Friday, 22 January 2010

பூப்பூவாப் பூத்திருக்கு நட்பு


வலைப்பூ ஆரம்பித்து இருபத்திரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருக்கிறது.
அதற்குள் பதின்மூவர் பின்தொடர்கிறார்களா என்று மலைப்பூ.
அதனால் வந்தது சிரிப்பூ. :D

நன்றியாக என் தோட்டத்து டேலியாப் பூ.

நன்றி


என் தாயார் செபா

விஜி சத்யா

சுஸ்ரீ

சாருஸ்ரீராஜ்

மகி

சோனியா

வானதி

அதிரா

ஜலீலா கமால்

சந்தனா

ஜீனோ

பிரபாதாமு வேதகிரி
சுபா


இவர்களோடு... இதுவரை எனது பதிவுகளுக்குப் பின்னூட்டம் கொடுத்து ஊக்குவித்த

அன்பு மகன் அருண் பிரகாஷ் 
ஹுசேன் 
தோழி இலா, மற்றும் பெயர் குறிப்பிடாது கருத்துத் தெரிவித்திருந்த சகோதரி 

அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

14 comments:

  1. இமா, கவிதை சூப்பர்( டி.ராஜேந்தர் போல கலக்கிவிட்டீர்கள்). உங்களுக்குள் ஒரு கவிஞரும் இருக்கின்றார்.
    வாணி

    ReplyDelete
  2. இது நல்ல சிரிப்பூ. ;D என்னை TR ரேஞ்சுக்குத் தூக்கி வைப்பீங்க என்று எதிர்பார்க்கவே.. இல்லை.
    நன்றி வாணி. உங்களுக்கு என் அன்பூ :D

    ReplyDelete
  3. இதுக்கு பேர் தான் செல்ஃபூ :)) இமா.. புகைகிறதே.. எனக்கு பத்து தான் இருக்காங்க இமா :))

    ReplyDelete
  4. அழகான டேலியாப் பூக்கள்... சூப்பர் கலர்.

    இருப்பினும் இமா, நட்பை பூவுக்கு ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள மாட்டேன், பூக்கள் வாடி, கருகிப்போய்விடும்... உண்மை நட்பு அப்படியல்லவே.. ஒருவேளை இவையெல்லாம் வாடாமலர்களோ...

    பூந்தோட்டத்தில் எழுதப்பட்டிருந்தது:
    ”பூக்கள் பறிப்பதற்கல்ல”
    பூக்கள் சொன்னது:
    “ஆம்... செடிகளிலேயே கருகத்தான்”.

    ReplyDelete
  5. சந்தனா...
    //எனக்கு பத்து தான் இருக்காங்க// அப்ப பசிக்காம பார்த்துக்கங்க. :)

    அடடா! அதிரா எண்டால் அதிராதான். என்ன மாதிரி யோசிக்கிறீங்கள். எனக்கு உங்கட அளவுக்குத் திங்க் பண்ண வர இல்ல. :)

    //இவையெல்லாம் வாடாமலர்களோ...//
    இல்லை, என் தோட்டத்தில் பறித்தவை.

    ReplyDelete
  6. அட..ஒரு பின்னூட்டத்துக்கே :) ஒரு பன்ச் டேலியா பூக்களா?? அதுவும் உங்க தோட்டத்துலயே பூத்ததா?அழகா இருக்கு.

    பூக்களுக்கும், உங்கள் நன்றிக்கும் நன்றி இமா!

    ReplyDelete
  7. இமா,

    அழகான பூக்களுக்கு நன்றி.

    ஆனா இமா, நானும் உங்களையும் பின்தொடர்கிறேனே? ஃபாலோயர்ஸ் லிஸ்டில் என் படம் வரவில்லையா? என்னன்னு தெரியலையே?

    ReplyDelete
  8. மகி, எனக்கு உங்கள் மஞ்சட்பூக்கள் பார்த்தால் பூஸ் + மஞ்சள் பை ஞாபகம் வருகிறது. :)

    ஹுசேன், மேலே படம் காணோமே! ஒரு வேளை 'ப்ரைவேட்' ஆக ஃபாலோ பண்றீங்களோ! :) ஒரு முறை செக் பண்ணுங்க.
    இலா படம் பின்னூட்டத்தில் வரவில்லை. உங்கள் (வாத்து) படமும், அருண் படமும் இணைக்க எவ்வளவோ முயன்றேன். கூடவே வேறு ஒரு லிங்க் வருகிறது. அதனால் விட்டு விட்டேன்.

    ReplyDelete
  9. ஆமா, பிரைவேட்டாத்தான் ஃபாலோ பண்றேன். அப்படின்னா படம் வராதென்றுதான் நினைக்கிறேன். தெரிந்தால் சொல்லுங்க...

    ReplyDelete
  10. இமா அம்மா இந்த பூ பார்க்கும் கண்ணையும், மனதையும் கொள்ளை கொள்கிரது... சூப்பர்..... கலக்குரிங்க.... வாழ்த்துக்கள் இமா அம்மா....

    ReplyDelete
  11. அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் ஹுசேன். :)

    நன்றி பிரபா. :) உங்கள் வீட்டில் தோட்டம் இல்லையா?

    ReplyDelete
  12. எங்க வீட்டில் இல்லை.. நான் அப்பாட்மன்ஸ்ல இருக்கேன் அம்மா... பக்கத்தில் வைத்து இருக்காங்க. ஆனா பூ இல்லை இலைகள் மட்டும் தான்.

    ReplyDelete
  13. கெதியா ஒரு வீடு வாங்கிருங்க பிரபா. :)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா