Tuesday 30 August 2011

காத்திருப்பு!


இந்த ரெஸ்டோரண்ட்லதான் லஞ்ச் எண்டு சொன்னவர்.

இன்னும் ஆளைக் காணேல்ல. ;(

இங்க நல்ல காத்தா இருக்கு. சுகமாக் கொஞ்ச நேரம் இருப்பம்.

எவ்வளவு நேரம்தான் நான் காத்து இருக்கிறது!!! ;(
எங்க சைட் அடிச்சுக் கொண்டு இருக்கிறாரோ தெரியேல்ல. ;((
போய்த் தேடிக் கொண்டு வாறன்; பொறுங்கோ.

எங்க ஆளைக் காணேல்ல!! இங்கதானே இருக்கிறதெண்டு சொன்னவா!!

எங்க!!!

ஒரு வேளை!!!!! அங்கிள்தான் உரிச்சு வச்சுப் போட்டு சமைக்க குறிப்பு தேடுறாரோ!!!

பார்க்கிற பார்வையைப் பார்த்தால்... வண்டியையும் பார்த்தால்... என்னையும் பிடிச்சு ரோஸ்ட் பண்ணீருவார் போல கிடக்கு!

என்ன செய்யிறது நான் இப்ப!!!

இதென்ன!! உள்ள அவனில லைட் பத்துது. 
ஒரு வேளை!!!!
கடவுளே!!
அப்பிடி ஒண்டும் ஆகி இருக்கப்படாது. ;((

கொக்! கொக்!
எங்க எல்லாம் தேடுறது உங்கள!!
நீங்களும் உங்கட லஞ்சும். கொக்!
ஒண்டும் வேணாம்.
அந்த அங்கிளுக்குத் தெரியாம ஃபாம்ல போய்....

அங்க ஃபாமர் தாற மாஷையே சாப்பிடுவம் வாங்க.

இது பறவையூர்ல இருக்கிற பஸ் ஸ்டொப். ;)

Monday 22 August 2011

சின்னக் கைகள்

இதனை என் குட்டித் தோழி ஏஞ்சல் எனக்காக அனுப்பி இருந்தார்.
நடுவில் உள்ள இதழ்கள் செயற்கை மலர் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. சுற்றிலும் உள்ளவை காகித இதழ்கள். 'ப்ளாஸ்டிக் ஸ்ட்ரா' தண்டாகி இருக்கிறது. இலைகள், பூ எல்லாவற்றையும் அதனோடு 'செல்லோடேப்' கொண்டு இணைத்திருக்கிறார்.
இதுவும் ஏஞ்சல் வரைந்ததுதான். எழுத்து!! ம்!! யாரையோ பிடித்து எழுதவைத்திருக்கிறார். ;)

சின்னவர்கள் பெரிய வேலைகள் எல்லாம் களைக்காமல் செய்வார்கள்; சின்னக் காரியங்களுக்கு மட்டும் கை வலிக்கும். ;)

என்னுள் கெ.கி தாக்குதல் இம்முறை மிக அதிகமாக இருக்கிறது. ஓய்விலிருக்கிறேன். அடிக்கடி சிவா M.B.B.S அவர்களின் இலவச மருத்துவ ஆலோசனைகள் கிடைக்கிறது. ;)) ஏஞ்சல் தன் பங்குக்கு இவற்றை அனுப்பி இருக்கிறார்.

Sunday 21 August 2011

ஒரு முதல் முயற்சி

அறுசுவையில் இம்முறை திருமதி. செண்பகா பாபு அவர்கள் தண்ணீரில் ரங்கோலி போடக் காட்டிக் கொடுத்திருக்கிறார்கள். அழகாக இருக்கிறது.

என்னால் செய்து பார்க்கும் ஆவலை அடக்க இயலவில்லை. எப்போ கடைக்குப் போய் எப்போ எல்லாம் சேகரித்து! ஹும்! பொறுமை இல்லை எனக்கு. தவிர... இந்திய மொழிகளில் தமிழ் தவிர வேறு எதுவும் தெரியாது. சென்றவாரம் கோலப்பொடி தேடிப் போய் நொந்து வந்தேன். ;) மீண்டும் முயற்சிக்க வேண்டும்.

இருப்பதைக் கொண்டு சமாளித்திருக்கிறேன். எனக்குப் பிடித்த கண்ணாடி டிஷ் வாஸ்து பாட் (pot) ஆகிற்று.

கலர்ப்பொடி... சொல்லமாட்டேன். ;))

செண்பகா செய்து காட்டிய அளவுக்கு இல்லை என்றாலும்; முதல் முயற்சிக்குப் பரவாயில்லை என்று தோன்றியதால் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

எனக்கு இது போதும். சில தவறுகள் குறித்து வைத்திருக்கிறேன். அடுத்த தடவை சரிசெய்துவிடுவேன்.

மிக்க நன்றி செண்பகா & அறுசுவை. ;)

Tuesday 16 August 2011

அழகாக இருக்கும் நீலத்தும்பி! :)

இந்த இடுகைக்கு முதலில் "பறக்க இயலாத் தும்பி" என்று தலைப்பிட்டிருந்தேன். //தலைப்பை கொஞ்சம் மாத்துங்களேன் டீச்சர்! டைட்டிலே நெகடிவ்வா இருக்கு! :- ]// என்று மகி கருத்துச் சொல்லி இருந்தார். அவர் வேண்டுகோளை ஏற்று, சொல்லப்பட்ட கருத்திலிருந்த ஒரு வரியிலிருந்து தெரிந்து இப்போது தலைப்பு வைத்திருக்கிறேன். ;)))
பிரதி திங்களும் 7ம் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்கள் homework Sheet கையில் கிடைக்கும். இப்போது homework என்பது home learning என்று பெயர் மாற்றம் பெற்றிருக்கிறது. 

முடிப்பதற்கு ஒரு வாரம் தவணை; மறு திங்களன்று அதிகாலை வகுப்பாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் இந்த வேலைக்காக இரண்டு அப்பியாசப் புத்தகங்கள் வைத்திருப்பார்கள். ஒரு புத்தகம் திருத்தத்துக்காகக் கையளிக்கப்பட்டிருக்கும் அதே வேளை அடுத்த வார வேலைகளை அடுத்த புத்தகத்தில் செய்துகொண்டிருப்பார்கள்.

கொடுக்கப்படும் வேலைகள் அனேகம் அந்தந்தக் காலத்தின் நிகழ்வுகள் தொடர்பானதாக இருக்கும். ஒவ்வொரு வாரமும் நான்கு முதல் எட்டுக் கேள்விகள் வரை கொடுக்கப்படும். இவற்றில் தேடல்கள், ஆக்கவேலை, மனனம்செய்தல் என்று எல்லாவகை வேலைகளும் அடங்கும். 

கல்வியில் பின்தங்கிய நிலை மாணவர்களுக்கான வினாக்களும் இருக்கும்; வயதுக்குரிய அறிவுள்ளவர்களுக்கான வேலைகளும் இருக்கும்; தெரிவுப் பகுதியும் உண்டு. இறுதி வினா விசேட திறமையுள்ள மாணவர்களுக்கானது. இதைச் சிறப்பாக முடித்தால் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்.

எது எப்படியாயினும் - படைப்புத் திருட்டு (plagiarism) ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அதுபோல விபரங்களுக்கான ஆதாரங்கள் முடிந்தவரை கொடுக்கப்பட வேண்டும் என்கிற நிபந்தனையும் உண்டு.

சிறந்த வேலைகள் செய்திப்பலைகையில் அனைவர் பார்வைக்கும் வைக்கப்படும்.

இந்த வீட்டுக்கல்வி வேலைக்குப் புள்ளிகளும் உண்டு. தவணை இறுதியில் அதிக புள்ளிகளைப் பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.  

சென்ற தவணை, இறுதி வாரத்துக்கான வீட்டுக்கல்வி பூச்சிகள் பற்றியதாகவிருந்தது. அறை எண் 16ல் ஒரு சின்னவர் செய்து வைத்திருந்த தும்பி என் கவனத்தைக் கவர்ந்தது. 

காலை இடைவேளையின் போது தும்பியை நான் பார்ப்பதற்காக மீண்டும் எடுத்ததும் கையில் ஆப்பிள், பழரசம், கிழங்குப்பொரி என்று அனுபவித்துச் சுவைத்துக் கொண்டிருந்த மாணவர்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டார்கள். எல்லோரும் பாராட்டிப் பேச தும்பியின் படைப்பாளரான ஃபிஜி - இந்திய மாணவருக்கு முகம் பூரித்துப் போயிற்று. 

"புகைப்படம் எடுத்துக் கொள்ளட்டுமா?" என்று கேட்டேன்; சம்மதித்தார். கைப்பையில் துளாவ.. ;( காணோம் கருவியை. "விடுமுறை முடிந்து வந்ததும் எடுத்துக் கொள்கிறேன்," என்றேன். 

மூன்றாம் தவணை ஆரம்பித்த அன்று மதியம் வந்து நின்றார், "தும்பியைப் புகைப்படம் எடுப்பதாகச் சொன்னீர்களே!" அன்றும் கையில் புகைப்படக்கருவி இல்லை. 

இன்று எடுத்து வந்தேன்.

கடதாசியைச் சுருட்டி செல்லோட்டேப் போட்டு ஒட்டி உடலை அமைத்திருந்தார். OHPsheet பயன்படுத்தி இறகு அமைத்து அதன் மெல்லிய ரேகைகளை marker கொண்டு வரைந்திருந்தார்.  
அந்த அறையில் தன் பெயர் எழுதிய ஓர் பலகைத் துண்டினை, இப் பறக்க இயலாத் தும்பி தன் கம்பிக் கால்களால் பற்றியபடி அழகாக நிற்கிறது.

Saturday 13 August 2011

_()_

ஒரு நாள் [=:-) ஒருத்தர் பொங்கல் பண்ணிச் சாப்பிட்டாங்க. :-) 

<3 ஆக எனக்கும் ஒரு \__/ ல போட்டு 'சாட்' மூலம் அனுப்பினாங்க. கையால் சாப்பிட மாட்டேன் எனவும் 0__ அனுப்பினாங்க. அது பார்க்க சூப் 0__ மாதிரி இருந்துது, சொன்னேன். அட்ஜஸ்ட் பண்ணட்டுமாம்.

இன்னொரு நாள் வீட்டில் சோகம். ;-((
2 <*))))< இறந்துவிட்டது. என்ன காரணம் என்று தெரியவில்லை. ;( 
தூக்கி @}->-- செடிக்கு உரமாகப் போட்டுவிட்டேன்.

 சரி... வந்த எல்லோருக்கும் ஆளுக்கு ஒரு [_]D சூடான கோப்பி. இந்தக் கோப்பை விருப்பமில்லை என்றால் ம்... C[_] இல்லாவிட்டால்... உங்களிடம் இருக்கும் கோப்பையைக் கொண்டு வாங்கோ.

ஐம்பதாவது பிறந்தநாளுக்கு ஒரு ப்ரேஸ்லட் செய்யலாம் என்று இருக்கிறன். எந்த டிசைன் நல்லா இருக்கும்!! ooo-((()))-((()))-((()))-((()))-(O)-((()))-((()))-((()))-((()))-ooo?

ooooo-<<<<<<<<<<<<(O)>>>>>>>>>>-oooooo?

 ;?)   ;-{)   ;-) 
உங்களுக்கும் வேலை தருகிறேன். வாங்க... வந்து உங்கள் திறமையையும் காட்டுங்க. ஆனால்... அங்க இங்க இருந்து சுட்டுக் கொண்டு வரப்படாது. சுட்டால் எங்க சுட்டது என்று சொல்லவேணும்.

_(((0)))_     = தாமரைப்பூ 
(/\'o'/\)     = வௌவால் (திருத்தம் சொன்னால் ஏற்றுக்கொள்வோம்.) 
C?>      = !! குருவி(த்தலை)
=' '   = தீபம்

கைவசம் நிறைய இருந்தாலும் உங்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்க விரும்பி... இங்கே நிறுத்துகிறேன். எங்கே ஆரம்பியுங்கள் பார்க்கலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரெடி... ஸ்டார்ட் .....

....._\____________________,,__
..../ `--│││││││││----------------------_]    டுமீல்...
.../_==o ____________________
.....),---.(_(__) /
....// (\) ),------
...//___//
../`----' / ...
./____ / ... .

ராஜேஷ் போட்டியை ஸ்டார்ட் பண்ணி வைச்சுட்டு...
இமாவுக்கு c[_] டீ கொடுத்துட்டு...

       ˛˚˛ * _Π_____*。*˚
  ˚ ˛ •˛•˚ */______/~\。˚ ˚ ˛
˚ ˛ •˛• ˚ | 田田 |門|       ...ல {(>_<)} ....ல பாட்டு கேட்டார். ;)

அதையும் மீறி வெளிய சத்தம் கேட்டதால்...
@-_-@ (d[-.-]b கோவிச்சுக்கிட்டாங்க. (அவங்க யார்???
ஆனா கோவிச்ச ><((((º>  மட்டும் வலது பக்கம் போகுது. அது ஏன்!!! ;))) 

வந்து சொல்லுங்க ராஜேஷ். ;))