Thursday 28 January 2010

தங்க மீன் தடாகம்

அம்புலிமாமா கதை அல்ல. fish pond ஒன்று தோட்டத்தில் இருக்கிறதே.. அதைச் சொல்கிறேன். :)

 
மகனை நச்சரித்து ஒரு விதமாக நீர்வீழ்ச்சியைச் சரி செய்ய வைத்தாயிற்று. இப்போ பூனைகளைக் காணவில்லை.

கட்டுக்கடங்காமல் வளர்ந்திருந்த நீர்த்தாவரங்கள் ஃபில்டர் உள்ளும் வளர்ந்திருந்ததுதான் நீரோட்டத்தைத் தடை செய்திருக்கிறது என்று மகன் சொன்னார்.


ஒரு கருப்பு தங்க! மீனும் ஒரு தங்க தங்க மீனும் மட்டுமே மீதம் இருந்தன. மீதி எல்லாம் பூனைகள் வயிற்றிலோ தெரியவில்லை.

இப்போ ஒரு சோடி தங்க மீன் குஞ்சுகள் வாங்கி விட்டிருக்கிறோம். மீதி பிற்பாடு பார்த்து விடலாம். ஃபில்டர் சுத்தம் செய்ய வேண்டி இருந்ததால் செடிகளும் கொஞ்சம் பிடுங்கப்பட்டு விட்டன. 

சல சலவென நீர் வழியும் ஓசை காதுக்கு இதமாகத் தான் இருக்கிறது.

இப்போ பூனைப் பிள்ளை எங்கே இருக்கிறார் என்று நினைக்கிறீர்கள்! பக்கத்து வீட்டு கார்டன் ஷெட் கூரை மேல். அங்கிருந்து தங்க மீன்களை வேடிக்கை பார்க்கிறார், என்னையும்தான். ;)

16 comments:

  1. உங்க தங்க மீன் தடாகம் ரொம்ப நல்லா இருக்கு

    ReplyDelete
  2. பங்களா வாசியா நீங்க?

    ReplyDelete
  3. நன்றி சாரு. அடிக்கடி இந்தப் பக்கம் வந்து பார்க்கிறீர்கள். ;) இது 2006 ல் மூத்தமகன் ஆசைப்பட்டு அமைத்தது. முழுவதும் அவரே திட்டமிட்டார். கிட்டத்தட்ட முழு வேலையும் அவரேதான் செய்தார்.

    ReplyDelete
  4. அண்ணாமலையான், ஓலைக்குடிசை ஆயினும் மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்குமானால் அது மாளிகைதானே! அந்த வகையில் நான் எங்கிருந்தாலும் பங்களாவாசிதான். :) இப்போது உள்ளது சிறிய பலகை வீடு. ஊரில் இருந்த வீட்டோடு ஒப்பிட்டால் மூன்றில் ஒரு பங்கும் வராது. அதே போல்தான் தோட்டமும். படங்கள் உங்களைப் பங்களா என்று நினைக்க வைக்கிறதா! ;) இமா எப்பொழுதும் சிரித்துக் கொண்டு இருக்கும் ஒரு எளிமை விரும்பி. ;)

    ReplyDelete
  5. ஆமாம் இமா இயற்கையான உங்கள் எழுத்து நடை மற்றும் போட்டோக்கள் என்னை இம்ப்ரெஸ் பண்ணிட்டு.

    ReplyDelete
  6. //மீதி எல்லாம் பூனைகள் வயிற்றிலோ தெரியவில்லை.//
    எனக்கென்னவோ அதிரா மேலே தான் சந்தேகம். பிடித்து விசாரியுங்கள்.

    ReplyDelete
  7. உங்க மீன் தடகம் ரொம்ப அழகா இருக்கு இமா.பொறாமையும் கூட.....

    ReplyDelete
  8. எங்க வீட்டிலும் ஒரு ஃபவுண்டன் இருக்குன்னாலும், இதைப் பார்க்க எனக்கு பொறாமையா இருக்கு:-) மீனென்றால் பூஸுக்குத்தான் எப்பவும் விருப்பம். ஜாக்கிரதை இமா!

    ReplyDelete
  9. ரொம்ப அழகா இருக்கு, பொறாமையா இருக்கு:-)

    ReplyDelete
  10. உங்க வார்த்தைகள் ரொம்பவும் டச்சிட்டன இமா.. சந்துவின் மனதை..//ஓலைக்குடிசை ஆயினும் மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்குமானால் அது மாளிகைதானே!//

    தடாகத்தில் மீனைக் காணக் கிடைக்கவில்லை. இன்னும் கொஞ்சம் க்ளோஷப் ஷாட் ப்ளீஸ்..

    இமா.. ப்ளாக் ல இருக்கற ஃபிஷ் பான்ட் ல கூட மீன் குறைஞ்ச மாதிரி இருக்கு.. எதுக்கும் நம்ம பூஸார் நாயார் இவங்க மேல ஒரு கண் வையுங்க :) நான் சுத்தமான வெஜிடேரியன் :)

    ReplyDelete
  11. //உங்க வார்த்தைகள் ரொம்பவும் டச்சிட்டன இமா.. சந்துவின் மனதை.// அடடே..யாரிந்த 'சந்து' ஆன்ட்டி?? புதிதாக உங்க உலகத்துக்குள் நுழைந்த 'ஜந்து'வோ?? :D x 5

    ஊஹும்..படத்தைப் பாத்தால் எங்கோ பார்த்த பரிச்சயமான படமாய்த்தான் இருக்கு..ஓ..நம்ம எல்போர்டு!! அடடே..எப்போல இருந்து சந்து ஆனீங்க எல்போர்டு? :)

    எத்தனாவது குறுக்கு சந்து? ஜீனோ அண்ணாத்த சூரியக் குடும்பத்தில மூணாவது குறுக்குசந்து:)ல வசிக்கிறார்.
    நீங்க எத்தனாவது குறுக்கு சந்து அல்லது நெடுக்கு சந்து எண்டு சொன்னால் ஜீனோ உங்களை விசிட் பண்ணுவார்!:D x 25

    //நாயார் மேல ஒரு கண் வையுங்க // பாருங்க ஆன்ட்டி..உங்களை ஒரு கண்ணோட சுத்தச் சொல்லறாங்க..

    ஹைய்யா..பத்த வெச்சாச்சே.. இனி ஜாலியா குளிர் காயலாம்..
    ஊ..லலல்லா!! ஓ..ஹூ...லலல்லா!! ஹூலாலல்லால்லா!!

    ஆன்ட்டி..செயற்கை நீரூற்று இயற்கை அழகுடன் மிளிர்கிறது..வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. இமா எப்பொழுதும் சிரித்துக் கொண்டு இருக்கும் ஒரு எளிமை விரும்பி. ;)/// Please!!! Please.. no comments from athiramiya.

    வச்சிருப்பதோ, ரெண்டே ரெண்டு தங்கமீனுக்குட்டிகள்தான்.. அதுக்குள்ள.. வாறவை போறவைக்கெல்லாம்... பூனை பிடிச்சதோ பப்பி பிடிச்சதோ என ஆராய்ச்சிபண்ணுற வேலையாக்கிடக்கு.

    இமா உங்களுக்குத் தெரியுமோ, பூனையார் வேலியில் இருப்பது.. ப்சிப் வந்து மீனைக்கொத்தாமல் பாதுகாக்க..

    ReplyDelete
  13. இமா... நான் ~கால்~ வச்ச ~வனி~ யைத் தேடிக்கொண்டிருக்கிறன்.. உங்கட பக்கம் வந்தால் ஒருக்கால் பிடிச்சுத்தாங்கோ பிளீஸ்!!

    ஏன் உங்கட செல்ல மருமகன் ஊ... கொட்டுறார் இமா? ஒருவேளை பெல்ட் போட்ட கோட்சூட்டினுள் நீங்கட வண்டு பூந்திட்டுதோ..... ///ஊ..லலல்லா!!//.. எனக்கெதுக்கு ஊர்வம்பு...

    ReplyDelete
  14. இமா, அதிரா என்னை பிடித்து தர சொல்கின்றார். என்னை பிடிக்க வேண்டாம். டிக்கெட் அனுப்புங்கோ நானே வருகிறேன். நானும் உலகம் சுற்றி பல மாதங்களாகி விட்டது.

    //இமா ஒரு எளிமை விரும்பி//
    எங்கேயோ தங்கச்சுரங்கம் பக்கத்தில் கால் கடுக்க நின்ற இமாவோ எளிமை விரும்பி. அது சரி.........இமா அடிக்க வர வேண்டாம்.

    அதிராவால் தேடப்படும்.....வாணி

    ReplyDelete
  15. நன்றி அண்ணாமலையான். ;)

    ~~~~~~~~~~

    பாராட்டுக்குக் நன்றி மேனகா, சுஸ்ரீ.

    ~~~~~~~~~~

    சந்தனா, க்ளோசப் ஷாட் எடுக்க க்ளோசாப் போனால் தண்ணிக்க நான் விழுந்து க்ளோசாப் போயிருவன் எண்டு பயமாக் கிடக்குது. அவங்களும் சட்டென்று 'ஃபார் எவே' போயிருகினம். ட்ரை பண்றன். (தண்ணிக்க என் முகம் தெரிஞ்சுரும் எண்டதும் ஒரு பயம்,) ம்ம்... முன்னாலேயே மீன் குறைஞ்சு தான் இருந்துது. ஆனால் பப்பி வெஜிடேரியன் எண்டு தெரியும். பூசிலதான் ஒரு ....... ;) செல்வியும் சொல்லி இருந்தா. இனிக் கவனமா இருக்கப் போறன்.

    ~~~~~~~~~~

    'எல் போர்ட்' ஏதோ 'சந்து'ல முட்டிக் கொண்டு நிக்குது போல ஜீன்ஸ் போட்ட ஜீனோ. வாழ்த்துக்கு நன்றி, ஆனாலும் இப்ப எதுக்கு ஊ.....ளையிடுறீங்கள்!!!

    ~~~~~~~~~~

    நீங்கள் கமண்ட்ஸ் சொல்லாமல் இருக்கிறதே ஒரு கமன்ட் தானே அதீஸ். ;) ஒரு திருத்தம், 1+1+1+1=4.
    ம்... சொல்லவேணும், முன்னம் ரெண்டு கடற்காகம் வந்து திரியும். இப்ப வாறேல்ல.
    என் செல்ல மருமகனை இனி நான் பகிடி பண்ண மாட்டன். அவர் அங்க ஆமிக்காரன் உடுப்புப் போட்டு என்னைப் பார்த்துப் பல்லக் காட்டினவர், பயந்து போனன். வேணாம், எனக்கெதுக்கு ஊர் வ.....!!! ;))) வாணி வந்திட்டா மொப்ஸ். நீங்களே பிடிச்சுக் கொள்ளுங்கோ.

    ~~~~~~~~~~

    அது முலாம் பூச மட்டும்தான் வாணி. எனக்கு இமிடேஷன் நகைகள்தான் விருப்பம்.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா