Friday 29 January 2010

இன்றைய அறுவடை - 3

தரையில் வைத்தால் சிட்டுக்கள் பழங்களைத் தின்று விடுகின்றனவென்று வலை போட்டு மூடி வைத்தேன்.


இங்கு வாடிக்கையாக வரும் முள் எலியார் ஊர்ந்து போய்த் தின்ன ஆரம்பித்தார். சென்ற வருடம் முதல் செடிகள் இந்தக் கூட்டினுள் வளர்கின்றன.


இன்றைய அறுவடை இது மட்டும் அல்ல. இன்னும் இருக்கிறது.
                                      
                                                                                         மீதி நாளை தொடரும்.

16 comments:

  1. இத்தன பச்சையா இலைகளை பாத்தே நாளாவுது.. பழம் இவ்ளோ சிகப்பா? லக்கி வுமன் தான்..

    ReplyDelete
  2. வாவ் சூப்பராயிருக்கு போட்டோ.இந்தப் பழம் ரொம்ப பிடிக்கும்..

    ReplyDelete
  3. இமா.. நாங்க அந்த ஃபார்ம் க்கே போயி அறுவடை பண்ணியிருக்கோம் :)) அதனால இந்த வாட்டி புகைய மாட்டேனே :))

    இந்த மில்க்‌ஷேக் எங்க வீட்டுல ரொம்ப ஃபேமஸ் ஆன ஒன்னு.. பான் கேக் கூடவும் சேர்க்கலாம்..

    ReplyDelete
  4. என் நிறைவேறாத ஆசையா ஆப்பிள் பிக்கிங்,ஸ்ட்ராபெரி பிக்கிங் எல்லாமே நிற்குது!

    அட்லீஸ்ட் இந்த வருஷமாவது பழத்தோட்டங்கள் போயிட்டுவரனும் இமா..உறங்கிட்டு இருந்த ஆசையைத் தட்டி எழுப்பி விட்டுட்டிங்க...நாளையும் தொடருமா?? கலக்குங்க..கலக்குங்க..

    ReplyDelete
  5. ரொம்ப நல்லா இருக்கு இமா , என் பெரிய பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும் . சூப்பர்

    ReplyDelete
  6. அண்ணாமலையான், எந்த ஊர்ல இருக்கீங்க? ;) //இத்தன பச்சையா இலைகளை பாத்தே நாளாவுது..// !!! நான் லக்கி என்று சொன்னதுக்கு தாங்க்ஸ். ;)

    ~~~~~~~~~~

    மேனகா, சும்மா ஒரு சுவையான பழத்தைப் புதைத்து வைங்க, வளர்ந்துரும்.

    ~~~~~~~~~~

    எனக்கும் ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் பிடிக்கும் சந்தனா. யம் இல்ல.

    ~~~~~~~~~~

    அறுந்து போன வலையை ஒரு மாதிரி ஒட்ட வைத்து வந்திருக்கிறேன் மகி. எனக்கும் போக ஆசை. தற்போதைக்கு இங்கே மட்டும் பிக்கிங்.

    ~~~~~~~~~~

    ஒரு தொட்டியில் நட்டுப் பாருங்களேன் சாரு. செடியாகிப் பூத்துக் காய்ப்பது பார்க்கக் குழந்தைகளுக்குச் சுவாரசியமாக இருக்கும்.

    ReplyDelete
  7. Imma.. I have some empty pots.. Is that sufficient to put in a fruit? or should I have to buy the seeds?

    ReplyDelete
  8. இமா... இன்று ”அவைக்கு”.... விடுமுறையோ? அறுவடையைக் காணவில்லையே எனக் கேட்டேன்.

    எல்லாமே சூப்பர்.. பழத்தோட்டம், பூங்காவனம் எல்லாம் வைத்திருப்பதைப் பார்க்க வரவேணும்போல இருக்கு... ஆனால் நீங்கள் பூனையாரை துரத்தோ துரத்தெனத் துரத்துவதைப் பார்க்க பயம்மாஆஆ இருக்கு.

    உங்களுக்கு நல்ல வெதர் இமா, அதுதான் எல்லாம் நல்லா வருது, இங்கு நானும் பணத்தைக் கொட்டி எல்லா விதமானதும் வாங்கி வைப்பேன்... பெரிதாக வராது, குளிர் அதிகம்.. அதிலும் தினமும் மழை பெய்யும். சமரென்றால் பெரும்பாலும் மழைதான். ஆசைக்கு ஒரு சமர் உடுப்புப் போடுவதே பெரும்பாடாக இருக்கும்.

    நானும் ஸ்ரோபெரி நட்டேன்.... நாவல்பழமளவு பழுத்தது... கத்தரி ஒரு காய் காய்த்தது, மிளகாய் பூத்தது மட்டும்தான் காய்க்கவில்லை... மலைநாட்டு காய்கறிகள் மட்டும் நன்றாக வந்தது.

    அதனால் ஆசை தீர.. Farm சென்று அனைத்துப் பழங்களும் சோழன், மரக்கறி எல்லாம் விரும்பியளவு பறிப்போம் இடையிடை.. சூப்பராக இருக்கும்.. அதிகம் அலட்டிவிட்டேனோ... அலட்டாமல் என்ன செய்வது உங்கள் தோட்டம் பார்க்க எனக்கு p.. r... ஆண்மையாக வருது...:) திருஷ்டி சுத்துங்கோ. உங்களுக்கல்ல...:).

    சந்து,,, சீட் எல்லாம் சரிவராது... ஓடிப்போய்க் கன்று வாங்கி வையுங்கோ.... இமாவுக்குத்தான் விதை எல்லாம் முளைக்கும்...

    ReplyDelete
  9. இமா, எங்கள் வீட்டிலும் இந்த செடி இருக்கு. பார்க்கவே நல்ல ஆசையாக இருக்கும். ஆனால், ஒரு பிரச்சினை பழங்கள் எல்லாவற்றையும் அம்மா முயலும், குட்டி முயல்களும் என் குட்டீஸ்களுக்கு விடாமல் சாப்பிட்டு விடும். நாங்களும் அவற்றை விரட்டுவதில்லை. ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளருமாம் அது போல தான் இதுவும்

    ReplyDelete
  10. இமா, நீங்க இனி இந்த மாதிரி படங்கள் போடாம இருக்கிறது உங்களுக்கும், உங்க தோட்டத்துக்கும் நன்மையா இருக்கும். இங்க புகை புகையா வருது!!

    ReplyDelete
  11. I have never seen a strawberry plant.I am very passionate about gardening and plants .S I liked your blog very much. First time here. Do drop by
    http://padhuskitchen.blogspot.com/ when time permits .

    ReplyDelete
  12. போட்டுருங்க சந்தனா. சுவையான, பெரிய பழமாகத் தெரிந்து போடுங்க.

    ~~~~~~~~~~

    //”அவைக்கு”.... விடுமுறை//யைத்தான் ஞானதிருஷ்டி என்றேன் அதிரா. ;)
    தாராளமா வாங்கோ, துரத்த மாட்டேன்.
    'வெதர்' எல்லாம் சில மாதங்கள் மட்டுமே. பிறகு ;( ஆனால் ஸ்ட்ரா பெர்ரி ஒருக்கா வச்சா எப்பவும் நிக்கும்.
    திருஷ்டியில் எல்லாம் எனக்குத் துளிக் கூட நம்பிக்கை கிடையாது.
    அதீஸ், 'சீட்' முளைக்காது எண்டுறீங்கள். இங்க காலுக்கும் கைக்கும் முளைக்குது. நான்தான் பார்த்துப் பார்த்துப் பிடுங்கி எறிகிறேன்.

    ~~~~~~~~~~

    நல்ல கொள்கை வாணி, அதிராவைப் பின்பற்றுறீங்களோ!! ;)

    ~~~~~~~~~~

    காய்க்காத மரத்துக்கும் புகை போட்டால் நல்லாக் காய்க்கும் ஹுசேன். ;)

    ~~~~~~~~~~

    Tkz Padu. I did view ur blog, it's nice. ;) wil come back again soon.

    ReplyDelete
  13. இமா அம்மா நான் இப்பதான் இந்த செடியோ பாக்குரேன். முதலில் கொஞ்சம் மஞ்சள் கலரில் இருந்து பழுத்து சிவப்பு ஆகுதா?

    ReplyDelete
  14. இல்லை பிரபா. வெள்ளையா இருக்கும். பிறகு சிவப்பாகும்.

    ReplyDelete
  15. My 1st visit ...unga blog romba nalla eruku ,,oru puthu ulagamay kati erukeenga pa... thanx for sharing ..

    ReplyDelete
  16. Tkz 4 visiting my world Priya. ;) tkz 4 ur compliments too.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா