Saturday 3 April 2010

ஒரு வேண்டுகோள்



Taro Leaves
ஃபிஜியைச் சேர்ந்த என் சக ஆசிரியத் தோழியிடமிருந்து வேர்களைப் பெற்று இந்தத் தாவரத்தை வளர்க்க ஆரம்பித்தேன். சமைத்தால் சட்டென்று கரைந்து விடும் தன்மையானது இது.

எனக்கு இதை எப்படிச் சமைப்பது என்று தெரியவில்லை. இலங்கையில் கண்டது இல்லை. என் மனதிற்குத் தோன்றுகிறபடி எந்தச் சமையலிலும் சேர்த்துக் கொள்கிறேன். ;) சுவையாக இருக்கிறது.

தெரிந்தவர்கள், அனுபவசாலிகள் இந்தக் கீரையை சமைப்பதெப்படி என்று சொல்லி உதவ முடியுமா!!
நன்றி
~~~~~~~~~~~~~~~~~~~~~
பி.கு 
எனக்கு 'பாலுசாமி' குறிப்பு வேண்டாம். ;) மச்சம், மாமிசம் சேர்க்காத குறிப்புக் கொடுத்தால் நல்லது. இந்திய, மலேசிய, சிங்கப்பூர்  (& UAE) தோழமைகள் யாராவது உதவ முன்வருவீர்கள் என்ற நம்பிக்கையில் 
- இமா

17 comments:

  1. இமா நேக்குத் தெரியும்... ஆனால் குறிப்புச் சொல்லித்தரமாட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இதுக்குப் பெயர் “யானைக்காது” ஆக்கும்.

    ஈஸ்டர் நாளில கேட்கிற கேள்வியைப் பாருங்கோ... முறைக்கப்படாது.. இது எனக்குள்நானே பேசிக்கொண்டுபோகிறேன்.. கவனிக்கவும் அதுக்காக லூஸல்ல....

    ReplyDelete
  2. இமா, சுண்டல் செய்யலாமே. வெங்காயம், ( விரும்பினால், டயட்டில் இல்லாவிட்டால் தேங்காய் பூ சேர்க்கலாம் ), மிளகாய் வதங்கியதும் இந்த இலையை போட்டு உடனே இறக்கி விடுங்கள். உப்பு இறக்கிய பிறகு சேருங்கள்.
    இதை படித்து விட்டு திட்டப்படாது. ஏதோ உங்கள் இலை வீணாகமல் ஐடியா சொன்னேன்.

    யார் 'பாலுசாமி'???????

    ReplyDelete
  3. அப்போ! இது மரக்கறி இல்லையா அதிரா!! ;(
    இனிமேல் யாரும் 'காதைக் கொண்டு வாங்கோ' என்றால் இதைத் தூக்கிக் கொடுத்து விடலாம் போல. ;)

    //ஈஸ்டர்// நாளைதான். இது எப்போதோ ஒரு நாள், ஒரு முயற்சியாக, 'இந்தக் குறிப்பிட்ட தேதியில்' வெளியிடும் படியாக சேமித்து வைத்த இடுகை. ;) வேலை செய்து இருக்கிறது. ;)

    ~~~~~~~~~~

    //டயட்டில்// கர்ர்ர்ர். யாரைப் பார்த்து என்ன சொல்கிறீர்கள், வானதி அவர்களே!! ;)

    ஒரு செக்கன், என்னை 'வெங்காயம்' என்று சொல்லிப் போட்டீங்கள் என்று நினைச்சன்.

    ஐரிஸ் ஃபோல்டிங்-ல எல்ஸ் போட்ட பின்னூட்டத்தில இருந்து 'சுண்டல்' நினைவாகவே இருக்கிறீங்கள் போல. ;)

    நானும் நீங்கள் சொன்ன மாதிரி 'அது', 'இது', 'பருப்பில் போட்டு' எல்லாம் சமைத்துப் பார்த்து இருக்கிறேன். யாராவது ஒழுங்காக ஏதாவது குறிப்புக் கொடுப்பார்கள் என்று பார்த்தேன். ;)

    ~~~~~~~~~~

    //யார் 'பாலுசாமி'???????// ;)))))

    எங்கள் அயல் நாட்டவர்.

    இங்கு ம்யூசிக் கிளாசில் இருந்து ஒரு பாடல் காதில் வந்து விழும். அதிலிருந்து நான் முணுமுணுக்கும் ஓர் வரி, 'லெய்லலெய்லோ... லெ பாலுசாமி' என்கிற மாதிரி வரும். நானாகவே இது சாமோவன் மொழி என்று தீர்மானித்து தோழி 'ஸீனா'விடம் விசாரித்ததில், அது கார்ன் மீட் + தேங்காய்ப் பால் + டாரொ இலை கொண்டு சமைக்கும் ஓர் உணவுப் பதார்த்தம் என்று தெரியவந்தது. சுவையாக இருக்குமாம். சொல்லும் போதே அவர் கண்ணில் சுவை. ;)

    ReplyDelete
  4. இமா.. அப்படியே பச்சையாக சாலட் மாதிரி முயற்சி பண்ணிப் பாருங்கோ.. இல்லாட்டி, தட்டுக்கு பதிலா இதிலேயே பரிமாறலாம் :))

    சமைத்தால் கரையுமென்றால், கீரைக் கடைசல் மாதிரி பண்ணிப் பாருங்கோ..

    சுண்டல் செய்தால் பேப்பரை மறக்காமல் எங்க வீட்டுக்கு அனுப்பி வையுங்க :))

    ReplyDelete
  5. இனிய ஈஸ்டர் இமா.. முட்டையாரை அழகு படுத்திப் பாத்திருப்பீங்கள் தானே? கெதியா படங்களை வெளியிடுங்கோ..

    ReplyDelete
  6. சாலட் - தெரியாத கீரை எல்லாம் சமைக்காமல் சாப்பிடப்படாது. சிலது சமைக்காமல் சாப்பிட்டால் வயிற்றை வலிக்கும்.

    தட்டு ஐடியா ;( இது அந்த சூடு கூட தாங்காது போல.

    //கடைசல்// உங்க ரெசிபி கொடுங்க சந்தனா. சீரியஸா கேக்குறேன். அனுப்புங்க.

    //சுண்டல்// ம் ;)

    முட்டை இப்பதான் அவியுது. ஆக்கப் பொறுத்த நீங்கள் ஆறப் பொறுக்க மாட்டீங்களோ!

    ReplyDelete
  7. It was sweet L's. ;) tkz 4 ur wishes. ;)

    ReplyDelete
  8. //இந்திய, மலேசிய, சிங்கப்பூர் தோழமைகள் யாராவது//

    யூ.ஏ.இ.காரங்களைக் கேக்காததினால், நான் சொல்லமாட்டேன்!!

    ReplyDelete
  9. இமா,சேம்பு-ன்னு சொல்லுவாங்களே,அந்த ப்ளான்ட்டா இது? சேம்பு தண்டு வைச்சு ஏதோ சமையல் செய்வாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்..இலைகள்...ம்ஹும்,தெரில!

    சந்தனா சொன்ன மாதிரி, பரிமாறி சாப்பிட வேணா யூஸ் பண்ணலாம்..அந்த சூடே தாங்காதா என்ன? ரொம்ப டெலிகேட்டா இருக்குங்க..பாவம்,அதை அப்படியே விட்டுடுங்க!! ஹி,ஹி!!

    ReplyDelete
  10. மகி, //சேம்பு// தெரியாது. இது கீழே கிழங்கு இருக்கும், பெரிதாக 'செம்பு' மாதிரி இருக்கும். ;) அதைக் கருணைக் கிழங்கு பொரிப்பது போல் பொரிப்பேன். ;P பொரித்துக் குழம்பு வைப்பேன். உப்புப் போட்டு அவித்துச் சாப்பிடுவேன். எல்லாவற்றையும் விட சுவை பேக் பண்ணினால். (yummy yam.) (இது Samoan & Tongan ஸ்பெஷல்.)

    ஆனால் தொடர்ந்து இலைகளைப் பிடுங்கினால் கிழங்கு பெரிதாகாதாம், தோழி சொன்னார். இங்கு இலைகள் பெரிய பைகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. சீனர்களின் கடைகளில் ஃப்ரோசனாகவும் கிடைக்கிறது. (வாழை இலையையும் ஃபரீஸ் பண்ணி விற்கிறார்கள்!! என்ன செய்வார்கள் என்று தெரியுமா யாருக்காவது? ) தண்டு (stem of da leaf) சமைப்பதாகத் தெரியவில்லை. விசாரிக்கிறேன்.

    //பாவம்,அதை அப்படியே விட்டுடுங்க!! ஹி,ஹி!! // க்ரர்ர்ர்ர்
    ஊரில் ஒரு தோழி, விவசாய ஆசிரியை. ஒரு நாள் பேச்சுவாக்கில் 'என் ஆர்கிட் பூக்க மாட்டேன் என்கிறதே, எதாவது யோசனை சொல்லுங்கள்' என்றால் 'தூக்கித் தூரப் போடு' என்றார். அது போல இருக்கிறது உங்கள் கதை. ;) ம்.. எல்லோரையும் மிஸ் பண்ணுகிறேன். ;(

    ReplyDelete
  11. இமா,
    இதை சேம இலைன்னு சொல்வாங்க. புளி போட்டு கடைவாங்க. தண்டையும் புளிப்பச்சடி செய்வாங்க. சேப்பங்கிழங்கு வறுவல் நல்லா இருக்கும். கடைசல் மற்றும் பச்சடி ரெசிபி தெரியும்:-) இலையில் சில இடங்களில் டிபன் கட்டுவார்கள். பூவை இந்த இலையில் கட்டி தருவார்கள்.
    வாழை இலை எனக்கு தெரிந்து சாப்பிட மட்டும் தான் பயன்படுத்துவார்கள். ஒரு வகை கொழுக்கட்டையை அதில் மடித்து செய்வார்கள். கேரளாவில் மீனை வாழை இலையில் சுருட்டி செய்வார்கள்.

    ReplyDelete
  12. So, this is சேப்பங்கிழங்கு. ;) I'l find da recipes now. tkz 4 ur help Selvi.

    ReplyDelete
  13. 4 vengayam eduthukollavum
    1 poondu. thundu thundai narukki kollavum..
    2 tomotoo..
    konjam kariveppillai..
    sirathalavu uppu devaikku yerpa.

    mudalil vanoliyai adupil vaikkavum
    ennaivitu merkonda anithium varukkavum.koda ungal elai thalaikalai potu siruthalu thanivttu erukkavum..

    soodana kerai rasam ready..eppudi.

    ethuku enna peru endru ketapidiathu.
    samithu parkkavum.

    ReplyDelete
  14. சூர்யா, இப்ப இமாவை வருத்தப் பட வைக்கிறீங்க... ரொம்பவே. ;(

    நீங்க உண்மையாவே எனக்கு நல்லது பண்ண நினைக்கிறீங்களா! சந்தேகமா இருக்கு. ஏற்கனவே கை கால்லாம் தடிச்சுப் போய் இருக்கு. இதுல தக்காளி ஐடியா!

    போதாததுக்கு இருக்கிற ஒரே ஒரு ரேடியோவையும் அடுப்பில வைங்கறீங்க. வீட்டுல நியூஸ் கேக்குறது எப்புடீ!!! ;( அதுக்கு வீட்டுல கிடைக்கிறதுல மீதியும் தடிச்சுருவேன். ;( நீங்க புது ரேடியோ வாங்கித் தரீங்களா!! லேட்டஸ்ட் மாடல்.

    //ennaivitu merkonda anithium varukkavum.// இமாவை என்ன மக்கு என்று நினச்சீங்களா!!! நீங்க சொன்னாலும்... சொல்லாட்டாலும்... உங்களை விட்டுட்டு மீதியைத் தான் வறுப்பேன். ;)

    //எப்புடி// இமா தங்ளிஷ்ல கொஞ்சம் வீக்கு சூர்யா. ;( கஷ்டப் பட்டு ஒரு மாதிரி கெஸ் வர்க்லாம் பண்ணினதுல காம்ப்ளான் சூர்யா 'சூடான கீரை ரசம்' ரெசிபி கொடுத்து இருக்கிறது தெளிவாப் புரிஞ்சுது. ஆனால் என் குட்டி மூளைக்கு //ketapidiathu// என்னவென்று புரியவில்லையே!!

    உதவ முனைந்த தங்கள் நல்லெண்ணத்துக்கு கோடானு கோடி நன்றிகள். ;)

    ReplyDelete
  15. ஹஹஅஹா

    ketapidiathu// ---கிடைப்பது (am sorry )-

    ReplyDelete
  16. என்ன // ஹஹஅஹா// !!!!???? ;(((((((((((((((

    இப்போதும் புரியவில்லையே!! ;)) கொடுமையாகவிருக்கிறது பிள்ளாய். என் மேல் என்ன கோபமோ!! ;))

    //ethuku enna peru endru ketapidiathu.//
    //ketapidiathu// ---கிடைப்பது (am sorry )- // க்ர்ர்ரர்ர்ர் ;( I give up. ;(

    ஒருவேளை கேட்கப்படாது என்றிருக்குமோ!!! :)

    //samithu parkkavum.// மீதி எல்லாம் நான் சரியாகத் தான் புரிந்து வைத்திருக்கிறேன் என்று மட்டும் எப்படி நம்புவதாம்!! ;) நிச்சயம் நான் சமைத்துப் பார்க்....க மாட்டேன்ன்ன்ன். ;)))

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா