Saturday 28 January 2012
Saturday 21 January 2012
Friday 20 January 2012
என் சின்ன மகன்
ஓவ்வொரு வருட இறுதியிலும் வீட்டை ஒருமுறை முழுமையாகச் சுத்தம் செய்வது வழக்கம். சென்ற வருடம் ஊருக்குச் சென்றிருந்ததால் சில இடங்கள் தொடப்படாமல் அப்படியே கிடந்தன. இவ்வருடம் எப்படியாவது சுத்தம் செய்யலாம் என்று ஆரம்பித்து, பலவருடங்களாகத் தேங்கிக் கிடந்த பாடசாலைக் காகிதங்களைப் புரட்டி தேவையற்றவற்றை வீசிக்கொண்டிருந்தபோது.... கண்ணில் பட்டது இது. கூடவே இன்னும் சில.
நாம் நியூசிலாந்து வந்து இறங்கிய ஆரம்பகாலம், எப்போதும் பரபரவென்று இயங்கிப் பழகி இருந்த எனக்கு பொழுதுபோகவில்லை; கிறுக்கி வைத்திருக்கிறேன்.
பார்த்ததும் சந்தோஷத்தோடு சின்னவர் சொன்னார் இது தன் உருவம் என்று. வரைந்த தேதி 28/02/2000. (அப்போது சின்னவருக்கு 10 வயதும் 7 மாதங்களும் நடந்துகொண்டிருந்தது.) அரை மணி நேரம் எடுத்திருப்பேன் வரைய. மீண்டும் touchup செய்யவில்லை. கைவிரல்கள் அமைப்பாக வரவில்லை. சரிசெய்ய முயலவில்லை அப்போதும், இப்போதும். அவரது சிரிப்பு மட்டும் அப்படியே வந்து ஒட்டிக் கொண்டிருக்கிறது. ;)
பழுப்பு நிற மீழ்சுழற்சிக் காகிதத்தில் வரைந்தமையாலும் வரைந்து பல வருடங்கள் ஆகிவிட்டமையாலும் தெளிவு குறைவாக இருக்கிறது. இனிமேலாவது உள்ளது உள்ளபடி இருக்கட்டும் என எண்ணி ஸ்கான் செய்தேன்.
Sunday 15 January 2012
தாமதமானாலும்....
வாழ்த்துகிறேன் ;)
ஹும்! கருத்துப் பெட்டியின் / பெட்டகத்தின் இந்த அமைப்புப் பிடிக்கேல்ல. கூகிளார் தந்த பிறந்தநாள் பரிசு என்று நினைக்க முடியேல்ல. சிவப்பு நிறம்... எழுதுறதுக்கு இல்லை; திருத்துறதுக்கு மட்டும்தான் பாவிப்பன். கர்ர். ஆனால் இப்ப திருத்திறதுக்கு நேரம் போதேல்ல + என்ன செய்யுறது எண்டும் தெரியேல்ல. மெதுவாகப் பார்க்கிறன், அதுவரைக்கும் என்னோட பொறுத்துப் போவீங்கள் எண்டு நம்புறன்.
மடிக்கணனியார் குட்டி நித்திரைகொண்டு நேற்று இரவுதான் எழும்பி இருக்கிறார். பிறகு நான் நித்திரையாப் போனன். கனபேரோட தொடர்பு விட்டுப் போச்சுது. ஒருவருக்கும் பொங்கல் வாழ்த்தும் சொல்ல முடியேல்ல. ஆனால் இமா மனதுக்குள்ள சொன்னனான், ம். நல்ல சந்தோஷமாக் கொண்டாடி இருப்பீங்கள்.
இப்ப தாமதமானாலும்... சொல்லிப் போட்டுப் போறன்...
பொங்கல் கொண்டாடும் / கொண்டாடிய அனைவருக்கும்
என் மனமார்ந்த
தைத்திருநாள் வாழ்த்துக்கள்.
அன்புடன்
இமா
Friday 13 January 2012
வலையுலக உறவுகளுக்கு நன்றி ;)
Have a feast! ;)
வாழ்த்திய அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
எங்கும் என் பிறந்ததேதியை வெளியிட்டதில்லை. ஆனாலும் சிலர் எப்படியாவது மோப்பம் பிடித்துவிடுகிறார்கள். ;) சென்ற வருடம் 'அமைதியாக இருக்கவேண்டும்,' என்று சிவாவை எச்சரித்திருந்தேன். இம்முறை வேலைப்பழு... மறந்துவிட்டது. என்னிடம் திருத்ததிற்காக வந்திருந்த இடுகையை அவசரமாக ஒரு பார்வை பார்த்துத் திருத்தி அனுப்பிய பின்பும்.... "எடிட் பண்ணிட்டுப் போடுறேன்," என்று சிவா சொன்னதன் கருத்து இதுதான் என்று இடுகை வெளியானதும்தான் புரிந்தது. ;))
வேண்டாம் என்று தோன்றினாலும்... சந்தோஷமாக இருந்தது / இருந்தேன் என்பதை மறுக்கமாட்டேன். ;)
- 'என் பக்கம்' முகப்பில் பளபள பட்டாம்பூச்சியும் அழகு தங்க ரோஜாச்செண்டுமாக வாழ்த்திட்டு மகிழ்வித்த அன்புத்தோழி அதிரா
- அதிகாலை தொலைபேசியில் அழைத்து வாழ்த்தி மகிழ்வித்த வலையுலகத்தோழி அம்முலு
- 'டிஸ்கி' போட்டு வலையுலகுக்கெல்லாம் என் பிறந்தநாளை பறைசாற்றி வைத்த செல்லக்குட்டி சிவா ;) & அங்கு வாழ்த்தியோர்
- ARUSUVAI-யில் அமைதியாகப் பதிவிட்டு வாழ்த்திய மயில்
- நிலாவுக்கு உதவியாக இருந்ததுபோலவே... எப்போதும் ரகசியமாக எனக்கும் உதவியாக இருந்து ஆலோசனைகள் உ(கு)ரைக்கும் ஜீனோ ;)
- தொலைவிலிருந்தாலும் மறவாமல் நினைவு வைத்து வாழ்த்துச் சொன்ன அன்புமகன் அருண்
- கருத்துப் பெட்டியில் வாழ்த்துரைத்தோர்
- 1,2,3 சொல்லி வாழ்த்தியவர்கள் - முக்கியமாக VGK அண்ணா
- மின்னஞ்சலில் வாழ்த்தியோர்
- முகப்புத்தகத்தின் மூலம் அமைதியாக வாழ்த்தியோர்
- வேறு யாரையாவது விட்டிருந்தால்.... (அவர்கள் அது தற்செயலாக நிகழ்ந்தது மட்டுமே, என்று கொள்ளுமாறு வேண்டி....)
Tuesday 10 January 2012
Sunday 8 January 2012
மியாவ்வ்!!
24/12/2011 - மதியம் கிறிஸ்மஸ் மரம் வைத்துக்கொண்டிருந்தோம். விருந்தினர் வந்தனர். அவர்கள் சென்றதும் தேநீர்க் கோப்பைகளை எடுத்து வைப்பதற்குள்... மேலே சாண்டலியரில் இருந்து ஒரு தூக்கணம் விழுந்து 3 துண்டாகிப் போனது சோசர். ;(
Subscribe to:
Posts (Atom)