Saturday 28 July 2012

தொடருகிறேன்... ஒரு வளையம்

தலைப்பு.... கல்கி படம் பார்த்ததன் விளைவு. ;)
வளையம்.... மஹிஸ் ஸ்பேஸ் பார்த்ததன் விளைவு.
எதற்கென்று தெரியாமல் சேமிப்பில் இருந்தது இந்தக் காகிதம்; எடுத்துக் கிழித்து மடித்தேன்.
மகி பிடித்தது போலவே பிடித்துப் படம் போடாவிட்டால், எப்படித் தொடர்பதிவாகும்!! ;))

Friday 27 July 2012

பூ மீது யானை!!! கார் மீது காண்டாமிருகம்!!

பூ மீது யானை, பூ வலியைத் தாங்குமோ!!!
பாடல் கேட்கும், காட்சி பார்க்கும் ஆசையில் இணையத்தில் தேடினேன்.

கிடைத்தது.... இந்தப் பூ மீது யானை. ;)

மால்குடி சுபா பாடிய 'பூ மீது யானை' பாடற்காட்சி பார்க்க யாராவது உதவுவீர்களா!!

இடுகை சிறிதாக இருப்பதால்... என் கடந்த விடுமுறையில் நான் சிறைப் பிடித்த.... 'கார் மீது காண்டாமிருகம்' உங்கள் பார்வைக்கு.
;) வெலிங்டனில் உள்ள மியூசியம் ஹோட்டல் வாயிலில் நிற்கும் காண்டாமிருகம் இது.
28 / 07 / 2012 பி.கு:- அந்த 'நீர்யானை' ஹோட்டல் வாசலில் மேலே நின்றது. கார் தெருவைத் தாண்டி தொலைவில் நின்றது. இமா நின்றது அதிலிருந்து மிகத் தொலைவில். உயரம் பொருத்தமாக வரும் விதமாக என் உயரத்தைச் சரிசெய்து ;) எடுத்தது இந்தப் படம்.

Tuesday 17 July 2012

கரும்'பூ'

என் இலங்கை மாணவர் ஒருவர் (உறவினரும் கூட) முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்த இடுகையொன்று என்னைக் கவர்ந்தது. கரண்டிகளும் வெற்றுப் போத்தலொன்றும் கொண்டு ஆன விளக்கு அலங்காரம் அது. கோமதி கூட சமீபத்தில் பகிர்ந்திருக்கிறார்.

மின்விளக்கின் சூட்டிற்கு ப்ளாத்திக்கு உருகி விடும் என்கிற பயம் இருந்தது. அப்படி ஆனால் என் பிரயாசை, நேரம் எல்லாம் வீணாகிவிடும்; ஒரு 'வாஸ்' செய்யலாம் என்று கரண்டிகள் சேகரிக்க ஆரம்பித்தேன்.


கிடைத்த கரண்டிகளை அவ்வப்போது வெட்டி வைப்பேன். மெதுவாக நகர்ந்துகொண்டு இருந்தது (இருக்கிறது) வேலை.

இடை நடுவே 'டெய்ரி' வைத்திருக்கும் தோழி ஒருவர் தொலைபேசியில் அழைத்து... "யோகர்ட் தொகுதி ஒன்று காலாவதியாகிவிட்டது. விநியோகஸ்தர்கள் தூக்கிப் போடச் சொல்கிறார்கள். கரண்டிகள் உங்களுக்கு வேண்டுமா?" என்றார். "நிறைய வேண்டும்," என்றேன். இவற்றைக் கொண்டு என்ன செய்தேன் என்பதை அறிய....
http://www.arusuvai.com/tamil/node/23289 பார்க்கவும்.

மின்விளக்கு அலங்காரம்தான் இன்னமும் பாதி வழியில் நிற்கிறது. ;( எங்கள் பாடசாலை சிற்றுண்டிச்சாலை ஊழியரிடம் நாளை விசாரிக்கப் போகிறேன். எனக்கு அதிஷ்டம் இருந்தால்... ;) அவர்களுக்கும் ஏதாவது காலவதியாகும். ;)

Friday 13 July 2012

நியூஸிலாந்தில் உலகப் பிரசித்தி பெற்றது...

சென்ற இடுகையின் தொடர்ச்சியாக வருகிறது இது.

அது யூ ட்யூப் மூலம் கிடைத்தது.

இது என் சிந்தனையில் உதித்தது.
நான்கைந்து வருடங்களாக என் வளையல்களுக்கு அடைக்கலம் கொடுப்பவை இவைதான். பிரித்து வைக்கச் சுகமாக இருக்கிறது.
 
 L&P  - World Famous in New Zealand இந்த இணைப்பில் உள்ளவை 1970 - 1990 காலப்பகுதியில் பயன்பாட்டில் இருந்த போத்தல்கள். 

இது தற்போதையது.
 சுத்தம் செய்த போத்தல் ஒன்றின் அடிப்பாகத்தை.....
 
அதன் கடைசிக் கோட்டோடு கத்தரிக்கோலால் வெட்டிக்கொள்ள வேண்டும்.
 
இரண்டாவது போத்தலை வெட்டும் போது அதிலிருந்து ஒரு செ.மீ உயரமாக வைத்து வெட்டவேண்டும்.  கீழ்ப் பகுதியை மெதுவாக அழுத்திக் கொண்டு மூடிவிட்டால்  கச்சிதமாகப் பொருந்திக் கொள்ளும்.
இவற்றில் எனக்குப் பிடித்த முக்கிய விடயம் இவற்றை அழகாக  ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கலாம் என்பது.

Tuesday 10 July 2012

கூலா ஒரு கோலா

ஒரு தோழியும் நானுமாக யூ ட்யூபில் ஒரு முக்கிய ட்யூடோரியல் பார்த்து, இணையத்தில் தூய தமிழில் (புரியாவிட்டால் பரவாயில்லை. மீதியைத் தொடர்ந்து படியுங்க.) கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டிருந்த வேளை.. . சுவாரசியமாக தொலைபேசியில் இருவர் பேசுகையில் cross talk வருவது போல் குறுக்கிட்டது இந்த ட்யூடோரியல்.


பேசிக் கொண்டே... அரைக் கண்ணால் பார்த்து வைத்தாலும், மனதை விட்டு அகல மறுத்து உள் மனதில் உட்கார்ந்திருந்திருக்கும் போல. 

நாளை குப்பை சேகரிப்பு நாள், அதற்கான ஆயத்தமாக வீட்டின் பின்னாலிருந்த பின்னை (bin) ;) முன்னால் உருட்டி வந்து வைக்கும் வேளை விழித்துக் கொண்டது மனது. "திறந்து பார்!" என்றது. திறந்தேன். உள்ளே மூன்று வெற்று கோக் போத்தல்கள்.

ஹ்ம்! காசா பணமா! ஒரு முறை முயற்சித்துப் பார்ப்போம் என்று முயன்றதில்...
காசு போட ஒரு டப்பா!!

ராதாராணி கொடுத்த விருதைக் கொண்டாட ஆளுக்கொரு மிட்டாயாவது கொடுக்காவிட்டால் எப்படி!
நீங்களே பிரித்து ஒன்றே ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியைக் கட்டி வைத்துவிட்டுச் செல்லுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். நன்றி ராதா.

இது எனக்கு. ;)

Saturday 7 July 2012

விருந்தாய் வருது... விருது

கிரிக்கெட் வீரரான என் இளைய மகனுக்காக வார இறுதியில் செய்தது இது. செய்முறை விளக்கம் தற்போது அறுசுவையில்...
http://www.arusuvai.com/tamil/node/23239