Saturday 30 January 2010

அறுவடை - 4

அதிராவுக்கு என்னே ஞானதிருஷ்டி என்று வியந்து கொண்டே.... 
 
இந்தப் படங்களை இடுகை இடுகிறேன். ;)
 இவற்றை நான் சமைக்குமுன், ஏதாவது செதுக்குதல் வேலையில் ஈடுபடலாம் என்று இருந்தேன். 
அதற்குள்...
தலைமைச் சமையற்காரர் முந்தி விட்டார். 
இன்று இதுதான் கறி.சாப்பிடுங்கோ. ;)

15 comments:

  1. யாருங்க அது தலைமை?

    ReplyDelete
  2. நல்லா இருக்குங்க.. அறுடை செய்து கறி சமைத்தது..

    ReplyDelete
  3. இப்படியே ஆசை காட்டறீங்களே இமா! எங்களுக்கும் கொஞ்சம் அனுப்புங்க:-)

    ReplyDelete
  4. இமா.. புகையுதே.. ஆமா இதென்ன காய்? சுரக்காய்க்கும் புடலங்காய்க்கும் நடுவே ஒரு அமைப்போடு?

    ReplyDelete
  5. இமா... ஞானதிருஷ்டிக்கும் சுரக்காயுக்கும் என்ன சம்பந்தம்??? ஓ.. அப்படி ஏதாவது இருக்குமோ???ஆனால், இந்த இரு சுரக்காய்களுக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கு... என்ன தெரியுமோ? இமாவையும் அதிராவையும் போல இருக்கு:)... ஆரும் குறுக்க பேசப்படாது...

    நானும் நட்டேன் இமா, பூ வந்து காய்க்கப்போன வேளை “ஸ்லக்” பிள்ளை கொடியை ஒட்ட கட் பண்ணிட்டார்:(:(.

    உங்கட “பூ”வுக்கு வஞ்சகம் செய்தாலும், வயிற்றுக்கு வஞ்சகம் செய்வதில்லை எனத் தெரியுது “டிஷ்” பார்க்க...

    இமா.. தலை + மை = தலைமை.. ஆம் ஐ ரைட்?

    அமெரிக்காவில புகைக்குதாம், அதால பிரித்தானியாவில இன்று புகைக்கவில்லையாம்...

    ReplyDelete
  6. அவர் எங்க வீட்டுத் 'தலைமை' அண்ணாமலையான். ;) கீழ நான் + 2 பேர் இருக்கோம்.

    ~~~~~~~~~~

    நன்று ஃபாயிஸா.

    ~~~~~~~~~~

    மயில்'ல வந்துட்டே... இருக்கு செல்வி.

    ~~~~~~~~~~

    'cucumber' எண்டு லேபிள்ள போட்டு இருக்கு சந்தனா.

    ~~~~~~~~~~

    அதிரா கதைக்கிற போது //ஆரும் குறுக்க பேசப்படாது...// ;D
    நல்ல வேளை அதீஸ் தலை + மை = 'ஹேர்டை' என்று சொல்லேல்ல. ;))

    ReplyDelete
  7. இமா என்னப்பா குக்கும்பர் தால்+ரொட்டி வைத்து குடுங்கோ உங்க தலமை அவர்களுக்கு பின்பு சொல்வார் வாவ் எப்பவுமே இந்த தால் வேண்டும் என்று.
    இந்த் ஸ்ப்ரிங்கில் அதிரா என்ன வெஜ் போட போறிங்க. இமாவின் கார்டனை பார்த்ததும் தான் நினைவு வந்தது, அதிராவின் கார்டனும், எங்க கார்டனும். இமா எனக்கு இந்த மாதிரி வீட்டில் நாம விதை போட்டு விளைத்து அதை பார்த்து மகிழ்வது ஒரு தனி சந்தோஷம் தான்.

    அடுத்த தடவை நேர நியூஸி வந்துட வேண்டியது தான்.

    ReplyDelete
  8. இமா படத்தைப் பார்த்து பொறாமையா இருக்குப்பா ...

    ReplyDelete
  9. சாப்பிட்டுப் பார்க்கிறேன் விஜி. ஆனால்.... நீங்க எதைச் சொல்றீங்க! ப்ரெட்டையா 'ரொட்டி'யையா!!

    ~~~~~~~~~~

    மேனகா, ஒரு தொட்டில நட்டுருங்க.

    ReplyDelete
  10. இமா அம்மா நான் சாப்பிட வந்துட்டேன். இது சுரக்காய் தான்?

    ReplyDelete
  11. இமா ரொட்டி என்கிற சப்பாத்தியை.

    ReplyDelete
  12. என் சமையலறையில், என் வீட்டுத் தோட்டத்தில்

    இப்படித் தான் இமா லேபிள் ஆயிருக்கு.. இல்லாட்டி இவ்வளவு தான் தெரியுது.. :)

    ReplyDelete
  13. மீதி வரிகளையும் பாடீரச் சொல்றீங்களா சந்தனா?

    ReplyDelete
  14. பிரபா, வாங்கோ வாங்கோ. ;)

    ~~~~~~~~~~

    இங்க நான் மட்டும்தான் சப்பாத்தி சாப்பிடுற ஆள் விஜி. ;(

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா