Tuesday, 27 April 2010

எனக்குப் பிடித்த பெண்

எந்த வயதாக இருந்தால் என்ன பெண், பெண்தானே!
ஏற்கனவே உங்களுக்கு அறிமுகமானவர்தான் இவர். என் ஆறு வயது குட்டித் தோழி, எங்கள் வீட்டுக் குட்டித் தேவதை.
நான் இத்தனை நாட்கள் கழித்தும் நிபந்தனைகளை நினைவு வைத்திருக்கிறேன். ;)
இவர் எனக்கு உறவல்ல. துறை - மாணவி. ஆனால் எனக்கு ஆசிரியர் போல் பல சமயம் நடப்பார். ;)
உ + ம்:- ஒரு முறை தொலை பேசியில் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். நான் தொடர்பைத் துண்டிக்க மனமில்லாது மறுநாள் மீண்டும் அழைப்பதாகக் கூறி இருந்தேன். மறு நாள் என்ன ஆயிற்று என்று நினைவில்லை. அதற்கு அடுத்த நாளும் ஏதோ ஓர் தடங்கல் வந்திருக்க வேண்டும். பிற்பாடு ஒரு நாள் அழைத்தேன், தாயார் எடுத்தார். பேசினோம். குட்டியர் என்னோடு பேசக் கேட்கவில்லை. நான் விசாரித்த போது ஏதோ வேலையாக இருக்கிறார் என்று அறிந்து கொண்டேன். ;)

அதற்கு அடுத்த நாள் அழைத்தேன். பேசிக் கொண்டிருக்கையில் குட்டிக் குரல் எம்பி எம்பிக் குதித்தது. ;) ட்ராம்பலீனில் குதித்துக் குதித்துக் கதைத்திருக்கிறார்.

அரை மணி நேரம் கழித்து....
'சரி, நான் நாளை மீண்டும் பேசட்டுமா?' என்கிறேன்.
'No way. நீங்க அண்டைக்கு ஒருநாள் இப்பிடி சொல்லிட்டு... You never called me,' குரலில் இறுக்கம். ;(
'நான் நாளைக்கு வீட்ட வாறனே, கதைப்போம்.'
'No. வேணாம்,' இன்னமும் குரல் குதிக்கிறது, கொஞ்சம் கொதிக்கிறது. ;))
'இப்ப. I want to talk to you NOW Aunty,'
'ok, ok, ok. ;)'
'Why are you saying ok so many times!!!'
'o..key ;)'
'இன்னொருக்கா ok சொல்லுறீங்க.'
'okeyyy! ;)'
'Don't say ok. சரியா?' அதட்டுகிறார். 
'ம் ;)'
'திருப்பியும் you are saying ok,'
'இன்னும் ஒரு five minutes கதைச்சிட்டு வைக்கிறன். பிறகு நாளைக்குக் கதைக்கலாம், என்ன!'
'ம்'

பிறகு எனக்கு ஒரு தண்டைனையாகச் சில நிமிடப் பொழுதுகள் அவர் அமைதியாகக் குதித்தார். நான் காதில் வைத்தது வைத்த படி அவர் மூச்சு வாங்கும் சப்தத்தை காதில் வாங்கிக் கொண்டிருந்தேன். ;)

'அஞ்சு நிமிஷம் ஆகீட்டு. நான் வைக்கிறன். நாளைக்..' முடிக்க முதல் வார்த்தை தடுக்கப்படுகிறது. 'Wait. Is it already five minutes!' சந்தேகம். மேலும் சில வசனங்களில் சமாதானம் ஆகிறார்.

மறுநாள் மறந்து போனேன். கிட்டத்தட்டக் கோவிலுக்குக் கிளம்பும் சமயம் பார்த்து நினைவு வருகிறது. அவசரமாக உடை மாற்றிக் கொண்டு அழைக்கிறேன். ஒன்றிரண்டு நிமிடங்களாவது இன்று பேசி விட வேண்டும்.

மறுபுறம் யாரும் இல்லை என்பதாகவும் செய்தி வைக்குமாறும் சேமிக்கப்பட்ட பெண் குரல் இனிமையாகத் தகவல் சொல்கிறது. 'பீப்' கேட்டதும் 'நான் ஆன்ட்டி. இண்டைக்கு உங்களோட கதைக்கிறதெண்டு சொன்னனான். அதுதான் எடுத்தன்,' சொல்லிக் கொண்டிருக்கையில் மீதி மூவரும் காரில் ஏறிவிட்டது புரிய தொடர்பைத் துண்டித்து விட்டு ஓடுகிறேன்.

மீண்டும் வீடு வர இரவு ஒன்பதரை ஆகிறது. தொலை பேசியில் தகவல் இருக்கிறது. 'ஆன்ட்டி.. நான் --------. ஏலுமெண்டா எடுங்க' குட்டிக் குரல் சோகமாக அடங்கிப் போய் ஒலிக்கிறது.
காலையில் எடுக்கிறேன்.

'ஆன்டி, என்ன நீங்க செய்ற வேல? Don't you know how to leave a message? நீங்களும் மெசேஜ் வைக்கிறீங்க. நானும் மெசேஜ் வைக்கிறன்.' அதாவது, நான் வீட்டில் இல்லை, வெளியே போய் விட்டேன் என்பதைச் செய்தியில் சொல்லி இருக்க வேண்டுமாம். ;) தப்புத்தான். ;) 'சொல்லி இருந்தா I would have known,' குரலில் ஒரு ;(. 'Remember this next time, right!' 'ம்'
நல்ல வேளை தொலைபேசியில் என் முகம் தெரியவில்லை என்று நினைத்துக் கொண்டேன். பிறகு சிரிப்பதற்கும் ஒரு டோஸ் கிடைத்திருக்கும். ;))

இவரிடமிருந்து நான் கற்றவை பல. ;) இன்னும் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. கற்றுக் கொடுப்பார். இந்தக் குட்டி தேவதை, என் குட்டி ஆசிரியர். பல சமயங்களில் சிறியவர்கள்தானே என்று நினைத்துவிடுகிறோம். ஆனால் சிந்திக்க வைக்கிறார் இவர்.

4 comments:

  1. டீச்சருக்கு ஒரு டீச்சர் வேணும் தானே.தேவதை ஸோ க்யூட். என் அன்பு முத்தங்கள்.

    ReplyDelete
  2. நன்றி அம்முலு. ;) கொடுத்து விடுகிறேன். ;)

    ReplyDelete
  3. இமா, மற்றவர்களெல்லாம் உங்கள் கத்தியை பார்த்து பயந்து நடுங்கும் போது இந்த குட்டிப் பெண் தைரியமாக இருக்கிறார் ( போட்டோவில் பக்கத்தில் இருப்பது நீங்களா ????) . அழகான குட்டி.

    ReplyDelete
  4. //போட்டோவில் பக்கத்தில் இருப்பது நீங்களா ????) . அழகான குட்டி// !! ;)) பரவாயில்ல. வாணிட அண்ணாச்சி எண்டபடியால் படியால் சும்மா விடுறன். ;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா