எடுத்தேனா என்பது இப்போது நினைவில் இல்லை. ;)  )


பின்பு உமாவும் வனிதாவும் அங்கு மருதாணி போடும் முறையை விளக்கிக் குறிப்புகள்  கொடுக்க ஆரம்பித்தார்கள்.

சிறிது சிறிதாக.... முன்னேறி இருக்கிறேனா இல்லையா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். ;)


இந்த இடத்தில்தான் வில்லங்கம் ஆரம்பித்தது. ;(

ம்... திருத்தங்கள் எல்லாம் படத்தில் பளீரென்று தெரிகிறதே! ;)
ஓரமாக இருக்கும் அந்த ஒற்றை மயிலிறகு வைக்கும் போது 'கோன்' அடைத்துக் கொண்டது. பிறகு துவாரத்தைப் பெரிதாக்கியதில்...

மீதிக் கோடுகள் எல்லாம் கொஞ்சம் பெரிதாக... இலா ஸ்டைலில் சொல்வதானால் 'ஆம்ப்ளிஃபைட்' ஆக வந்தது. ;)

என் கைதானே, பரவாயில்லை. ;)
வனிதாவுக்கும் அறுசுவைக்கும் நன்றி @}->--

27 comments:

  1. மயில் வாகனம் டிசைன் அருமை இமா< எனக்கு ரொமப் பிடிக்கும்,. எப்போதும் மருதாணி கோன் வீட்டில் ஆனால் டிசைன் மட்டும் நான் நினைப்பது தான். இரவு வைக்கனும் என்று நினைத்தால் கூட பேய் மாதிரி நடு ராத்திரில எழுது வைத்து கொள்வேன், ஆனால் இபப் முடியல,

    ReplyDelete
  2. சட்டென்று ஓடிவந்து பின்னூட்டம் கொடுத்துட்டீங்க ஜலீ. சந்தோஷமா இருக்கு நீங்க வந்தது. நீங்க எல்லாம்தானே இதுக்கு இம்ப்ரஷன். ;)

    ReplyDelete
  3. இமா!

    மயிலும் அதனருகில் ஸ்டைலாக வரைந்திருக்கும் மயிலிறகும் உன்மையிலேயே ரொம்பவும் அழகாக இருக்கிறது!

    ReplyDelete
  4. நல்லா இருக்கு இமா.நானும்தான் டிரை பண்னுகிறேன்.சுத்தம்

    ReplyDelete
  5. நாம நமகே டிஸைன் பண்ணும்போது இதுக்கு பொருமை ரொம்ப முக்கியம்.

    //(இது ப்ளாஷ் போட்டு எடுத்தேனா, போடாமல் எடுத்தேனா என்பது இப்போது நினைவில் இல்லை. ;) )//

    இல்லை.இருந்தா க்ளார் அப்படியே தெரியும்.


    படமும் , டிஸைனும் அழகு.

    ReplyDelete
  6. மனோ அக்கா, நீங்கள் எல்லாம் வந்து பாராட்டுவது... என்னவென்று சொல்ல! எதிர்பார்க்கவில்லை. ;) உண்மையிலேயே வெகு சந்தோஷமாக இருக்கிறது. ;) மிக்க நன்றி.

    ~~~~~~~~~~

    சும்மா சொல்லாதீங்க. ;) நீங்க வீட்ல போடுவீங்க இல்ல ஸாதிகா! எங்களுக்குத் தான் இதெல்லாம் புதுசு.

    ~~~~~~~~~~

    நன்றி ஜெய்லானி. நீங்க வந்து ஃப்ளாஷ் பற்றி சொல்லுவீங்க என்று தெரியும். ;)
    //நாம நமகே டிஸைன் பண்ணும்போது இதுக்கு பொருமை ரொம்ப முக்கியம்// கூடவே, தட்டப்படும் கதைவையும் அடிக்கும் போனையும் கவனிப்பதற்கு வீட்டில் ஒரு ஆளும் முக்கியம். ;)

    ReplyDelete
  7. பிரமாதமா இருக்கு... கலக்குங்க....

    ReplyDelete
  8. Good Try Immamma =))

    ReplyDelete
  9. திடீர்ணு காணாமப் போறீங்க, திடீர்ணு வரீங்க. ;) தாங்க்ஸ் அண்ணாமலையான். ;)

    ~~~~~~~~~~

    தாங்க்ஸ் அனாமிகா =))


    ~~~~~~~~~~

    தாங்க்ஸ் இர்ஷாத். ;)

    ReplyDelete
  10. இதுக்கெல்லாம் நான் ஏமாற மாட்டேன்:), கையைக் கழுவியபின் படம்போட்டுக்காட்டோணும் அப்போதான் நான் நம்புவேன் மருதாணி அழகுதான் என.... ஆனாலும் அழக்காக வரைந்திருக்கிறீங்க....

    ReplyDelete
  11. imaa amma super super super......

    ReplyDelete
  12. அழகாயிருக்கு இமா!!

    ReplyDelete
  13. mail... sorry, mayil - on da way Athees ;))

    tkz Prabha & Menaka. ;)

    ReplyDelete
  14. அழகாயிருக்கு இமா

    ReplyDelete
  15. இமா... முன்னேற்றமா...???!!!! சும்மா சொல்லக்கூடாது எக்ஸ்பர்ட் மாதிரி ரொம்ப அழகா வரைந்திருக்கீங்க. ஹென்னா கோன்'அ பேனா பென்சில் மாதிரி நல்லா ஹேன்டில் பண்ணிருக்கீங்க. சூப்பர்!!!! ரொம்ப சூப்பர். கலக்கிட்டீங்க. :)

    ReplyDelete
  16. சூப்பர்ப் டிசைன்...அருமையாக இருக்கின்றது...

    ReplyDelete
  17. இமா, நல்லா இருக்கு. நேற்று என் மகனின் ஸ்கூலில் ஒரு பெண் எனக்குப் போட்டதை விட அழகா இருக்கு. அந்தப் பெண்ணுக்கு வீடு போகிற அவசரம் என் கையில் போட்டு பழகியது போல் இருக்கு. அதை போட்ட பின்னர் தான் சொன்னார் 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும் என்று. நான் ஒற்றைக் கையால் கார் ஓடி கஷ்டப்பட்டு வீடு வந்து சேர்ந்த கதை ... ம்ம் நினைக்கவே அழுவாச்சியா வருது.

    ReplyDelete
  18. ஒரு நாளைக்குக் கோலமும் போட்டுப் பார்ப்பதாக இருக்கிறேன் சாரு. ;) நன்றி. ;)

    ~~~~~~~~~~

    என் மானசீக குரு வந்தாச்சு. ;) வாங்கோ, வாங்கோ, வனிதா வில்வராணி முருகன் அவர்களே!
    இதுக்கெல்லாம் உங்க வாயால பாராட்டுக் கேட்டாதான் சந்தோஷமே. நெக்ஸ்ட் டைம் இன்னும் நல்லா போடுவேன். ;)

    ~~~~~~~~~~

    மிக்க நன்றி கீதா. ;)

    ~~~~~~~~~~

    பார்த்தேன் வாணி. குட்டிப் பெண்தானே அவர். அதுவும் அழகாகத் தான் இருக்கிறது. இங்க வாங்கோ, போட்டு விடுறேன். ;)
    என் கையில் போடப் போடக் காய்ந்து போகிறது. நடு நடுவே நனைத்துக் கொண்டே போவேன். மெல்லிய கோடு என்பதாலா, என் உடல் வாகா என்று தெரியவில்லை. நனைத்து விடாவிட்டால் பற்றுவதும் இல்லை. ;(
    //ஒற்றைக் கையால் கார் ஓடி கஷ்டப்பட்டு வீடு// வந்துட்டீங்க தானே! ;)

    ReplyDelete
  19. ///இதுக்கெல்லாம் நான் ஏமாற மாட்டேன்:), கையைக் கழுவியபின் படம்போட்டுக்காட்டோணும் அப்போதான் நான் நம்புவேன் மருதாணி அழகுதான் என...//

    சும்மா சொல்லக்கூடாது இமா.. அதீஸ் ரொம்பவே ஷார்ப்.. சந்தனா மாதிரியே :)))))))

    ReplyDelete
  20. //அப்போதான் நான் நம்புவேன் ...// அதெல்லாம் சரிதான். கட்டாயம் மருதாணி அழகுதான் என சொல்லுவீங்க. கை அழகில்லை என்று சொல்லிட்டீங்க என்றால் என்ன பண்றது! அதான் யோசனையா இருக்கு. ;(

    ReplyDelete
  21. நல(இ)மா. ரெம்ப நல்லா இருக்கு. sorry. late.

    ReplyDelete
  22. tkz Ammulu. ;) Late aaka vanthaalum latest aaka vanthu solreengkal. ;)

    ReplyDelete
  23. hio hio..

    nalla eruntha kaigalai eppdi kirukki vachutangaley..

    pavam neenga...

    nail polish suppera erukku ima..kirr.

    nice one..

    surya

    ReplyDelete
  24. பூஸ் 'சீயா மீயா' சொல்லும்.
    பப்பி 'வவ் வவ்'.
    எந்தப் பிராணி 'ஹியோ ஹியோ' என்று கத்தும்!! யாராவது தெரிந்தவர்கள் உதவுங்களேன்ன்ன். ;(

    ReplyDelete
  25. நல்ல டிசைன், அழகா போட்டு இருக்கிங்க இமா. முடிந்தால் இதை பாருங்கள்....... http://enmanadhilirundhu.blogspot.com/2009/11/blog-post_28.html

    ReplyDelete
  26. பார்த்தேன். ரசித்தேன். அழகாகப் போட்டு இருக்கிறீர்கள் ப்ரியா. சூபர்ப். ;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா