Sunday 24 January 2010

நுண்அலை மேடை

மீன் தொட்டியை நகர்த்திய பின்னும் இந்த உபகரணம் மட்டும் பழைய இடத்துக்குப் போகாமல் அதே இடத்தில் (அடுப்புக்குப் அருகில்) சில நாட்கள் இருந்தமை அருகே இருந்த 'எலிமன்ட்' (இதற்கும் பூனைக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை.) இரண்டும் பயன்படுத்துவதற்கு இடைஞ்சலாக இருந்தது. (இதற்குள் எந்த உபகரணம் என்று கண்டு பிடித்திருப்பீர்கள்.)

இந்த இடம் சமையலுக்கு வசதியாக இல்லாவிட்டாலும் சமையலறையில், நீள மேசையில் அதிக இடம் மீந்து இருந்தது மற்றைய வேலைகளுக்கு வசதியாக இருந்தது.

எல்லாவற்றையும் மனதில் கொண்டு பெரிய மகன் கொடுத்த யோசனை இது.

நேற்று சின்னவர், தன்  கம்பியூட்டர் மேசையை வேண்டாம் என்று சொல்லவும் (மடிக்கணணி வாங்கி விட்டார்) அதனைப் பிரித்தெடுத்து இப்படி ஆக்கியாயிற்று.

செயற்படுத்தியவர் கிறிஸ்.

இப்போ அடுப்பையும் முழுமையாகப் பயன் படுத்த முடிகிறது, மேலதிகமாக ஒரு குட்டி இடமும் கிடைத்திருக்கிறது.

8 comments:

  1. ம்ம் கிச்சன் மேனேஜ்மெண்ட்னா இதானா? ரொம்ப நல்லாருக்கு...

    ReplyDelete
  2. இந்த கிச்சன் சூப்பர்..... கலக்குரிங்க.... வாழ்த்துக்கள் இமா அம்மா....

    ReplyDelete
  3. ம்ம்.. பின் தொடர்ரீங்க அண்ணாமலையான். :) நன்றி.
    கிச்சன் மானேஜ்மன்ட் மட்டும் இல்லை, இது ஸ்பேஸ் மானேஜ்மன்ட்டும் கூட. (அதென்னவோ எதைப் பண்ணினாலும் இடம் போதவே மாட்டேன் என்குது.) :)

    ~~~~~~~~~~

    நன்றி ப்ரபாம்மா. ஆழ்கடல்ல என்ன நடக்குது? :)

    ReplyDelete
  4. எதுவும் நடக்கலை... இனிதான்.

    ReplyDelete
  5. //அதென்னவோ எதைப் பண்ணினாலும் இடம் போதவே மாட்டேன் என்குது//

    அதேதான்.

    நுண் அலை மேடை - ஓவன்க்கு மேடை என்ற வார்த்தையா இமா?

    ReplyDelete
  6. ஹுசேன்,

    இமா என்னவாவது எழுதுவன். நீங்கள்தான் படம் பார்த்துக் கண்டு பிடிக்க வேணும். :)

    (ஒவன் எண்டு போட மறந்துட்டனோ!!)

    ReplyDelete
  7. என்ன மாற்றம் செஞ்சீங்கன்னு புரியல இமா.. ஆனாலும் பார்க்க நல்லாயிருக்கு..

    ReplyDelete
  8. சந்தனா,

    முதல் அதே இடத்தில நேர மேசைல இருந்துது. இப்ப மேடை போட்டு அந்த இடத்திலும் பொருட்கள் வைத்து இருக்கு.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா