Thursday 31 December 2009

சின்னதாக ஒரு அறிமுகம்

 
என் உலகம்... அழகான குட்டி உலகம்.  குடும்பம், வீடு, வேலை, நட்பு, பொழுது போக்குகள், அறுசுவை இணையத்தளம்... இப்போ இங்கே 'இது இமாவின் உலகம்'.

சுருண்ட மாதிரி வெளியே வரும் பன்னக்குருத்து ஒவ்வொரு இலையாய் விரிந்து முழுவதாய் இலை அமைப்புப் பெறுமுன் அடுத்த குருத்து தலை காட்டுவது போல்தான் என் ரசனைகளும் - நிலை இல்லாதவை.

உலகின் உள்ளே சுற்றுலாப் போங்கள். பாருங்கள், படியுங்கள். பிடித்திருத்தால் (பிடிக்காவிடினும்) அடுத்த வலைப்பூவுக்குச் செல்லுமுன் உங்கள் பெறுமதியான கருத்துக்களை விட்டுச் செல்லுங்கள். ;)

வருகைக்கு நன்றி. - இமா க்றிஸ்

1 comment:

  1. அறிமுகமே எதிர்பார்ப்புகளை தொடுக்கிறது வாழ்த்துகளுடன்....
    - கில்லர்ஜி

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா