இது என்ன பானம்!! ;)
அட! உள்ளே ஒரு கல்லு!
;)
1) முட்டையை நன்கு கழுவி, அவித்து எடுத்தேன்.
2) 200 ml நீர் + 1/2 ts கருப்பு ஃபூட் கலர் + 1 ts வினாகிரி கலந்து வைத்தேன்.
3) முட்டையைத் துடைத்து...
4) ஒரு மெழுகுவர்த்தியின் பின் புறத்தால் முட்டையில் எழுதி...
5) கலந்து வைத்த நீரில் போட்டேன்.
உடைத்துச் சாப்பிடுவது உங்கள் வேலை. ;)
;)
1) முட்டையை நன்கு கழுவி, அவித்து எடுத்தேன்.
2) 200 ml நீர் + 1/2 ts கருப்பு ஃபூட் கலர் + 1 ts வினாகிரி கலந்து வைத்தேன்.
3) முட்டையைத் துடைத்து...
4) ஒரு மெழுகுவர்த்தியின் பின் புறத்தால் முட்டையில் எழுதி...
5) கலந்து வைத்த நீரில் போட்டேன்.
உடைத்துச் சாப்பிடுவது உங்கள் வேலை. ;)
//ஒரு மெழுகுவர்த்தியின் பின் புறத்தால் முட்டையில் எழுதி//
ReplyDeleteஎப்படி ? புரியலயே?
கஷ்டமா இருக்கும் என்று தோணுதா ஹுசேன்! அப்ப, ஒரு யூஸ் பண்ணின கேக் காண்டல் எடுத்துக்கங்க. இல்லாட்டி... ஒரு வைட் க்ரையான். கொஞ்சம் கத்தியால சுரண்டி கூராக்கி எடுத்தா கோடு கட்டாயம் மெல்லிசா வரும். ட்ரை பண்ணிப் பாருங்கோ.
ReplyDelete:)) நீங்க கண்டுபிடிச்சதா இந்த முறை??
ReplyDeleteஓ, க்ரேயானால எழுதிட்டு,அப்புறம் சொல்யூஷன்ல போட்டா, க்ரேயான் கோடு உள்ள இடம்தவிர மத்த இடங்களில் நிறம் வரும்; காண்ட்ராஸ்டாக டிஸைன் தெரியும்; அதானே?
ReplyDeleteஇப்படி விவரமாகச் சொல்லாமல், ஒரு வரியில் சொன்னாவெல்லாம் எனக்குப் புரியுமளவு கிட்னி இல்லைன்னு இவ்வளவு நாளாகியும் உங்களுக்குத் தெரியலை பாருங்க!! ;-))
சிரிக்காதிங்க சந்தனா. ;)) (என்னமோ, எனக்கு வந்து சேருறது எல்லாம் என்னை மாதிரியே இருக்கு. என்னைப் பார்த்து வேற சிரிக்குதுங்க. ஹ்ம்.)
ReplyDeleteபோன வருஷம் இதே காலத்தில் ஸ்கூல்ல ஒரு டீச்சர், ஒரு ஸ்பெஷல் 'கிட்' வாங்கி வச்சு, எனக்கு இதில் எல்லாம் இண்டரெஸ்ட் இருக்கே என்று அதை எனக்குக் கொண்டு வந்து காட்டி பெருமைப்பட்டுக் கொண்டு இருந்தாங்க. அதன் விலை அநியாயமா இருந்துது. ஸ்பெஷல் இங்க், ஸ்பெஷல் கிண்ணம், ஸ்பெஷல் கம்பி வளையம், ஒரு ஸ்பெஷல் chalk, எல்லாம் 'safe to eat' ;) என்று உத்தரவாதம் வேறு.
அன்று மாலை வீட்டில் இப்படி முயன்று பார்த்தேன். சக்சஸ். ;) மறுநாள் வகுப்பு எடுத்தேன். கூடவே அந்தத் தோழியும் இருந்தார். அதே விடயம், ஆனால் மேற்சொன்ன ரெசிபியில். 'கேக் கான்டல்' 'safe to eat' தானே. இதற்கெல்லாம் செலவழிப்பானேன்! போக, முழு வகுப்பிற்கும் எத்தனை 'கிட்' என்று வாங்குவது!
அந்தக் கம்பனிக்காரர்கள் இதைப் பார்க்காமல் இருக்கக் கடவார்களாக. ;))
~~~~~~~~~~~
க்ரையானை விட மெழுகுவர்த்திதான் நல்லது ஹுசேன். விளக்கமா எழுதி என் நேரத்தை மிச்சப் படுத்தியமைக்கு நன்றி. ;)