Sunday, 17 January 2010

'உயிர்ச்சத்து சீ' உடம்புக்கு நல்லது

இன்று செல்லங்கள் பற்றி எதுவும் சொல்வதாக இல்லை. :)

அதை விடவும் சிறந்த விடயம் சொல்கிறேன் - உயிர்ச்சத்து சீ உடம்புக்கு நல்லது.

கூடையில் மான்டரீன், தோடம்பழம் இருக்கிறது, நேரமும் நிறைய இருக்கிறது. சாப்பிடுவதைக் கொஞ்சம் கலை நயத்தோடு சாப்பிடலாமே என்று தோன்றிற்று.



ஒரு பழம்...
ஒரு கத்தி...
தோட்டத்தில் உலாவி, கிடைத்த மூலிகைகள் (ஹர்ப்ஸுக்கு அதுதானே தமிழ்!) ஒவ்வொன்றிலும் ஒரு குட்டி நெட்டு...

ஒரு டிஷ்யூ (இதற்கு என்ன தமிழில்!!!)... இத்தனையும் போதும் என்று முடிவு செய்து காரியத்தில் இறங்கினேன்.



'ட' வடிவம்...

அப்படியே மறு பக்கமும்.


சதைப் பகுதியைக் குடைந்து சுவைத்து முடித்து...


  கிடைக்கும் கூடையை அலங்கரித்தால் இப்படி வந்தது. :)

14 comments:

  1. அடடா என்ன கற்பனை.. வியக்க வைக்கிறீங்கள் இமா..

    ReplyDelete
  2. ரீல் விடுறேன் என்று சொல்றீங்களோ சந்தனா!! :)

    பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  3. ஹேர்ப்ஷை ஹேர்ப்ஷ் என்றுதான் சொல்லவேணும் இமா.. எனக்கெதுக்கு ஊர்வம்பு..

    டிஷ்யூ வுக்குத் தமிழில் ”ரிசூ”:).

    அழகான ஊதாக்கூடை(தமிழில் சரிதானே?:)). ஹேர்ப்ஸ் வைத்த இடத்தில் குட்டிப்பூனையார் இருந்திருந்தால் இன்னும் கொள்ளை அழகாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  4. சமையல் குறிப்பு போட்டாலும் //ஹேர்ப்ஸ் வைத்த இடத்தில் குட்டிப்பூனையார் இருந்திருந்தால் இன்னும் கொள்ளை அழகாக இருந்திருக்கும்.// எண்டு சொல்லுவீங்களோ!!!

    ReplyDelete
  5. //டிஷ்யூ வுக்குத் தமிழில் ”ரிசூ”//

    அட அட, தமிழ்ப் புலவர்!!

    இமா, நல்ல கற்பனை!! பிள்ளைகளைச் சாப்பிட வைக்க் உதவும்!!

    ReplyDelete
  6. எப்பிடியாவது சாப்பிட வைக்கப் பாருங்க ஹுசேனம்மா.

    எனக்கொரு 'சகாயம்' வேணும், அந்த வாத்தில இருக்கிறது யாரு என்று சொல்லுங்கோ. :)

    ReplyDelete
  7. வாத்தில் இருப்பது என் பிள்ளைகள்.
    ஆனால் நான் எப்போதுமே வாத்துதான்!!

    ;-))

    ReplyDelete
  8. இமா இதை நான் எதிர்பார்த்து கொண்டிருந்தேன்.உங்க கைவண்னத்தை. நல்லா இருக்கு. மேலும் மேலும் நிறய்யா கைவைண்னத்தை எதிர்நோக்குகிறேன்.

    ReplyDelete
  9. நன்றி விஜி.

    க்ராஃப்டுக்குத் தான் வரவேற்பு பலமாக இருக்கிறது. :) முடிந்தவரை கொடுக்கிறேன்.

    ReplyDelete
  10. இமா ... எப்புடி இப்புடிலாம் முடியுது உங்களால் மட்டும்??!! என்னால் இன்னும் முழுதும் எல்லா பதிவுகளும் படிக்க முடியல.... குழந்தைகள் அத்தனை பிஸியாக வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் தினமும்கொஞ்சமாவது படித்து எல்லா பதிவுகளையும் படிச்சுட வேணும்'னு இப்படி நடு இரவில் வந்து உட்கார்ந்திருக்கேன்.... இப்போ இங்க நேரம் இரவு 12.30. எழுந்து போக மனசு வராம படிச்சுட்டு இருக்கேன்... சரி படிச்சுட்டே இருந்தா எப்படி, பாராட்டாம இருக்க முடியல.... அதான் பாராட்டியும் ஒரு பதிவு போட வந்துட்டேன். உங்க திறமையை பாராட்ட இந்த பதிவும் வார்த்தைகளும் போதாது. வியந்து போயிருக்கேன். தொடருங்க.... வாழ்த்துக்கள். :)

    ReplyDelete
  11. ithu nallaala Vani. ponga, poy thoonkukka. Blog enka poydap pokuthu, inkathaan irukkum. methuvaa paarkkalaam. thookkaththaik kulappikkaatheenka.

    ;) tkz for ur comments and compliments Vani. time kidaikkirappa vaanka. ;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா