Monday 18 January 2010

குக்கீஸுக்கு என்ன ஆச்சு!


அதிராவுக்காக ஒரு பதிவு














பொங்கலுக்கு முதல்நாள், அதுதான் சில்வர் ஷார்க் காலமான தினம் வெதுப்பிய ஒரேஞ் ஃப்ளேவர்ட் கேக் இது. என்னை எதிர்பார்க்காமல் நன்றாக வந்திருந்தது.

அப்போ இருந்த சோகத்தில் எதையும் ரசிக்க முடியவில்லை. ;(














வடை - எங்கள் வீட்டாருக்கு இப்படித்தான் பிடிக்கும், நல்ல முறுகலாக வரவேண்டும். இதற்காகவே குட்டிக் குட்டியாய்ப் போட்டுப் பொரிப்பேன்.















'குக்கீஸுக்கு என்ன ஆச்சு இமா?' என்று அதிரா கேட்டிருந்தார். அன்று 'அவனை' அணைத்து விட்டு வேலையைத் தொடரப் போய் விட்டேன். திரும்பி வந்து பார்க்கையில் அடியில் மிகக் கொஞ்சமாகத் தீய்ந்திருந்தது.  சற்று நேரம் கழித்து பின்னால் இருந்து 'இது எங்களுக்கா?' என்று ஒரு குரல் கேட்கவும் வேலை மும்முரத்தில் 'ம்' சொல்லி விட்டேன். நான் திரும்பிப் பார்க்கையில் தீர்ந்திருந்தது. :)

சுவை நன்றாக இருந்தது. மீண்டும் செய்ய வேண்டும். குறிப்புக் கொடுத்த தோழிக்கு நன்றி. :)

14 comments:

  1. இமா, உங்களுக்கு என் முதல் பின்னூட்டம்..இனிப்பாய் ஆரம்பிக்கிறேன்..

    ஆரஞ் கேக் அசத்தலா இருக்கு!அதெப்படி கேக் மீது அழகா கோடு போட்டிருக்கீங்க? கேக் பான்-ல இருந்த டிசைனா??

    வடைய போட்டோல இருந்து அப்படியே எடுத்து சாப்பிட முடிஞ்சா, எங்க ஊர் குளிருக்கு இதமா இருக்கும்! :)

    வாழ்த்துக்கள்..தொடருங்க உங்க பயணத்தை!!

    ReplyDelete
  2. ஹாய் மஹி,

    பின்தொடர்கிறீர்கள் என்பதைக் காலையிலேயே அவதானித்தேன். :) நன்றி.

    //கேக் மீது அழகா கோடு// இல்லை. அது கூலிங் ராக்கில் கவிழ்த்ததில் வந்த கோடு. :)

    உங்கள் சமையலை விடவா இந்த வடை நன்றாக இருக்கப் போகிறது! எடுத்துக் கொள்ளுங்க. :)

    ReplyDelete
  3. இதென்ன இமா.. புதுப் பழக்கம்.. சமைக்க எல்லாம் ஆரம்பிச்சிருக்கீங்க :)

    ReplyDelete
  4. எத்தனை நாளைக்குத்தான் மத்தவங்க சமையலை சாப்பிடுறது. :)

    ReplyDelete
  5. இமா, கருகிய குக்கீஸ் அதிராக்கு%), முறுகல் வடை பிள்ளைகளுக்கு, அந்த அழகிய கேக் யாருக்கு இமா? ..... க்கோ??.

    நீங்கள் அணைத்தபடியால்(நான் ~அவனை~ச் சொன்னேன்:)), சூடு அதிகமாகி குக்கீஸ் கருகிவிட்டதுபோலும்:).

    எப்பவுமே கருகிய எலியும், கருகிய குக்கீசும்தான் தாறீங்களே... எப்போ நல்ல எலி, நல்ல குக்கி தரப்போறீங்கள்?

    சில்வர் ஸார்க்கின் கவலை என மூக்கால அழுதழுதும், நல்ல நல்ல வெரைட்டி எல்லாம் செய்து சாப்பிட்டிருக்கிறீங்கள்போல... எனக்கெதுக்கு ஊர்வம்பு...

    இருப்பினும் அந்த வடை சூப்பர், எனக்கும் உப்படித்தான் விருப்பம். நன்றி இமா குக்கீசுக்கு... கடவுளே எங்கேயோ புகைக்குதே.. அதிரா எஸ்கேஏஏஏஏஏஏஏப்

    ReplyDelete
  6. அதீஸ்,

    நீங்கள் கேட்டபடியால்தான் குக்கீஸ் உங்களுக்கு. :) கேக் எல்லாருக்கும்தான்.. கீழ எழுதி இருக்கிறதை வாசிக்கேல்லையோ.

    ஹலோ! என்ன இப்பிடிச் சொல்லிப் போட்டீங்கள். அது உங்களுக்கெண்டே ஸ்பெஷலாச் செய்த எலி. நான் இப்ப போய்ப் பார்த்துக் கொண்டு வாறன், எனக்கு கறுப்பாத் தெரியேல்லயே!

    இதெல்லாம் பாதியில போய்க் கொண்டிருக்கேக்க தான் அந்த நிகழ்ச்சி நடந்தது அதிரா. ;(

    ம்ம்... கருகினால் புகை வருவது வழக்கம்தானே. :)

    ReplyDelete
  7. வெறுமனே படத்தை மட்டும் போட்டால் எப்படி? செய்வது எப்படி என்றும் எழுதியிருந்தால், நாங்களும் செய்து சாப்பிட்டிருப்போம்; உங்களுக்கும் வயிறு வலிக்காது!!

    ReplyDelete
  8. cake looks yummy!!! parcel please!1

    ReplyDelete
  9. சுஸ்ரீ, பார்சல் ஹுசேன் புறா சர்வீஸ்ல வருது. :D
    ஹுசேன், குக்கி ரெசிபி... அது வேற ஒருத்தரோடது. :) அதனால் இங்க சொல்லவில்லை. இமா வடைக்கு எல்லாம் ரெசிபி பார்த்து செய்றது இல்லை. :) இஞ்சி சேர்ப்பது பிடிக்கும். அடுத்த தடவை செய்றப்ப ஒரு ரெசிபி :) கொடுக்கிறேன்.
    கேக் ரெசிபி... என்ன இது! நீங்க என்னை கிண்டல் பண்றீங்களா!? :)

    ReplyDelete
  10. இமா அக்கான்னு கூப்பிடவா? ஏன்னா அந்த போட்டோவில் ஷூட் செய்வது பார்த்தா தங்கச்சி மாதிரி இருக்கு.


    கேக் சூப்பரா இருக்கு, கோடு போட்டு இப்படி துண்டு போட்டு வைத்து பார்த்து ஜொல்லு விட வைத்து விட்டீர்களே.

    ஆகா மொரு மொரு வடை யாரு அதிரா உடையதா

    கருகிய பிஸ்கேட்டும் ம்ம் மணமா தான் இருக்கு.

    ReplyDelete
  11. to ஜலீலா -

    "டிஷ்யூ..
    டிஷ்யூ....
    டிஷ்ஷ்...யூ....." ;)

    ReplyDelete
  12. உங்களுக்கு விருப்பமானதை எடுத்துச் சாப்பிடுங்கோ ஜலீலா.
    அது போல விருப்பமான மாதிரிக் கூப்பிடுங்கோ. :)

    //தங்கச்சி// :)
    ஜில்லென்று இருக்குது. தும்மல் கேட்டுதோ! :)

    ReplyDelete
  13. வடை பார்க்க அப்படி ஒரு அழகு,இந்த கலர் எப்படி வந்தது பொரித்த அழகோ,ஆரஞ்சு ஃப்லேவர்ட் கேக் பரிமாறிய விதம் அருமை,மேலே அந்த கோடு அட்ராக்டிவ். சாக்லேட் குக்கீஸ் என்று தான் நினைத்தேன்,அததனையும் எனக்கே எனக்கு.

    ReplyDelete
  14. 'kodu' was an accident. ;)

    ellaam unkalukkuth thaan, eduththukkanka Asiya.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா