நான் எதிர்பாராத ஒருவரும் அழைத்தார். என் சின்ன மகனது நண்பரின் தாயார் அவர். அவர்களுக்காக நான் அனுப்பி இருந்த நத்தார் அன்பளிப்பு அவருக்குப் பிடித்திருந்ததாகச் சொன்னார். வெகு நேரம் பாராட்டிப் பேசினார். செய்முறை பற்றி எல்லாம் விசாரித்தார். இதை ஒரு தொழிலாகச் செய்யலாமே என்றும் ஆலோசனை சொல்கிறார், யோசிக்க வேண்டும்.
மூத்தவர் தோழருக்காகவும் ஒன்று அனுப்பினேன்.
அவரும் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துச் செய்தி அனுப்பி இருந்தார்.
அன்பளிப்பின் பெறுமதியை விட அவர்களுக்காக நான் சிரமப்பட்டிருக்கிறேன் என்பதுதான் அவர்கள் மனதைத் தொட்டு இருக்கிறது. அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவிட்டார்கள்.
அன்பளிப்பில் பெயர்களை எழுதி இருந்தேன். படத்தில் அவற்றை எடுத்து விட்டேன்.
செய்முறை சென்ற மாதம் அறுசுவையில் வெளியாகி இருக்கிறது.
தொடர்பு இதோ http://www
அழகான ஓவியங்கள் ஆன்ட்டி..நாம் மற்றவருக்குக் கொடுக்கும் மிகச்சிறந்த அன்பளிப்பு "நமது நேரம்" என்பார்கள்..நீங்கள் அந்த நேரத்தைச் செலவிட்டு நினைவுப் பரிசு கொடுத்திருக்கீங்கள்..பாராட்டுக்கள்! மேல வைங்கோ! :)
ReplyDeleteநன்றி ஜீனோ. நேற்று இன்னொருவரிடமிருந்தும் ஒரு தாங்க்யூ கார்ட் வந்திருக்கு.
ReplyDeleteHi Imaa!!!
ReplyDeleteWishing you and Your Family a Very Happy New year 2010!!!
Nice Blog dear !
வருகைக்கும், வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றி இலா. :)
ReplyDeleteஉங்களுக்கும் இந்த ஆண்டு சிறப்பானதாக அமைய வேண்டும், என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.