சாத்தாவாரி இலைக்குப் பெயர் சொல்ல முனைந்த அனைவருக்காகவும் இந்த இடுகை.
2007 செப்டெம்பரில் கான்பரா சென்றிருந்தோம். நண்பர் Royal Australian Mint -க்கு அழைத்துப் போனார். அன்று ஏதோவொரு காரணத்தால் பல பிரிவுகள் மூடி இருந்தது. இருந்தாலும் என் சின்னவர் கண்ணில் இந்த ஆல்பம் பட வாங்கிவந்தோம். என்னிடம் இருந்த நாணயங்களுக்கு அது போதாதென்று தெரிந்தது. மேலதிகமாக ஒரு refill வாங்கினோம்.
ஒரேயளவான நாணயங்கள் அவற்றுக்கான பைகளில்.
'ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம்,' போல coin album ஒன்றுக்கு ஒரு தனிப் பக்கம். ;)
ஆல்பம் வைக்கும் இந்தப் பை செபாவின் அன்பளிப்பு
ஒன்றிரண்டு டோக்கன்கள் இருக்கின்றன. ;) வெலிங்டன் கேபிள் கார் மியூசியத்திலிருந்த இயந்திரத்தில் நான் அடித்தெடுத்த செப்புத் தகடும் இருக்கிறது.
இந்த அட்டைப் பெட்டி... சின்னவர் ஒரு கிறிஸ்மஸுக்கு எனக்கு வாங்கிக் கொடுத்த அன்பளிப்பு வந்திருந்த அட்டைப் பெட்டி.
2007 - South Island விடுமுறையின்போது சின்னவர் வாங்கிக் கொடுத்த notepadகள்.
28/01/2011- சென்னை விமானநிலையத்தில் வாங்கியது.
சட்டத்திலுள்ளது, அவர் லண்டனுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது வாங்கிவந்தது.
'கலெக்டபில்ஸ்' எங்கு கண்டாலும் வாங்கிச் சேர்ப்பேன்.
'கலெக்டபில்ஸ்' எங்கு கண்டாலும் வாங்கிச் சேர்ப்பேன்.
ஒருமுறை என் சேகரிப்பைப் பார்த்த நண்பரொருவர் தனக்குத் தெரிந்த நாணய விலைமதிப்பீட்டாளர் ஒருவரை அழைத்து வந்தார். விலைமதிப்பான நாணயங்கள் என்றில்லாவிடினும் 'என் பல வருடசேமிப்பு' என்பதற்கான பெறுமதி உண்டல்லவா? அவரது அறிவுறுத்தலின்படி அப்போதிருந்து இவற்றை வீட்டில் வைப்பதில்லை.