Tuesday 26 January 2010

"ஆன்டி, நான் உங்களைப் பிடிக்கும்,"...

...என்று என்னிடம் கூறிய என் ஆறு வயது குட்டித் தோழி இவர். :)













நாங்கள் ஒன்றும் ஓடி விளையாடவில்லை. அவர் சொன்ன வாக்கியத்தின் கருத்து என்னவெனில் 'Aunty, I love you' என்பதாகும். இவர் தன்னோடு நான் எப்பொழுதும் தமிழிலேயே உரையாட வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் வைத்திருக்கிறார். இரண்டு வருடங்களாக இந்த ஒப்பந்தம் நடைமுறையில்
இருக்கிறது.

எங்களுக்குள் நல்ல புரிந்துணர்வு இருக்கிறது. பாம்பு விழுங்க இருக்கும் தருணத்தில் (பாம்பும் ஏணியும்) ஒரு கட்டம் தாண்டி நிறுத்துவதை நான் காண்பதில்லை. :) தற்போது அவுஸ்திரேலியாவுக்கு 'பீன்' பண்ணி (been) இருக்கிறார். :) இந்த வார இறுதியில் திரும்புகிறார்.

இந்தத் தேவதை சென்ற திங்கள் அன்று என்னோடு சில மணி நேரங்கள் செலவிட வந்தபோது எடுத்த புகைப்படங்கள் இவை. 

இவருக்கு இறால் பீட்ஸா பிடிக்குமாம். அவரே சமைக்க விரும்பினார், உதவினேன்.

தேவையாக இருந்தவை :_

ரெடிமேட் சேவரி பேஸ்ட்ரி ஷீட்கள்
சுத்தம் செய்யப்பட்ட இறால்கள்
உப்பு
மஞ்சட் தூள்
ஆலிவ் எண்ணெய்
தக்காளி பேஸ்ட் 
துருவிய சீஸ்

இவற்றோடு... இரண்டு குட்டிக் கைகள் 

இறால்களை மட்டும் மஞ்சள், உப்பு சேர்த்துப் பொரித்து (வறுத்து) வைத்தேன்.

குட்டியம்மா வேலை செய்ய ஒரு தளம் வேண்டி இருந்தது. மேசை எட்டவில்லை. எனவே ஒரு லாச்சியைத் திறந்து வைத்து, அதன் மேல் ஒரு கட்டிங் போர்டை வைத்து விட்டேன்.

முதலில் பேஸ்ட்ரி ஷீட்களில் ஒரு கிண்ணத்தைக் கொண்டு வட்டம் வெட்ட ஆரம்பித்தார்.

சற்று நேரத்தில் அதுவும் வசதிக் குறைவாக இருப்பதாகத் தெரிவித்துத் தானாகவே கீழே இருந்த லாச்சிக்கு பலகையை இறக்கி விட்டார்.












பிறகு வட்டங்களைப் பிரித்து....















பேக்கிங் ஷீட் விரித்த தட்டில் பரவினார்.
(இந்தப் படிநிலையில் தக்காளி பேஸ்ட் ஆடையில் பட்டுக் கெடுத்து விடக் கூடாதே என்கிற கவலை வந்தது. ஆகவே என் ஏப்ரன் ஒன்றை அணிந்து கொண்டார்.)













அடுத்து தக்காளி பேஸ்ட் தடவி....















 அதன் மேல் துருவிய சீஸைத் தூவி...



















ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு பொரித்த இறால் வைத்து...

பேக் பண்ணினார்(னேன்). :)

நினைவாக அம்மா, அப்பா, குட்டித் தம்பிக்கும் எடுத்துவைத்துக் கொண்டார். அங்கிள், அண்ணாமார் வீட்டுக்கு வந்த போது அவர்களுக்கும் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்.

நீங்களும் சாப்பிடுங்க. நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். :)

12 comments:

  1. சொல்லிட்டீங்கள்ல , உங்க வார்த்தைய மீறாம சாப்பிடுறேன்....

    ReplyDelete
  2. குட்டி தோழி நல்லாவே செய்து இருக்குறாங்க

    ReplyDelete
  3. ஆஹா அழகாக செய்து இருங்காங்க.. சின்ன பொண்ணு.. செய்துபார்ப்போம்

    ReplyDelete
  4. First timer to ur space and liked the way you have presented posts. Following u. Visit mine too when u find time :):)

    Chitchat
    http://chitchatcrossroads.blogspot.com/

    ReplyDelete
  5. சாப்பிட்டாச்சா அண்ணாமலையான். முதல் ஆளா வந்து தட்டோட சாப்பிட்டிருப்பீங்க. :D

    ~~~~~~~~~~

    பின்ன, அவங்க இமா தோழி இல்ல சாரு. :)

    ~~~~~~~~~~

    என்ன ஃபாயிஸா, இப்பிடிச் சொல்றீங்க!! :)

    ~~~~~~~~~~

    Hi Chitchat!
    Tkz 4 ur compliments. :) Had a look @ ur blog just nw. Nice recipes.
    Will visit again soon.

    ReplyDelete
  6. ரெண்டு நாள் கழித்து வந்து பார்ப்பதற்குள் மட-மடன்னு இத்தனை பதிவுகள் போட்டுட்டீங்க இமா?

    உங்க பிரெண்ட் வெஜ் பிஸ்சா செய்யும்போது சொல்லுங்க..நான் சாப்பிட வந்துடறேன்! :)

    ReplyDelete
  7. ஓ! நீங்கள் வெஜிடேரியனோ மகி! கட்டாயம் சொல்லுறன். :)

    ReplyDelete
  8. உங்க ஃப்ரெண்ட் ரொம்ப் குட்டி அண்ட் க்யூட் இமா (என்னை மாதிரியே :) ).. அழகான உறவு மற்றும் உணவு :)

    ReplyDelete
  9. என்னை மாதிரியே. :)

    ReplyDelete
  10. இமா ஆன்டி எனக்கும் உங்களை ரொம்ப படிக்கும். ஆறுதல் கமெண்டுக்கு மிக்க நன்றி.

    ம்ம் சின்ன குட்டி பொண்ணுக்கு சூப்பரா பிட்சா செய்ய சொல்லி கொடுத்து இருக்கீங்க, குட்டி பிட்சா என் பையனுக்கு ரொம்ப பிடிக்கும்.

    ReplyDelete
  11. ஜலீ,
    நீங்க சமையல் க்வீன் ஆச்சே, இதை விட சூப்பரா சமைத்துக் கொடுத்துருவீங்க.

    ReplyDelete
  12. அந்த பொண்ணு மாதிரி பீசாவும் அழகா நல்லா இருக்கு. சாப்பிட ஆசையா இருக்கு. இப்படி படம் மட்டும் போட்ட எப்படி இமா அம்மா.

    எப்படி என்று செய்முறை விளக்கம் குடுங்க.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா