Sunday 31 January 2010

அன்பளிப்புப் பைகள்

 கோடை விடுமுறை முடிந்து புத்தாண்டிற்காக நாளை மீண்டும் பாடசாலை திறப்பு விழா.

அதற்காக வலைப்பூவுக்கு மூடுவிழா எல்லாம் கிடையாது. அவ்வப்போது வந்து ஏதாவது 'அறுவடை' வெளியிட்டுப் புகை போக வைப்பேன். ;)

விடுமுறையில் முடிக்க நினைத்திருந்த வேலைகள் எல்லாம் முடித்து விட்டேனா!!! பெரிய வேலைகளை முடித்திருக்கிறேன் என்பது மனதுக்குத் திருப்தியாக இருக்கிறது. சில குட்டிக் குட்டிக் காரியங்களை மட்டும் - அவை குட்டியாக இருப்பதாலேயே நாளை, நாளை என்று கடத்தி... இன்னும் நிறைவேறாமல் இருக்கிறது. நாளை எங்கே போகப் போகிறது, பிறகு பார்க்கலாம். 

இப்போ நேற்றைய கதை, குட்டித் தோழி அவுஸ்திரேலியாவில் இருந்து இரண்டு நாட்கள் முன் திரும்பி விட்டார். (அவர் குட்டித்தம்பி 'மூஸ் மூஸ்' என்று மூக்கையும் வாயையும் பிடித்துக் கங்காரு முகம் காட்டுகிறார்.)
நேற்று தோழியின் ஆறாவது பிறந்தநாள். அன்பளிப்பு ஏற்கனவே தயாராய் வாங்கி வைத்திருந்தேன். பதினோராம் மணிநேரம், பொதி சுற்றுவதற்குப் பொருத்தமாகக் கடதாசி கிடைக்கவில்லை. கண்ணில் பட்டன முன்பு அறுசுவைக்காகச் செய்து அனுப்பிய 'அன்பளிப்புப் பைகள்'. நீளம் போதவில்லை. எனவே ஒரே வர்ணத்தில் அமைந்த இரண்டு பைகளை ஒன்றுக்குள் ஒன்றாகப் போட்டு வைத்தேன். 
கூடவே கண்ணில் பட்ட மீதிப் பைகள் இவை.

'கான்ஃபிடி' & கிறிஸ்டல் பூக்கள்
ரிப்பன் & பின்னல்வேலைப் பூ 
பஞ்ச் பூக்கள்
'கிஃப்ட் ராப்' பை
'கான்ஃபிடி'
செய்முறைக்கு பார்க்க
      http://www.arusuvai.com/tamil/node/10049

15 comments:

  1. உங்ககிட்டயிருந்து எப்படியாவது (உங்கள் கையால் செய்த) ஒரு கிஃப்ட் வாங்கிரணும்!! ம்ம்.. இந்தப் பக்கம், அந்தப் பக்கம் வராமலா போயிடுவீங்க!!

    ReplyDelete
  2. நமக்கு நல்லதா நாலு பைல எதாவது காய் கறி போட்டு அனுப்புங்க..(ஃப்ரீயா)

    ReplyDelete
  3. ரொம்ப அழகாக இருக்கு.. இமா

    ReplyDelete
  4. சூப்பராயிருக்கு இமா!!

    ReplyDelete
  5. Beautiful Bags..Nice work Imma!

    ReplyDelete
  6. அந்தப் பக்கம் வந்துட்டுத் தான் இருக்கேன் ஹுசேன். ;)

    ~~~~~~~~~~

    அண்ணாமலையான், உங்களுக்கு இல்லாததா! ;) அதெல்லாம் போட்டு அனுப்பிருவேன். ;) பதிலுக்கு எல்லாம் சமைத்துப் படம் எடுத்து அனுப்பிரணும், சரிதானே!! ;)

    ~~~~~~~~~~

    நன்றி ஃபாயிஸா, மேனகா & மகி. தொடர்ந்து வந்துட்டே இருங்க. ;)

    ReplyDelete
  7. அண்ணாமலையான்,
    நல்லதா நாலு பையில காய்கறி அனுப்பியாச்சு. ;)

    ReplyDelete
  8. சூப்பராயிருக்கு இமா அம்மா. பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  9. இமா, மிகவும் பொறுமையாக, அழகாக செய்து இருக்கின்றீர்கள்.

    ReplyDelete
  10. தாங்க்ஸ் ப்ரபாம்மா. என்னாலதான் அந்தப் பக்கம் வர முடியல. நிறைய வேலை பெண்டிங்ல நிக்குது. மெதுவா வரேன். ;)

    ~~~~~~~~~~

    தாங்க்ஸ் வாணி. எனக்கு உண்மையாவே இப்ப சந்தேகம் வருது. நீங்கள் எல்லாரும் போன வருஷம் எங்க இருந்தனீங்கள்!! எனக்கு உங்களோட கனகாலப் பழக்கம் மாதிரிக் கிடக்கே!!

    ReplyDelete
  11. இமா,உங்கள் கைவேலைகளை அறுசுவையில் கண்டு களித்ததை,உங்க கருத்து இல்லாமல் ஆர்ட் அண்ட் கிராஃப்டே அங்கு இருக்காதே,அந்த அளவு உங்களுக்கு ஆர்வம் பாராட்டுக்கள்.என்னவொரு நீட் ப்ரசெண்டேஷன்.

    ReplyDelete
  12. உங்கக்கிட்ட கத்துக்க நிறைய இருக்கு. எப்போ நியூசிலாந்து வரலாம் :-)?

    ReplyDelete
  13. ஐஸ் தாங்க முடியலையே ஆசியா & கவி. :)

    நிறைய எல்லாம் இல்லை. ஆனால் இப்போ வேணும் என்றாலும் வாங்க கவி. ;)

    ReplyDelete
  14. party bag romba alaga eruku

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா