எத்தனை நாளைக்குத் தான் வெற்றுத் தொட்டியையே பார்த்துக் கொண்டு இருப்பது!
ஒரு விதமாக நான்கைந்து தடவைகள் தொட்டியை நிரப்பி, ஊற விட்டு நீரை வெளியேற்றி, பரல்களையும் சுத்தப்படுத்தி விட்டு, இதோ அடுத்த தொகுதி மீன்கள் வாங்கி விட்டாயிற்று. :)
இரண்டு தங்க மீன்கள், மீண்டும் ஒரு சோடி வெள்ளிச் சுறாக்கள். மீதி எல்லாம் ஏற்கனவே தப்பி இருந்தவையும் அவற்றைச் சார்ந்த வகை மீன்களும்.
இனிக் கவனமாக இருக்க வேண்டும்.
ஓஹோ.."மீண்டும் ஜீனோ" போலே, மீண்டும் வசந்தம்!! :D
ReplyDeleteவெறி வெறி ஓ..சாரி ஆன்ட்டி, வெரி வெரி நைஸ் டு ஸீ த பிஷஸ் பேக்!! கவனமாகப் பராமரிக்கவும்.
நன்றி, வணக்கம்!
பப்பி பாவமா இருக்கு என்று ஒரு ஸ்பூன் போட்டு வச்சு இருக்கேன். :)
ReplyDeleteம்ம்.. மீன்தான் ஃபுல்லா தண்ணியிலேயே திரியும், பப்பியுமா!!!!
மீண்டும் வசந்தம் வீசுவதை பார்க்க சந்தோஷமாய் இருக்கு, நான் இது வரை மீன் தொட்டி வைத்ததில்லை, இதை பார்த்ததும் ஆசையாக இருக்கு.
ReplyDeleteஇமா அக்கா கொஞ்சம் அட்வைஸ் பிளீஸ்
குட் இமா!
ReplyDeleteஜலீலா,
ReplyDeleteநேரம் கிடைக்கிற போது பெட் ஷாப் பக்கம் ரெண்டு ரவுன்ட் போய்ப் பாருங்க. நிறைய ஐடியா கிடைக்கும். எனக்கும் பெரிதாக எதுவும் தெரியாது. மகன்தான் எல்லாம் பார்க்கிறார்.
கோல்ட் ஃபிஷ் பொதுவாக வெப்பநிலை மாற்றங்களைத் தாங்கிக் கொள்ளும், நான் எப்போதும் மீன் குஞ்சுகள் தான் வாங்குவேன். இறந்து போனாலும் கையைக் கடிக்காது. :) திரும்ப வாங்கி விடலாம். வளர்ச்சியும் பார்க்க ஆசையாக இருக்கும்.
ஒரு தொட்டி, ஒரு ஃபில்டர் கட்டாயம் தேவைப்படும். நீங்கள் வாங்கும் மீனுக்கேற்ப ஹீட்டரும் தேவைப் படலாம். தாவரங்கள், மீதி ஆர்னமன்ட்ஸ், பெபிள்ஸ் எல்லாம் உங்கள் தேவை, விருப்பத்திற்கேற்ப வாங்கிக் கொள்ளலாம்.
தொட்டி வாங்கும் முன் எங்கே வைக்கப் போகிறீர்கள் என்பதைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள். பெரிதாக இருந்தால் ஸ்டான்ட் தேவைப் படும். தண்ணீர் மாற்ற வசதியாக வாட்டர் டாப், அழுக்கு நீரை வெளியே எடுத்துப் போக இடம் வசதியாக இருக்குமா என்பதெல்லாம் மனதில் வைக்க வேண்டும்.
மற்றப்படி, பெட் ஷாப் ஆட்கள் நிறைய டிப்ஸ் கொடுப்பாங்க.
சின்னதாகவே ஆரம்பியுங்கள். அனுபவத்தில் நிறைய விடயங்கள் தெரிய வரும். வாழ்த்துக்கள். :)
மீன் வளர்ப்பு பற்றியும் கொஞ்சம் எழுதலாம் என்று தோன்றுகிறது. :) பார்க்கலாம்.
நன்றி சந்தனா. :)
ReplyDeleteஇலா சொல்றது நினைவு வருது. எத்தனை முறை விழுந்தாலும் எழுந்துதானே ஆக வேணும். :)