இலங்கையில் தெருவில் மணி அடித்துக்கொண்டு ஒருவர், தோளில் ஒரு பக்கம் கண்ணாடியாலான உயர்ந்த தகரப் பெட்டியைத் தூக்கி வருவார். அதன் உள்ளே தும்பு மிட்டாயும் அதே நிறத்தில் நைஸும் இருக்கும்.
நைஸ்... நினைத்தாலே வாயூறும் எனக்கு. பெரிய வட்டமாக, இறுக்கிப் பிடித்தால் பொடியாகும் அளவு மென்மையாக ஆனால் மொரமொரப்பாக இருக்கும். ஈர உதட்டில் பச்சக்கென்று ஒட்டிக் கொள்ளும். சுவை... இனிமை இருந்தும் இல்லாமலும் இருக்கும். எத்தனை சாப்பிட்டாலும் அலுக்காது அத்தனை எடை குறைந்த தின்பண்டம். இலங்கைக்குப் போகும் சமயம் கூட மணிச்சத்தம் கேட்டதும் வெளியே போய்ப் பார்ப்பேன். வாங்கிச் சாப்பிடாமல் விடுவது இல்லை.
அத்தனை அருமையானதொன்றை நினைத்த போதெல்லாம் சாப்பிடக் கிடைத்தால்!
ப்ரின்சியின் சமையலறையில் கண்டேன் செய்முறையை. மிக்க நன்றி ப்ரின்ஸி. உங்கள் உதவியால் எந்தவித வித்தியாசமும் இல்லாமல் அருமையான நைஸ் சாப்பிடக் கிடைத்தது.
ரொட்டி மேக்கர் இருந்தால் மட்டும்தான் நைஸ் செய்யலாம். பெரிய நைஸை எப்படிச் செய்திருப்பார்கள்!! இரண்டு தோசைக்கற்களை பிணைச்சல் போட்டு இணைத்து வைத்திருப்பார்களோ!! :-)
இங்கே குறித்து வைத்தால் காணொளி காணாமற் போனாலும் பிறிதொரு சமயம் தேடி எடுக்கச் சுலபமாக இருக்கும்.
தேவையாக இருந்தவை
மா - 165 கி
சீனி -2 மே.க
நீர் - 360 மி.லீ
கலரிங்
சுவை சேர்க்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. விரும்பினால் சேர்க்கலாம்.
ப்ரின்ஸி சொல்லியிருந்த முக்கியமான விடயங்களை மட்டும் குறித்து வைக்கிறேன்.
கரைசலை வடிகட்டவேண்டும்.
சுருக்கமாகவே குறித்து வைத்திருக்கிறேன். இதைப் படித்தால் மீதி விபரங்கள் எனக்குத் தானாகவே நினைவுக்கு வந்துவிடும்.
இந்த இடுகை என்றாவது.... தொடரும்.

நிறம் கடுமையாக இருக்க வேண்டும்.
ரொட்டி கிங் நடுத்தர சூட்டில் இருக்க வேண்டும்.
2 - 2 1/2 மேசைக்கரண்டி கலவை போதும்.
மூடி, 30 செக்கன்களுக்கு அழுத்தியும் 45 செக்கன்கள் மெல்லிதாகவும் பிடித்தால் போதும்.
திறக்கும் போது சிரமப்படுத்தித் திறக்கக் கூடாது. தானாக வந்தால்தான் சரியாக வரும்.
திருப்பிப் போட்டு 10 செக்கன்கள் விட்டு எடுக்க வேண்டும்.