Wednesday 28 April 2010

பத்து நிமிடம் முன்பாக எழுந்து பார்த்த போது...


பத்து நிமிடம் முன்பாக எழுந்து பார்த்த போது...

தூங்கப் போகுமுன் இப்படித்தான் இருந்தார்.
இதற்கு மேல் வீட்டினுள் இருந்தால் காலையில் அடுப்பில் உட்கார்ந்திருப்பார். அல்லது தரையில் யார் காலிலாவது மிதி பட்டால் என்று...

யன்னல் வழியே வெளியே தெரிந்த தொட்டிச் செடியில் ஏற்றிவிட்டேன்.

கையில் மீந்த கோது இது. 

இரண்டு நாள் முன்பாக வந்தவர் இவர். பாடசாலை கிளம்பும் நேரம் என்பதால் தொடர்ந்து எடுக்க இயலவில்லை. 

இன்று பின்னேரம் வந்தவர் இவர்.

நான் படுக்கைக்கு வருமுன்பு வரை இதே இடத்தில் இருந்தார். நாளைக்காலைதான் பறக்க ஆரம்பிப்பார்.

இன்று பிறந்த மற்றொருவர்.
இமா மீண்டும் படுக்கைக்குப் போகிறேன். அனைவருக்கும் நல்லிரவு. ;)

35 comments:

  1. சூப்பர் படங்கள்.எப்படி தான் இப்படி பார்த்து ரசித்து எடுக்கிறீங்க.நேரம் இன்னும் இருந்தால்......?
    நானும் இப்படி ஒரு வண்ணத்துப்பூச்சியைத்தான் தேடுகிறேன்.....
    ஸோ.. உங்களுக்கு விருது தந்தது மிகச் சரியே. ஸாதிகாவுக்கு நானும் நன்றி கூறுகிறேன். ப்.ட்.ப் இமா. glükwunsch.

    ReplyDelete
  2. சூப்பர்ப்...படங்கள் வியக்கும் விதமாக அருமையாக இருக்கின்றது...வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. so cute.....
    imma.

    nanum oru patampoochiyai erunthu erukkalamoo...

    alagana padangalum
    vilakkangalum.

    nandri
    valga valamudan
    varuthapadtha vaasippor sangam
    complan surya

    ReplyDelete
  4. Imma, very cute. Nice photos!

    ReplyDelete
  5. Vielen Dank für Ihre Komplimente lieber Ammulu.
    Ich werde Ihnen einige Schmetterlinge, wenn Sie hierher kommen.

    Ich bin mir nicht sicher, ob ich diese Auszeichnung verdienen oder nicht. Trotzdem danke. ;)

    Was bedeutet ப்.ட்.ப் bedeuten? Ich verstehe nicht, dass etwas.

    Imma

    ReplyDelete
  6. நன்றி கீதா. //அருமை// சும்மா சொல்லாதைங்கோ. ;) ஏதோ இருக்கு. ;)

    ReplyDelete
  7. so cute..... Thanks Surya. ;)

    //patampoochiyai erunthu erukkalamoo// m. ;) alakaa irunthaalum athuku vaalnaal kuraivu, ethirikal athikam. paravaayillaiyaa? ;)

    //alagana padangalum
    vilakkangalum.// mikka nanri Surya. ;)

    ReplyDelete
  8. எப்படி இமா கையிலே வைத்திருக்கிறீங்கள்? நான் ஊரில் மரத்திலே புழுவாக கண்டிருக்கிறேன், கண்ணை மூடிக்கொண்டு ஓடுவேன், ஒரு சீசனுக்கு... அப்படியே கொத்து கொத்தாக பட்டாம்பூச்சி பறக்கும், வாகனத்தில் நிறைய அடிபட்டும்விடுவினம்.... இதெல்லாம் ஊர்க்கதை, இங்கு குளிருக்கு அவை இல்லை:(:(.

    ReplyDelete
  9. ஏன் இமா அம்முலுவை கெட்ட வார்த்தையில ஏசுறீங்கள்??? பாவம் அம்முலு இஸ் அ குட் கேர்ள்......

    ReplyDelete
  10. PAVAM AMMULU..THITATHENGOO.."

    THITTAKODATHU...ENNA LANGUAGE "Vielen Dank für Ihre Komplimente lieber "

    //patampoochiyai erunthu erukkalamoo// m. ;) alakaa irunthaalum athuku vaalnaal kuraivu,(NOORU VARUSAM VALTHU ENNA PANNA POREN.)ethirikal athikam.(EPPO MATUM ENNA VALUTHAM..). paravaayillaiyaa? ;)PARAVALIAI..

    ReplyDelete
  11. தானறியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம் எண்டு அம்மா சொல்லுவா. ;) அம்முலு வந்துதான் நான் எழுதி இருக்கிறது நல்லதா கெட்டதா எண்டு சொல்லவேணும். ;)
    சொன்னாப் போல... உங்களுக்குச் சொல்ல வேணும் அதிரா. பிழையா வந்தாலும் அம்முலு தான் பொறுப்பு. அவதான் என்ட டீச்சர். ;)

    ஓம். ஊரில முருங்கை மரம் முழுக்க மஸ்க்குட்டி ஊரும். ஆனால் அங்க இருக்கிற புழுவுக்கு ரோமம் நிறைய இருக்கும் எல்லோ! இவங்கள் அப்பிடி இல்ல. எனக்கும் நினைவு இருக்கு. கார்த்திகைப் பூச்சி ஊர்வலமாப் போகும். அப்ப டைக் ஸ்ட்ரீட்ல இருந்தனாங்கள். அந்தத் தெரு நீளமும் வேற ஒண்டும் தெரியாது. எல்லாரும் தெருவில நின்று பாப்பம். அது எல்லாம் 'பட்டர்' கலர் அதீஸ். அதாலதான் அதுக்கு 'பட்டஃப்ளை' எண்டு சொல்லுறவங்களோ எண்டு நினைப்பன். ;) ஏனென்டால் அதைவிட வடிவான, வண்ணம் வண்ணமான பூச்சிகள் அங்க இருந்துது. பெரிய பூச்சிகள் எல்லாம் இருக்கும். ஆனாலும் காலப் போக்கில எல்லாம் காணாமல் போச்சுது. இங்க நான் வளர்க்கிற ஆட்கள் அங்க வடிவில்லாத பூச்சிகள் எண்ட மாதிரி இருக்கும் எனக்கு. அங்க இருக்கேக்க ஒரே ஒரு தரம் இந்த மாதிரி பளபளவெண்டு பச்சையா ஒரு கூட்டுப்புழு வேலியில தொங்கிப் பார்த்து இருக்கிறன் அதிரா. இருக்கேக்க ரசிக்கத் தெரியேல்ல. இப்ப நல்ல விஷயம் எல்லாம் காணாமலே போகுது. ;(

    ReplyDelete
  12. தாங்க்ஸ்,தாங்க்ஸ் அதிரா. நீங்கதான் என்னில கரிசனமாய் இருக்கீங்க.நான் ஏதோ என்ட கீபோர்ட் ல அடிச்சேன்.அதுதான் இந்த நாட்டு மொழியில வந்துட்டுது.அது வாழ்த்துக்கள் என்ற மீனிங்காம் என்னவர் கூறினார்.
    அதுக்காக இமா இப்படி எழுதக்கூடாதுதானே.
    உடனே பதிவைப்பார்த்துப்போட்டு உங்க‌ளுக்கு(அதீஸுக்கு)நன்றி சொல்ல ஓடோடி வந்தன்.அதற்கு பின் நிற்க கூடாதுதானே(உங்கட பழக்கம்தான்)

    ReplyDelete
  13. ஹாய் அம்முலு, ;) நலமா? ;) உங்கடவர்ட்ட இதையும் காட்டி சரியா எழுதி இருக்கிறனா எண்டு ஒருக்கா விசாரிச்சுச் சொல்லுங்கோ, ப்ளீஸ். ;) ஸ்கூல் தோழிட்ட கேட்க மறந்து போனன். நானே ட்ரை பண்ணி இருக்கிறன். (ஏதோ படிச்ச மாதிரி)

    எனக்கு இப்ப அந்த 'சைனீஸ்ல திராட்சை இலை' நினைவு வருது. ;)))

    ReplyDelete
  14. ;) நான் யாரையும் திட்டவில்லை சூர்யா. ;) அது அவங்க நாட்டு பாஷை. அவங்களுக்கு நான் திட்டவில்லை என்று நல்லாவே தெரியும். சும்மா இங்க வந்து புரியாத மாதிரி சொல்றாங்க. ;)

    பிறகு.. நீங்க எப்பிடி இருக்கிறீங்க? நலம்தானே?

    நான் சும்மா எழுதுறதை எல்லாம் இப்பிடி ஒவ்வொரு வார்த்தையாகப் பிரிச்சுப் பிரிச்சு ஆராயக் கூடாது சூர்யா, சரிதானே. ;)

    ம்... என்னை 'சிரிச்சுக் கொண்டே இருக்க வேணும்,' என்று சொல்லி விட்டு இது என்ன இப்பிடி ஒரு பதிவு???

    ReplyDelete
  15. sehr gutgeschrieben. இமா மிகச் சரியாக எழுதியிருக்கீறீங்க.இதையும் ஆரம்பித்துவிட்டீர்கள்.
    //ப்.ட்.ப்// அ(கராதி)திரா மொழி.கீப் இட் அப்.

    //PAVAM AMMULU..THITATHENGOO... // ரெம்ப thanks complan boy.

    ReplyDelete
  16. ரொம்ப நல்லா இருக்கு இமா...

    ReplyDelete
  17. இமா,
    உங்களின் வேகத்திற்கு என்னால் ஓடி வரமுடியவில்லை. எப்படியோ குறுக்கு வழியில் வந்து சேர்ந்து விடுகிறேன். அதனால் வரும் வழியில் எதையும் விட்டு விட்டால் கண்டுக்காதீங்க!
    படங்கள் அருமை. பயமின்றி தொடுகிறீர்கள்!!!!!
    பதிவுகளும் அருமை. மாற்றங்கள் பற்றி நான் வேறு ஒரு கோணத்தில் எழுத இருந்தேன்:-)
    முடியும் போது வருகிறேன் இமா. தப்பா எடுத்துக்காதீங்க!

    ReplyDelete
  18. அனிமல் ப்ளானட் பார்த்ததுபோல இருக்கிறது. எவ்வளவு அழகா, பொறுமையா படங்களை எடுத்திருக்கீங்க!

    அருமை இமா!

    ReplyDelete
  19. சூப்பர் படங்கள்;
    ஜெர்மன் பாஷை மாதிரியில்ல தெரியுது. தேங்ஸ் ஃபார் காலிங் தி காம்ப்ளிமொண்ட் டு பிரிபேர் அம்முலு.

    அர்த்தம் இதுவா ?

    ReplyDelete
  20. //உங்களின் வேகத்திற்கு// ;))) எங்கயாச்சும் என்னட்ட இருக்கிற ஒரே ஒரு ஸ்போர்ட் சர்டிஃபிகேட் கண்ணில பட்டால் எடுத்து காட்டுறன் கட்டாயம். ;) ம்.

    //மாற்றங்கள் பற்றி// எழுதுங்கோ செல்வி. விரைவில் வருமென எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  21. நல்வரவு சுந்தரா. //அனிமல் ப்ளானட்// ;))) நன்றி. ;)

    எப்பிடி இருக்கிறீங்க சாரு? விடாமல் தொடர்ந்து எல்லா இடுகைகளும் பார்க்கிறீங்க. ;) சந்தோஷம். நன்றி. ;)

    ReplyDelete
  22. //தேங்ஸ் ஃபார் காலிங் தி காம்ப்ளிமொண்ட் டு பிரிபேர் அம்முலு.// அதே....தான் ஜெய்லானி. சரியாச் சொன்னீங்க. ;)
    தேங்ஸ் ஃபார் தி சிரிப்பூ க்ரீன்பூ. தாங்க முடியல. ;))) இனிமே ப்ரிபேர்ட்டா இருக்கேன்.

    அர்த்தம்...
    காம்ளிமென்ட்ஸுக்கு நன்றி.
    இங்க வந்தா பட்டாம்பூச்சி தரேன்.

    விருதுக்கு நான் அருகதையானு தெரியலை. இருந்தாலும் நன்றி.
    ப்.ட்.ப் ? புரியலை.
    ---- இவ்ளோதான்.

    (உண்மை தெரிஞ்சுது... வலை உலகப் பெருமக்கள் எல்லாருமா சேர்ந்து இமாவை இந்த உலகத்துல இருந்தே ஓட்டிக் கலைச்சுருவாங்க. மூச்சுக் காட்டப்படாது இமா. shhh! இப்டியே மெய்ன்டெய்ன்ன்.) ;)

    ReplyDelete
  23. படங்கள் மிக அழகாக இருக்கு..

    ReplyDelete
  24. அதிரா,

    //~மிஸ்~// என்ன செவி? ;)
    ம். கூப்பிடுவினம். நான் சொல்லிருறது, அதெல்லாம் மிஸ் பண்ணிக் கன காலம் ஆச்சுது. மிசிஸ் ஸோ & ஸோ எண்டு சொல்ல வேணும் எண்டு.

    //பெயர் சொல்லி// ம்.

    //பட்டாம்பூச்சி... இறந்தபின்பும் அழகில் குறையவில்லை.// அப்பிடியே இருக்கும் எப்பவும்.

    ReplyDelete
  25. எல்லாரும் உங்க வீட்டு தோட்டதிற்கு வந்திட்டு போன பிறகு வந்திருக்கிறேனோ ! step by step படம் அருமை.இமா தெர்மொகோலில் insect box ஒன்று ரெடி செய்து அந்த அழகான வண்ணத்துப்பூச்சியை வைங்கோ,தலைப்பகுதியில் குண்டூசி குத்துங்கோ.அழகாக இருக்கு.அப்படியே இருக்க பினாஃப்தலீன் பால்ஸ் போட்டு வைங்கோ.எனக்கு ஒரு காலத்தில் இந்த insect collection hobby யாக இருந்தது.

    ReplyDelete
  26. இமா?? என்ன நடந்தது? இடம் மாறிப் பதில் போட்டிருக்கிறீங்கள் எனக்கு.....:).

    ReplyDelete
  27. Sorry Athees. I have fixed it now. Tkz. ;)

    ReplyDelete
  28. அன்பு ஆசியா,
    எப்ப வந்தா என்ன! வந்து இருக்கிறீங்கள் எண்டதுதானே பிரதானம். ;) நல்வரவு.
    கட்டாயம் செய்து வைக்கிறேன் ஆசியா. ஒரு சந்தேகம், நாப்தலீன் பட்டால் தெர்மொகோல் (white colour packing foam தானே!) உருகாதா?
    //படம் அருமை.// நன்றி. ;)

    ReplyDelete
  29. Fabulous =))You are amazing. A-W-E-D.

    ReplyDelete
  30. ;)
    Tkz Anamika.

    Going to bed now. Good night. ;)

    ReplyDelete
  31. இமா ஒண்ணும் ஆகாது,செய்து பாருங்க. ஒரு காலத்தில் நிறைய rare insects வைத்து இருந்தேன்.

    ReplyDelete
  32. பதிலுக்கு நன்றி ஆசியா. ;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா