Thursday 24 June 2010

அஞ்சலி, அஞ்சலி, புஷ்பாஞ்சலி @}->--


இமா சோகமாக இருக்கிறேன். ;(

 மழை, வெயில், பனி, பூனை, பூச்சி, சந்திரன்  என்று காட்சி எதுவானாலும் என்னோடு என் மூன்றாம் கண்ணாகப் பார்வையிட்டுப் படம் பிடித்துப் பாதுகாக்கவும் உதவிய என்... என்... என்.. உயிரினும் மேலான... புகைப்படக்கருவி சில வாரங்கள் முன்பாக 'என் சமையலறை'யில் அகால மரணமடைந்தார் என்னும் சோகச்செய்தியைச் சக வலைப்பதிவர்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்வு (பழக்கதோஷம், எப்பவும் சந்தோஷமாக இருந்தே பழகிப் போச்சு. ஹும்.) பெரும் சோகம் அடைகிறேன். ;;))))

(எல்லோரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி விட்டு அமைதியாக அமருமாறு தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன்.)

( இதுதான் சாட்டு என்று ஆளாளுக்குத்லைப்பு ஆரம்பித்து விட்டுத் 'தைரியமிருந்தால் தொடருங்கோ' என்று சவாலுக்கு இழுக்கலாம் என்று மட்டும் நினைக்காதைங்கோ. புதுசாச் சமைக்க ஏலாட்டிலும் ஃப்ரிஜ்ஜிலருக்கிறதை எடுத்துச் சுட வைத்தாவது பரிமாறிவிடுவேன் இமா. இது புதுவிதமான டிஷ். வாங்க சாப்பிடலாம்.) 

(முதலாவதாக எழுந்து அமர்பவர்க்கு வலையுலக மரபின்படி வடையும், இரண்டாவது ஆளுக்கு சட்னியும், மூன்றாமாளுக்கு... அது நிச்சயம் பூஸாகத் தான் இருப்பார், எனவே எலியும் அன்பளிப்பாக வழங்கப்படும்.)
இது கடந்த பெப்ரவரி மாதம் இங்கு 'ஹாமில்டன் தோட்டத்தைப்' பார்வையிடச் சென்ற போது என் கருத்தைக் கவர்ந்த தாவரம் இது.

'மூன்றில் ஒன்று' என்று எண்ணத் தோன்றியது எனக்கு.

இலையில் உருளைக்கிழங்குத் தாவரத்தின் சாடை, பூக்கள் நிறமும் தோற்றமும் ரோஜாதான். (ரோஜாதான் அதிரா & ஜீனோ.) காய்களைப் பாருங்கள். ஏதோ புதிய இனத் தக்காளி போலில்லை!!

சுற்றுமுற்றும் தேடினேன். எங்கும் பெயர்ப்பலகையைக் காணோம். ;( யாருக்காவது எதாவது தகவல் தெரிந்தால் சொல்லி உதவுங்களேன்.

அடுத்து ரோஜா எங்கு மலருமோ!!!!

Friday 4 June 2010

தடங்கலுக்கு வருந்துகிறேன்

தவிர்க்க இயலாத காரணங்களால் முன்பு போல் அதிகம் வர இயலாதுள்ளது. அனைவரும் மன்னிக்கவேண்டும்.
~~~~~~~~~
வந்தவர்களுக்கு ஒரு வேலையாவது கொடுக்க வேண்டாமா?  ;)
ஜெய்லானியின் 'முட்டை' இடுகை படித்ததன் விளைவு இது. ;)
இவர்...
moa - முன்னொரு காலத்தில் நியூசிலாந்தில் உலவிய பறவை.
 இப்போ அருங்காட்சியகங்களில்.