பகிர்ந்து கொள்ள நிறைய விடயங்கள் இருந்தபோதும் இன்று வரை நேரம் கிடைக்கவில்லை.
கடந்த வார இறுதியில் வீட்டில் எவ்வளவோ நாளாகப் பின்போட்டு வந்த வேலை நடந்து இருக்கிறது. இன்னும் நடந்து கொண்டு இருக்கிறது. தரைக்குப் போட்டிருந்த கம்பளம் எல்லாம் எடுத்துவிட்டு பலகை போடும் வேலை, பிள்ளைகள் உதவியோடு கிறிஸ் செய்திருக்கிறார். தரை அழகாக இருக்கிறது, பார்க்க ஆசையாக இருக்கிறது.
கடந்த வார இறுதியில் வீட்டில் எவ்வளவோ நாளாகப் பின்போட்டு வந்த வேலை நடந்து இருக்கிறது. இன்னும் நடந்து கொண்டு இருக்கிறது. தரைக்குப் போட்டிருந்த கம்பளம் எல்லாம் எடுத்துவிட்டு பலகை போடும் வேலை, பிள்ளைகள் உதவியோடு கிறிஸ் செய்திருக்கிறார். தரை அழகாக இருக்கிறது, பார்க்க ஆசையாக இருக்கிறது.
எனக்கும் சுத்தம் செய்வது சுலபம்
என்று தோன்றுகிறது.
இப்படி இருந்த இடம்...
இப்படி....
இப்படி....
இப்படி....
இறுதியில் இப்படி ஆயிற்று. அழகாக இருக்கிறதா? :)
இன்னும் கொஞ்சம் வேலை மீதம் இருக்கிறது.
இதற்குக் கொடுத்த விலை!!
செலவைச் சொல்ல வரவில்லை, செல்லத்தைச் சொல்கிறேன். ;;;;(
ம்ம்... சொல்வதற்கு இது சரியான தருணமில்லை.. இருந்தாலும் பாராட்டி விட்டு செல்கிறேன்.. அங்கிள் கை வேலை அருமை.. மெருகேற்றியிருக்கிறார் தரைக்கு..
ReplyDeleteநானே தருணமில்லாத தருணத்தில் இந்தப் பதிவு போட்டு இருக்கிறேன், விடுங்க.
ReplyDeleteஅங்கிளிடம் சொல்கிறேன்.
இமா நானும் இங்கு வந்தாச்சு. நல்ல ப்ளாக். நல்லாவே இருக்கு இனிமேல் தான் எல்லாம் படிக்கனும். ஜஸ்ட் ஒரு மேலோட்டமா பார்த்தேன்.
ReplyDeleteஉங்க கைவண்ணங்களை நான் பார்த்திருக்கேன். நல்ல திறமை. க்ராப்ட்ஸ் எல்லாம் போடுங்க. என் மகளுக்கு சொல்லிகுடுக்கிறேன்.
அப்படியே நம்ம பக்கம் வாங்க.
ஹாய் இமா அம்மா சூப்பர். அசதிடிங்க
ReplyDeleteவருகைக்கும் அழைப்புக்கும் நன்றி விஜி. அந்தப் பக்கம் வந்தாயிற்று, கவனித்திருப்பீர்கள். :)
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி. கிராஃப்ட் சேர்ப்பதாகத் தான் இருக்கிறேன். அறுசுவைக்குப் போய் மீந்ததுதான் இங்கே வரும். :)
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சோனியா. நலம்தானே?
இருவருக்கும் நன்றி, மீண்டும் வருக.
இமா.. பலகை வீடென்றால் வேலை நேரம் மிச்சம்(சுத்தமாக்கும் நேரம்).. ஆச்சூம்.... என்பதும் இல்லாமல் போய்விடும்.. கார்பெட் டஸ்ட்.....
ReplyDeleteகிரிஸ் என்பதும் அங்கிள் என்பதும் ஒருவரையோ குறிக்கிறது? குறைநினைக்கப்படாது...
அப்போ, அவர் அங்கிள் என்றால்.. இமா.. ஆன்ரி..
அதை எல்லாம் மனதில வைத்து தான் மாற்றியதே. மொப்பியைப் பார்த்ததும் ஒரு காரணம் எண்டு வைங்கோவன். :) இது கொஞ்சம் லைட் கலர்.
ReplyDeleteஆம். குறை நினைக்கவில்லை. அது ஜீனோ, பிரபா மாதிரி சிலர் கூப்பிடுறது.
உங்களுக்கு இண்டைக்கு என்ன வந்துது அதிரா!? :) ஏதோ உங்கட விருப்பம். ஆனால்... உங்கட ---- ஐச் சொல்லிப் போட்டுக் கூப்பிடுங்கோ. :)
இமா, மொப்பியைப் பார்த்தபின்புதான் பலகை ஐடியா வந்ததென்றால் ஒரு நன்றி சொல்லாமல்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ReplyDeleteஎண்ட .... ஐச்%), உங்களுடையதில் பாதியும் சில மாதங்களும் இமா... இனிக் கூப்பிடட்டே? என்ன இப்பவும் புகைப் புகையாப் போகுது...
அதிராவுக்கு ஒன்றென்ன ஒரு கோடி நன்றிகள். :) (கவனம், தொண்டை கட்டப் போகுது.)
ReplyDeleteஇது ஸ்மோக் ஃப்ரீ ஏரியா. அதெல்லாம் மொப்பிக்குப் பக்கத்தில இருந்த காலைப் பார்த்தே கண்டுபிடிச்சிட்டன். :)
:):),
ReplyDeleteகரிகாலன் காலைப்போல:):).. பாட்டுக்கேட்குதோ இமா?
அதென்ன பாட்டு? நான் கேட்டதே இல்லையே! :)
ReplyDelete