நல்வரவு _()_
தினம் தினம் இன்று நாளை என்று கடத்திவிட்டு, இன்று எப்படியாவது திறப்புவிழா நடாத்திவிடுவது என்னும் முடிவோடு அமர்ந்திருக்கிறேன். :)
முதலில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஊரில் இருந்த மாதிரி இங்கு வருடப் பிறப்பு கலகலப்பாக எல்லாம் இல்லை, சாமப்பூசை கூட இல்லை. ஊரில் இருக்கையில் என்ன நடந்தாலும் பூசை முடிந்த பின், நேரே மாமி வீடு போய் விடுவோம். இரவிரவாக உறவினர் வருகை, வாழ்த்துக்கள் பரிமாறுவது, உபசரிப்பு - முக்கியமாக கைவியலம் கொடுப்பது, வாங்குவது என்று வருடம் ஆரம்பிக்கும்.
இங்கு அவையெல்லாம் அதிகம் இல்லை. புதுமையாக இம்முறை எனக்கு வலைப்பூவுடன் வருடம் பிறந்திருக்கிறது. :)
இங்கு 'சுயபரிமாறல்' முறைதான். வருக, சுவைத்து மகிழ்க. :)
தொடர்ந்து வரும் ஆண்டு உங்களுக்கு உயர்வு தரும் ஆண்டாக அமைய என் வாழ்த்துக்கள்.
அன்புடன்
இமா
பி.கு
வருகை தந்தமைக்கு நன்றியாக ஒரு சிறிய அன்பளிப்பு. :)
http://picasaweb.google.co.in/imimma/ThereSACatInTheNeighbourhood#
Thursday 31 December 2009
சின்னதாக ஒரு அறிமுகம்
சுருண்ட மாதிரி வெளியே வரும் பன்னக்குருத்து ஒவ்வொரு இலையாய் விரிந்து முழுவதாய் இலை அமைப்புப் பெறுமுன் அடுத்த குருத்து தலை காட்டுவது போல்தான் என் ரசனைகளும் - நிலை இல்லாதவை.
உலகின் உள்ளே சுற்றுலாப் போங்கள். பாருங்கள், படியுங்கள். பிடித்திருத்தால் (பிடிக்காவிடினும்) அடுத்த வலைப்பூவுக்குச் செல்லுமுன் உங்கள் பெறுமதியான கருத்துக்களை விட்டுச் செல்லுங்கள். ;)
வருகைக்கு நன்றி. - இமா க்றிஸ்
Subscribe to:
Posts (Atom)