"மேசைல வைச்சா என்னடா! இப்போ எனக்கு தேவையில்லாத வேலை. முதுகு பிடிச்சுக்கப் போகுது."
சோம்பேறித்தனம் தான். நாலு ஆப்பிள் தூக்கினால்
முதுகு பிடிக்குமா என்ன! அவள் முணுமுணுத்துக் கொண்டு தூக்கி வைக்க பையன்
மெதுவாகச் சொன்னான், "ஆப்பிள் சாப்பிட்டா எதிர்ப்புச் சக்தி பெருகும்.
முதுகுப் பிடிப்பு வராதும்மா."
தொலைபேசி அழைத்து எழுப்பிற்று. "பின்னேரம் நாங்கள் அந்தப் பக்கம் வாறம். நீங்கள் வீட்டில இருப்பீங்கள் எண்டால் உங்களையும் வந்து பார்க்கலாம் எண்டு நினைச்சம்."
"முடியலைன்னா நாளை பண்ணலாம்ல! எதுக்கு இப்படி சிரமப்படுறீங்க?" என்றான்." கிட்டத்தட்ட வேலை முடியும் சமயம் ஒரு ஆப்பிளை எடுத்துக் கடித்தான். அம்மாவுக்கும் ஒன்று கொடுக்க, "இப்போ வேண்டாம்," என்றாள்.
திரும்ப நோய் எதிர்ப்புச் சக்தி என்று ஆரம்பிக்கப் போகிறானோ என்று அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
"ஆன்டி வர மாட்டாங்க."
~~~~~~~~~~~