இதற்குச் சீமாட்டிவண்டு என்று பெயரிட்டவர்.... வானதி.:-)
பொன்வண்டானால் பொன்னிறமாக இருக்க வேண்டும். பெண்வண்டானால்... (ladybug) ஆணாக இருத்தலாகாது. :) இது பொரிவண்டு என்று நண்பரொருவர் சொன்னார். என்னைப் பொறுத்தவரை... இவை பின்வண்டுகள் - pin cushions ;)
நீங்கள் என்ன பெயர் சொல்கிறீர்கள்!!
முதல் முறை செய்த வண்டு... வயிற்றில் 'வெல்க்ரோ' ஒட்டி வைத்திருந்தேன். வெல்க்ரோவின் மறுபாதி தையலியந்திரத்தில் இருக்கும். வேலை நேரம் அங்கே வண்டார் ஒட்டிக் கொள்வார். மீதி நேரம் மேசையில் இருப்பார்.
சில மாற்றங்களோடு இரண்டாம் முறை செய்த வண்டிற்கான செய்முறை இங்கே
அப்படியானால் இது!!! :-)
```````````
ஒரு வருடத்தில் 365நாட்கள். இது 365வது இடுகை என்கிறது என் கணக்கு. இத்தனை வருடத்தில் ஒரு வயதுதான் ஆகி இருக்கிறதா என் உலகிற்கு! ஹ்ம்! ;(