என் அயலார் பற்றி ஆல்பத்தில் ஜீனோ கொடுத்திருந்த கருத்தினைப் படித்ததில் இருந்து எல்லா அயலாரையும் பின் தொடர்கிறேன். :)
இதோ கருப்பாக இல்லாதோர் புகைப்படங்கள்.
நீர்!வீழ்ச்சியில் அமர்ந்திருப்பவர் யாரெனத் தெரியவில்லை.
வீடு வாங்கி வந்தபோது வெறுமனே ஒரு புற்தரையும் இரண்டு ப்ளம் மரங்களும் மட்டுமே நின்றன. பிறகு மெதுவாக ஒரு குட்டித் தோட்டம் ஆரம்பித்தேன். நிறைய வேலை இருந்தது. ஆனால் வேலை மும்முரத்தில் இருக்கையில் முதுகுக்குப் பின்னால் மெல்லிய மூச்சுக் கேட்கும். திரும்பினால் பல்லைக் காட்டியபடி ஒரு பைரவர் நிற்பார். இந்தத் தொல்லையில் இருந்து விடுபடவேன்று வேலி எல்லாம் போட்டு முடியவும் பக்கத்து வீட்டிற்கு வாடகைக்கு வந்தவர் இந்த பிப்ஸ்க்விக். பிறகு நாய்க்குட்டிகள் யாரையும் இந்தப் பக்கம் காணோம்.
பிப்ஸ்க்விக்கை வளர்க்கும் அம்மணி சொன்னதிலிருந்து - இவர் குட்டியாக இருக்கையில் வீட்டுக்கு வந்த விருந்தாளி நாயார் இவரைத் துரத்த ஏற்பட்ட விபத்தில், பின்னங்கால் ஒன்று உடைந்து தகடு பொருத்தி இருக்கிறார். அது முதல் நாய்களைக் கண்டால் ஆகாதாம். அவர்கள் துரத்துமுன் முன்னெச்சரிக்கையாகத் தானே துரத்திவிடுவாராம்.
வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர்!!
ReplyDelete[என்னமோ நேற்று "என் பக்கத்தில்" பார்த்த மேரியேஜ் போட்டோல இருந்து பாரதி ஜீனோவை விடமாட்டேன் என்கிறார்! :) ]
இவர்கள் இருவரும் ஓகே:)-வா இருக்காங்க ஆன்ட்டி!..:) :) பிப்ஸ்விக் -ஐ விடவும் அனானி:) ரொம்ப க்யூட்டாய் இருக்கிறார்.
அப்புறம்,இங்கே இன்று வலை சரியில்லை..ஒரு பதிவு போடவே போராட்டமாயிருக்கு..ஜிமெயில் சுத்தமாய் வொர்க் ஆகலை..சரியானபின் தொடர்வோம்!:)
இமா - ஜீனோ vs பிப்ஸ்விக் மோத விட்டுப் பாக்கனுமே :) யாரு யாரைத் துரத்தறாங்கன்னு :)
ReplyDelete//பிப்ஸ்விக் -ஐ விடவும் அனானி:) ரொம்ப க்யூட்டாய் இருக்கிறார்.// என்று ஜீனோ சொல்லி இருக்கிறார், பார்த்தீங்களா சந்தனா! :)
ReplyDeleteமோத விட்டுப் பார்த்துரலாமா!! :)
தோட்டத்தின் நடுவில் கியுட்டா போஸ் கொடுக்கிறார்,
ReplyDeleteஇமா அக்கா அதிராவின் பிரெண்ட் இங்கு எப்படி வந்தார்.
இங்க ஒரு 'அதிரா'ஸ் ஃப்ரென்ட்ஸ்' பாடாலியனே இருக்கு ஜலீலா. :)
ReplyDelete