Thursday, 14 January 2010

கதவை யாரோ தட்டுகிறார்கள்

ஹாய்! எல்லோரும் நலம்தானே?

என் சோகக் கதையை மூட்டை கட்டிவிட்டு வேறு விஷயத்துக்கு வருவோம்.

காலையில் கதைவை யாரோ தட்டுகிறார்கள். ஒரு குட்டிக் கையாக இருக்க வேண்டும், சின்னதாக இருக்கிறது சப்தம். திறந்தால்..
 



வெள்ளை நிறத்தொரு பூனை..
எங்கள் வாயிலில் நிற்குது கண்டீர். :)

முன்னைய 'செல்லங்கள்' பதிவில்  அழகாகப் போஸ் கொடுத்திருந்த ஆள்தான் இவர். நேற்று கூட அடுத்த கதவுப் பக்கமாக வெளியே படுத்திருந்தார்.





மெலிந்து இருக்கிறாரோ என்று பேசிக் கொண்டோம். (பூவோடு சேர்ந்த நாரும் மணப்பது போல், இப்போ எல்லாம் கிறிஸ் கூட பிராணிகளோடு பேச ஆரம்பித்து இருக்கிறார். :)  )

இவர் இளமையானவர். சின்ன ஆள்தான் இருந்தாலும் குண்டுக் கன்னம் வற்றி இருக்கிற மாதிரி இருந்தது.

இப்போ இங்கு விடுமுறை காலம். சிலர் அநாதரவாக செல்லங்களை விட்டுப் போய் விடுகிறார்கள். இவரும் அப்படி வீட்டாரைக் காணாமல் எங்களிடம் அடைக்கலம் தேடி வருவதாகத் தெரிகிறது.

சத்யாக்கிரகம் மாதிரி வாசலில் படுத்து விட்டார்.





மகனாருக்கு மனம் பொறுக்கவில்லை. 'ஷால் வீ  ஃபீட் ஹேர் மம்?'





பார்க்கப் பரிதாபமாக இருக்கிறார் குட்டியர். மகன் காலை உராய்ந்து வலம் வந்தார். பூனைப் பாஷை தெரிந்தவர் சொல்கிறார், பூனை பசித்தால் இப்படி நடக்குமாம்.





என்னிடம் என்ன இருக்கிறது கொடுக்க. ஒரு மீன் டின்னைத் திறந்து... பாத்திரம்! ஒரு தீர்ந்து போன மாஜரீன் டப்பா மூடி, பிறகு எறிந்து விடலாம். நீர் (வழமையாக நீர் வீழ்ச்சியில் அருந்துபவர்தான், இப்போது பலகீனமாகத் தெரிகிறார், விழுந்து வைக்கக் கூடாதே!) மாஜரீன் டப்பாவில்.

மூடியில் ஒரு கரண்டி அளவு மீன் வைத்தால்.. ஆவலாக உண்பதைப் பாருங்களேன். :)





யானைப் பசிக்குச் சோழப் பொரி. 'இது என்னைத்தைக் காணும்' என்பது போல் பார்க்கிறார். :)





மகன் ஏராளமான சந்தர்ப்பங்களில் அவரது தோழர்களுக்காக செல்லங்கள் பராமரித்திருக்கிறார், அனுபவஸ்தர். :) ஒரு நாளைக்கு மூன்று கரண்டி டூனா போதுமாம். மதியமும் பூனை கேட்டால் ஒரு கரண்டி கொடுக்கட்டுமாம்.

இரண்டு நாள் கழித்தும் பூனை எங்கள் பின்னாலேயே சுற்றிக் கொண்டு இருந்தால் SPCA ஐக் கூப்பிடுவோம் என்றார். பூனை கழுத்தில் பட்டி இல்லை. பெயர் தெரியவில்லை.

ஒரு வாய் மீன் கொடுத்தால் உள்ளே வர முயற்சிக்கிறார், பொல்லாதவர்.

குட்டி நாய்க்கும் குழந்தைப் பிள்ளைக்கும் மட்டும் அல்ல குட்டிப் பூனைக்கும் இடம் கொடுக்கக் கூடாதுதான் போல. :)
~~~~~~~~~
இன்று என் பெற்றோர் என்னோடு பகல் பொழுதைக் கழிக்க வந்திருக்கிறார்கள். அவர்களுக்காகக் கதவைத் திறக்கவும் இவரும் மீண்டும் உள்ளே நுழைய முயற்சித்தார். பிற்பாடு சமையல் வாசனை அழைத்து இருக்க வேண்டும் - வெப்பம் தாங்கவில்லை என்று ஜன்னல்களைத் திறந்து விட்டிருந்தோம், கிட்டத்தட்ட உள்ளே இறங்கி விட்டார். நல்ல வேளை தாயார் கண்டு துரத்தி விட்டார். மதியமும் ஒரு கரண்டி மீன் சாப்பிட்டு விட்டுப் போய் இருக்கிறார். பார்க்கலாம். :)

9 comments:

  1. மெய்தான் ஆன்ட்டி..இந்த வெள்ளைக்காரம்மா:) ரொம்ப மெலிந்து போயிருக்காங்க..மறக்காமல் மூணு நேரமும் ரின் மீன் போடுங்கோ..இந்தப் பூனையும் பால் குடிக்கும் போலத்தானே இருக்கிறது .. 2 % மில்க் கொடுங்கோ..நல்லா புஷ்டியா ஆகிடுவாங்க! ஹி,ஹி!! :D

    ReplyDelete
  2. கதவைத் தட்டியது பப்பியாக இருந்தால் பால், தயிர் எல்லாம் கொடுத்து இருப்பேன். :)

    வந்தது பூனையாச்சே. அவங்க புஷ்டியா ஆகி என்னை மெலிய வச்சுருவாங்க என்று பயமா இருக்கு. :)

    ReplyDelete
  3. //ஹாய்! எல்லோரும் நலம்தானே? //

    எல்லோருக்கும் இமாவின் அன்பு :)

    பூஸ் விஷயத்துல கவனம் தேவை தான் :)))))நீங்க இதுக்கு முன்னால பூஸ் வளர்த்ததில்லயா இமா?

    ReplyDelete
  4. வளர்த்திருக்கிறேன். அப்ப சந்தனா 'செல்லங்கள்' படிக்கவில்லை. :)

    எனக்கு பூனை ரோமம் ஆகாது.

    ReplyDelete
  5. இமா இவரை பார்த்ததும் ஒரு என் பெரிய பையன் சின்ன வயதில் பூனையாரை காட்டினால் தான் சாப்பாடு சாப்ப்பிடுவான்
    ஓவொன்றிற்கும் ஒரு கதை இருக்கு.

    ஒரே ஒரு சிரிப்பு மட்டும் சொல்கிறேன்.

    கிச்சன் உள் தான் என் ரூம், ரூமில் நான் , என் பெரிய பையன் அப்ப 1 வயது இருக்கும். என் கணவரின் தங்கை தூங்கி கொண்டு இருந்தோம் நள்ளிரவில் மியாவ் மியாவ்.

    எப்படி இருக்கும் முன்று பேரும் பெட்டு மேல நின்று பே பே என்று சத்தம், பார்த்தா பெட்டுக்கி கீழ்....

    லைட் போட்ட மேலே பாய்ந்துடுவார், கொஞ்சம் நினைத்து பாருங்கள்.
    பிறகு இருட்டில் கதவை திறந்து அவரை வெளியே விரட்டி விட்டு தூஙகுவதற்குள் ம்ம் போதும் போதும் என்றாகி விட்டது.

    இது ஜன்னல் வழியா வருவார் என்றவுடன் என் கிச்சன் ஜன்னல் வழியா வந்து பொரித்து வைத்திருக்கும் மீனை காலி பண்ணிட்டு போவார்.

    இந்த பூனையாரை பற்றி , அதிரா பதிவு போடும் போதெல்லாம் நிறைய இது போல் பழைய ஞாபகம் வரும்.

    ReplyDelete
  6. Kia Ora from ........land.
    பூ அழகாக இருக்கிறது இமா... நான் "நெற்" ஐச் சொன்னேன். இன்று நல்ல நாளாமே பூனைகளுக்கு, அதுதான் சாமமானாலும் பறவாயில்லை என்று, நித்திரைக்கே குட்நைட் சொல்லிப்போட்டுப் பதிவு போட வந்துவிட்டேன்.


    செய்வன திருந்தச் செய்யவேண்டும். ஏதோ என் பெயரும் இங்கிருக்கவேண்டும் என "நல்லாயிருக்கு" எனச் சொல்லிவிட்டு ஓடுவது பிடிப்பதில்லை எனக்கு. எதில் கால் பதித்தாலும் அதை அனுபவித்து ரசித்து பதிவு போட வேண்டும் என்பதே என் ஆவல், அதனால்தான் .. நேரம் கிடைக்குமட்டும் காத்திருந்தேன்.

    முன்பென்றால் என் உடல் பொருள் ஆவி எல்லாம் " அங்கு" மட்டுமே தானே செலவழித்தேன், அதனால் அங்கு நிறைய பதிவு போடமுடிந்தது. இப்போ பல பூக்கள், என்பதால் ஓடக் கஸ்டமாக இருக்கு. என் ஒப்பபரி இருக்கட்டும்.

    பூனையாரின் கதை ரொம்ப ஓவர்:), அதென்ன பப்பி என்றால் விரட்டியிருக்க மாட்டேன்? ஏன் பப்பிக்கு மயிர் இல்லையோ? அது அலர்ஜி இல்லையோ?

    ///'ஷால் வீ ஃபீட் ஹேர் மம்?'/// யூ மீன் கேர்ள்?????.

    "யாரும் சமைக்கலாம் " போல இருக்கிறது இமா.. படமும் கருத்தும். நன்றாகவே..

    //பூஸ் விஷயத்துல கவனம் தேவை தான் :)))))//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்%).

    ஜலீலாக்கா பூனைக்கதை நன்றாக இருக்கு.

    ReplyDelete
  7. ஜலீலா, இறந்தகாலத்துக்குப் போய்டீங்க. :) பூனைக் கதை நன்றாக இருக்கிறது. பூசுக்கு இந்த அளவு பயமா? :) இந்தக் குட்டியரும் சமையல் திருட்டுக்குத்தான் உள்ளே வர முயற்சித்தார். :)
    உங்கள் வேலைப்பளுவுக்கு மத்தியிலும் அடிக்கடி வருகிறீர்கள். மகிழ்ச்சி, மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

    சிவப்புப் பூ 'பொஹுடுகாவா' - நியூசிலன்ட் கிறிஸ்மஸ் ட்ரீ. வலைப்பூ - :) நன்றி அதிரா.
    என்ன எண்டாலும் பப்பி என் செல்ல மருமகன் இல்லையா!! :) ஒரு பூனையும் இதுவரை என்னைப் பாசமாய் 'ஆன்ட்டீ' என்று கூப்பிட்டது கிடையாது தெரியுமா. :)

    ம்ம்ம்... பயங்கரமாக ஆராய்ச்சி செய்கிறீர்கள். :) நாங்கள் செக் பண்ணவில்லை. :))

    என்ன பூனை திடீரென்று நாய் மாதிரி உறுமுது!!! :)

    ReplyDelete
  8. ஹல்லோ, என்ன நடக்குது இங்கே? புதுசு புதுசா நிறைய பேர் பிளாக் ஆரம்பிச்சிருக்கீங்களே, என்கிட்ட சொல்லணும்னு யாருக்காவது தோணுச்சா? ஐ’ம் ஸோ ஸேட்!! சந்தனாவின் தளத்தைத் தற்செயலாகப் பார்த்து, அங்கிருந்து இங்கு வந்து...ம்ம்ம் நடக்கட்டும் நல்லதே நடக்கட்டும்.

    இமா, வாழ்த்துக்கள்!!
    (உங்களை ரொம்ப ஒல்லியா கற்பனை செஞ்சு வச்சிருந்தேன்!!) ;-D

    ReplyDelete
  9. கதவைத் தட்டுறது யார் என்று பாத்தா அட! ஹுசேன். :)

    எப்படி இருக்கிறீங்க? நலம்தானே?

    எனக்கு உங்க ஐடி தெரியல. இல்லாட்டி நிச்சயம் சொல்லி இருப்பேன். அதுவும் போக என் புலம்பலைப் படிங்க என்று எல்லோரையும் தொந்தரவு கொடுக்கிறது நல்லாவா இருக்கும்? :)

    என்ன! நான் குண்டா தெரியிறேனா!!! ;( :)

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. தொடர்ந்து வருக.

    அன்புடன் இமா

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா