Monday 12 April 2010

புதுமுகங்களுக்காக ஓர் இடுகை ;)

_()_ 
சமீபகாலமாக என் உலகைச் சுற்றிவரவென்று சிலர் புதிதாக இணைந்துள்ளமை தெரிகிறது. ;) பின்தொடராமல் பின்னூட்டம் கொடுப்போரிலும் சில புதுமுகங்கள் தென்படுகிறார்கள். அனைவருக்கும் நல்வரவு.
உங்களுக்காக விசேடமாக இந்த அன்பளிப்புகள், ஆளுக்கொரு கீவி கடிகாரம் எடுத்துக் கொள்ளுங்கள். ;)
சரி, கடிகாரத்தில் என்ன விசேஷம் இருக்கப் போகிறது! எல்லாக் கடிகாரங்களையும் போல் மணி காட்டப் போகிறது, அவ்வளவுதானே!.. என்கிறீர்களா!
இவை விசேடமானவை. பழைமை! வாய்ந்தவை. ;) புதுமையானவையும் கூட. 'காலம் பொன்னானது' இவை ஆனது சதுப்பு நிலத்துள் புதையுண்டு கிடந்த 40,000 - 45,000 வருடங்கள் பழைமை வாய்ந்த கௌரி (Kauri ) மரங்களால். நிறச்செறிவு கூடியவை வயது அதிகமான மரங்கள்.
 
ஃபஙரெய் (Whangarei) -ல் அமைந்துள்ள   இந்தத் தொழிற்சாலையைக் எப்போது கடக்க நேர்ந்தாலும் தவறாது ஒருமுறை நுழைந்து பார்த்துவிடுவேன். அப்படியே தொடர்ந்து வரும் நாட்களில் யார் யாருக்கு எல்லாம் அன்பளிப்புக் கொடுக்க வேண்டி இருக்கிறது என்று மனதில் ஒரு கணக்குப் போட்டுப்பார்த்து முடிந்ததை வாங்கிக் கொள்ளுவேன். ஆசைப்பட்டாலும் எனக்கென்று வாங்கிச் சேர்க்க முடியாது. ;) பிறகு என் வீடு 'கௌரி மியூசியம்' மாதிரி ஆகிவிடும். ;) சென்ற ஞாயிறன்றும் போயிருந்தேன்.

நீங்களும் ஒரு நடை உள்ளே போய்ப் பாருங்கள். அங்கு ஒரு அழகு பப்பியும் இருக்கிறார். எனக்கு அங்குள்ள 'இந்தியா' கடிக்காரம் பிடிக்கும். 'மியா' பெயரிலும் ஒன்று இருக்கிறது. ;)

மேற்கொண்டு என் படங்கள் பேசும். ;) இப்போதைக்கு இவை.
 
தொழிற்சாலையின் முன்பாக சேமிக்கப் பட்ட கௌரி அடிமரங்கள். வலது புறம் நிற்பது ஒரு கௌரி மரக்கன்று.
 
மீன்கொத்திக் குடும்பம். சுற்றிலும் உள்ளவை கௌரிமரப் பிசின். இதைக் கொண்டுதான் எல்லாவற்றையும் வார்னிஷ் பண்ணி இருக்கிறார்கள்.
 
எரியும் மெழுகுவர்த்தியும் 'ஸ்னாப்பரும்'


Fan Tail
-இமா 

16 comments:

  1. வாவ்.... அருமையான தகவல். தகவலுக்கும் படங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  2. //இவை ஆனது சதுப்பு நிலத்துள் புதையுண்டு கிடந்த 40,000 - 45,000 வருடங்கள் பழைமை வாய்ந்த கௌரி (Kauri ) மரங்களால். நிறச்செறிவு கூடியவை வயது அதிகமான மரங்கள்//

    இத்தனை வருஷமாய் பெட்ரோல் ஆகாம இருப்பது ஆச்சிரியம் , தகவலுக்கு நன்றி.

    //ஆசைப்பட்டாலும் எனக்கென்று வாங்கிச் சேர்க்க முடியாது. ;) பிறகு என் வீடு 'கௌரி மியூசியம்' மாதிரி ஆகிவிடும். ;)//

    இப்பவும் உங்க வீடு (பிகாசோ பட ஆல்பம் , ப்ளாக் ) மியூசியம் மாதிரிதான் இருக்கு.

    ReplyDelete
  3. மூன்றாவது படத்தை விட்டு கண்கள் அகல மறுத்து விட்டது.என்ன அழகாக படம் எடுத்து இருக்கின்றீர்கள்.அற்புதம்.

    ReplyDelete
  4. அட தவறுதலாக சொல்லி விட்டேன்.நான்காவதுதான்

    ReplyDelete
  5. imaa... romba azhagaana padangal, ubayoogamaana pudhidhaana thagaval. :) velaippaadu aththanai neerththiya pannirukkaanga. mm... vaangura alavukku naan sambaathikkumboodhu andha factory ulla nuzhaiyalaam. :( - Vanitha

    ReplyDelete
  6. உங்கள் புளொக்கை ஒரு மூன்டு நாலு கிழமைக்கு முதலேயே படிச்சு முடிச்சுப்போட்டன் இமாம்மா. எப்படி கொமன்ட் போடாமல் விட்டிட்டன் என்டு தெரியேலே. போட்ட ஞாபகம் இருந்தது.

    பூனையை வைத்து ஒரு படைப்பே படைச்சிட்டியள். அழகான கடிகாரங்கள். நியூசிலாந்து வர விருப்பம் தான். அழகான ஊர் என்டு கேள்விபட்டனான். பாப்பம்.
    எனக்கு கடைசிக்கு முதல் படம் பிடிச்சு இருக்கு. உண்மயச் சொல்லோனும் என்டால் எல்லாமே நல்லாத் தான் இருக்கு. நீயூசிலாந்து போனால் கட்டாயமாக இந்த இடத்துக்குப் போவன்.

    உந்த மரம் உக்க மாட்டுதே? பிசினால் மட்டும் இந்த நிறம் வருகுதே ஆ?

    மட்டது, கிவி மணிக்கூட்டுக்கு நன்றி இமாம்மா.

    ReplyDelete
  7. //ஜெய்லானி,
    கடைசி வரி - காம்ப்ளிமென்டா, இல்லையா!! ஒரே கன்ஃப்யூஷனா இருக்கு. ;)//


    உங்களுடைய போட்டோக்களை பார்க்கும் போது ஒரு மியூசியம் உள்ளே போன உணர்வு வருது. அதாவது நல்ல ரசனையா எடுத்து இருக்கீங்க .

    ReplyDelete
  8. உங்கள் போட்டோ அல்பங்களைப் பார்த்தேன் இமாம்மா. எப்படி கொமன்ட் போடுறது என்டு தெரியேல்ல. உங்கட தோட்டம் நல்ல வடிவா இருக்கு. பாத்துக்கொண்டே இருக்கலாம் மாதிரி இருக்கு. எப்படி பராமரிக்கிறியள்.

    ReplyDelete
  9. அனாமிகா,

    //எப்படி கொமன்ட் போடாமல் விட்டிட்டன் என்டு தெரியேலே.//
    அதுக்கென்ன, பரவாயில்ல . நீங்கள் பின்தொடருறீங்கள் எண்டு எனக்குத் தெரியும்தானே.

    //பூனையை வைத்து ஒரு படைப்பே படைச்சிட்டியள்.// ;) காணேல்ல ஆள. ;) அங்க புதுவருஷம், பிறந்தநாள் பாட்டி என்று பிஸி போல. ;)

    //நீயூசிலாந்து போனால் கட்டாயமாக இந்த இடத்துக்குப் போவன்.// மிஸ் பண்ணாதைங்கோ. வடிவான இடம்.

    உக்காமல் இருந்திருக்குதே இவ்வளவு காலமும். வைரமான மரம்தான். டெக்க்ஷரும் நல்லா இருக்கும். நிறம் - மரத்திட வயதின் நிறம். (சாதாரண சமையல் எண்ணெய் பூசினாலே இதுக்குக் காணும்.)

    இந்தப் பிசின் தான் ஆரம்பத்தில 'வானிஷ்' செய்யப் பயன்படுத்தி இருக்கிறாங்கள். இதை உருக்கி டேபன்டைன் அல்லது மண்ணெண்ணெய் கலந்து வானிஷ் செய்யிறதாம். மணிக்கூடுகளில தெரியிற பளபளப்பு அதுதான்.

    தொடர்புகளைத் தட்டிப் பார்த்தனீங்களோ!

    ReplyDelete
  10. இமா, படங்கள் அழகு. திரு. வாணியும் நேற்று படங்கள் பார்த்தார். கடைசி 2 படங்களும் அழகோ அழகு.
    "பழைய முகம்"
    வாணி

    ReplyDelete
  11. //காணேல்ல ஆள. ;) அங்க புதுவருஷம், பிறந்தநாள் பாட்டி என்று பிஸி போல. ;)//

    ஹிஹி. அப்படி எல்லாம் இல்லை இமாம்மா. நாலு நாளா வீசிங் என்ட சாட்டில ஒரு வேலையும் செய்யாமல் ஒன்லைன்லையே இருந்திட்டன். இன்டைக்கு வருஷம் பிறந்த நேரம், கம்பசுக்குப் போவம் என்டு வெளிக்கிட்டன். (பாத்தியளே, நல்லதுக்கு காலம் இல்லை. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. )

    வீட்ட போன பிறகு தான் சக்கரைப் பொங்கலும் பால் சோறும் செய்வம் என்டு நினைச்சிருக்கிறன். இரவு தான் எங்களுக்கு பொங்கல்.

    //தொடர்புகளைத் தட்டிப் பார்த்தனீங்களோ!//
    கச்சான் சுத்தி வார பேப்பரையே விடாத பிசாசு நான். வாசியாமல் விடுவனே. ;))

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் இமாம்மா.

    (அங்கிள் கேக் களவெடுக்கிற படம் கிளாஸ்.)

    ReplyDelete
  12. ரொம்ப நல்லா இருக்கு இமா

    ReplyDelete
  13. மியா.. பெயரில் இருப்பதைத்தேடினேன் கிடைக்கவில்லை எனக்கு.....

    ReplyDelete
  14. எல்லாமே அழகு இமா.. ரசித்தேன் ரசித்தேன்.. அப்படியே முடிஞ்சா எனக்கும் ஒன்னு வாங்கி வையுங்கோ.. :))))))))

    ReplyDelete
  15. அந்த tanfail ரெம்ப அழகு. இவை பற்றி என் கசின் கூறினார். ஆனால் இவ்வளவு அழகாக இருக்கும் என நினைக்கவில்லை. இந்த மாதிரியான விடயங்களை எழுதுங்கள்.பட‌த்துடன். நன்றி பகிர்ந்தமைக்கு.

    ReplyDelete
  16. வணக்கம் அம்மா...

    ரொம்ப நல்லா இருக்கு எல்லாமே...

    இங்கு ரசனையுடன் வாழும் ஆட்கள் குறைவு... அதுவும் கலை ரசனையுடன் என்றால் கேக்கவே வேண்டாம்...

    கோல்கொண்டா போயிருந்த அப்போ... அங்க உள்ள clapping hall பார்த்து ரொம்ப ஆச்சர்யம்... நானும் சிவில் படிப்பு என்பதால் ரொம்ப ஆர்வமாக பல தகவல்களை தேடி பார்த்தும் தெரிந்து கொண்டேன்...

    அப்போது கூட வந்த பாதி பேர்... என்னது இது... இடிஞ்சு போன கட்டடத்தை இப்படி பாக்குறாங்க.. என்று சொன்னாங்க...

    எதுக்கு இதை சொல்றேன் என்றால்... உங்களுக்கு கலை ரசனை அதிகம் அம்மா...

    நல்லது அம்மா...

    என்றும் உங்கள் அருண் பிரசங்கி

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா