Showing posts with label Art. Show all posts
Showing posts with label Art. Show all posts
Thursday, 11 July 2019
Monday, 18 December 2017
வெயிலுக்கு முளைத்த காளான்!
அவ்வப்போது கைவேலைக்காக வாங்கிச் சேர்த்தவற்றில், சில செரமிக் பொருட்களை நேற்று வெளியே எடுத்தேன். யாருக்கு என்ன அன்பளிப்பு என்பதை யோசித்து குறித்து வைத்தாயிற்று. செரமிக் பெய்ன்ட் இருந்த பெட்டியில் எப்பொழுதோ ஒரு கைவேலைக்காக வாங்கி மீந்து போன மலிவு விலை வர்ணங்கள் தெரிந்தன. சிவப்பும் வெள்ளையும் மஞ்சளும் பாதி காய்ந்து இருந்தன.
வீசாமல் பயன்படுத்த முடியாதா!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2003ல் இந்த வீட்டை வாங்கினோம். வாங்கும் போது ஒரு ப்ளம் மரம் & நிறைய புல்லும் களைகளும் அவற்றின் நடுவே களையாக வளர்ந்திருந்த ப்ளம் கன்றுகளுமே இருந்தன. தோட்ட வேலையை ஆரம்பித்தேன்.
அந்த வருட நத்தாருக்கு சின்னவர் எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தது... ஒரு காளானை. $ கடைகள் சின்னவர்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம். :-) கையிலிருக்கும் சொற்பப் பணத்தில் அழகாக எதையாவது தேடி வாங்கிவிடலாம்.
இந்த நிலை வரைதான் கொண்டுவர முடிந்திருந்தது. அழுக்குப் போகாவிட்டாலும் சிரிப்புப் போகவில்லை. ;-) மீண்டும் அழுக்காகி விடாமல் ஒரு அட்டைப் பெட்டியில் உறங்கப் போய்விட்டார் காளான் பிள்ளையார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தொட்டால் தூரிகையில் கெட்டித்தயிர் போல் ஒட்டிப் பிடித்தது தீந்தை. பளிச்!
எங்கே என் காளான்!
தேடிப் பிடித்தேன்.
பூசாமல் இழுபட்ட தீந்தை, காளான் மேல் கோடுகள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. காய்ந்த பின் முகத்தை வரைந்தேன்.
அடிப்படை கரடுமுரடாக இருந்ததால், மெல்லிய கோடுகள் வரைவது சிரமமாக இருந்தது.
கடும் வெயில் இங்கு. சட்டென்று உலர்ந்துவிட்டது. என் தோட்டத்தில் எங்கே வைக்கலாம்!
சின்னவர் ஓரிரண்டு நாட்களில் வருவார். நன்கு தெரியும் எனக்கு காளானைப் பார்த்ததும் ஒரு சிரிப்புச் சிரிப்பார். ;-) அதன் கருத்து... "மம்மி இன்னும் சின்னப் பிள்ளை விளையாட்டு விளையாடுறா!"
Thursday, 1 September 2016
வாழ்த்துகளும் வாழ்க்கையும்
திடீரென்று ஒரு ஞானோதயம்,
ஒரு நாள் பிறந்த நாட்டிலிருந்து எல்லோரையும், எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் கிளம்பி இங்கு வந்து சேர்ந்த மாதிரி, இந்த ஊரையும் விட்டுக் கிளம்ப நேர்ந்தால்! :-)
ஒரு நாள் பிறந்த நாட்டிலிருந்து எல்லோரையும், எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் கிளம்பி இங்கு வந்து சேர்ந்த மாதிரி, இந்த ஊரையும் விட்டுக் கிளம்ப நேர்ந்தால்! :-)
இப்போது... பெட்டி பெட்டியாகச் சேகரித்து வைத்திருக்கும் பொக்கிஷங்கள் தரம்பிரிக்கப் படுகின்றன. அனேகமாக இம்முறை, நினைவுகளை இரைமீட்டுப் பார்த்து ரசித்துவிட்டு வீசிவிடுவதாக ;( இருக்கிறேன்.
வீசப் போவது.... நினைவுகளை அல்ல. அவை என்றும் என்னுடன் இருக்கும். :-)
சின்னக் கைகள் அன்பாக அனுப்பிய ரோஜாக்கள்
ஃபெல்ட் பென், ஸ்டாம்ப் பென் இரண்டையும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.
ஃபெல்ட் பென், ஸ்டாம்ப் பென் இரண்டையும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.
அட்டை மட்டும் ரோஜா வர்ணம்;
ரோஜாவோ வர்ணம் இல்லாத வண்ணம்! :-)
ரோஜாவோ வர்ணம் இல்லாத வண்ணம்! :-)
குமிழ்முனைப் பேனைகள் + ஒட்டும் கற்கள்
பொதியுள் பொதிந்து வைத்த அன்பு
சின்னக் கைகள், விட்ட பிழை எதையோ மறைக்க முயன்றிருக்கின்றன. :-)
பழைய வாழ்த்திதழ் எதிலிருந்தோ பூக்களை வெட்டி எடுத்திருக்கிறார்கள்.
:-) சிரமப்பட்டிருக்க வேண்டும். வளைவுகள் வெட்டும் கத்தரிக்கோலினால் ஓரங்கள் வெட்டப்பட்ட அட்டையில், காய்ந்த இலைகள்.
நிறம் நிரப்பி, அது நிரந்தரமாக இருக்கவென்று clear seal ஒட்டியிருக்கிறார்கள்.
இந்தக் கிளைகள் தான் இங்கு குருத்தோலை ஞாயிறன்று குருத்தோலைக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது. ரோஜா - ஒரு திருமண அழைப்பில் இருந்து வந்திருக்க வேண்டும்.
உலர்ந்த இலைகள் உதிர ஆரம்பித்துவிட்டன.
வயது போகிறது! :-)
சற்றுப் பெரிதான அட்டை!
சின்னவர்கள் வளர ஆரம்பித்ததற்குச் சாட்சியாக, வாழ்த்திதழிலும் மெருகு கூடியிருக்கிறது.
இன்னும் சில இருக்கின்றன. அவை பிறிதொரு சமயம் பார்வைக்கு வரும்.
சின்னவர்கள் நால்வர் சேர்ந்து அனுப்புவார்கள். அவர்களுள் வரைபவர் ஒருவர் இருந்தார்.
இப்போது எல்லோரும் வளர்ந்துவிட்டார்கள். வேலை, திருமண வாழ்க்கை, படிப்பு, திரவியம் தேடித் திரை கடல் ஓடுதல் என்று ஆளுக்கு ஒரு திக்காகப் பிரிந்து போனார்கள்.

இதுதான்... வாழ்க்கை.
சின்னவர்கள் நால்வரும் எல்லாச் சிறப்புகளுடனும் சந்தோஷமாக வாழ... என்றும் என் பிரார்த்தனைகள்.
Love you kutties. :-)
சின்னவர்கள் நால்வரும் எல்லாச் சிறப்புகளுடனும் சந்தோஷமாக வாழ... என்றும் என் பிரார்த்தனைகள்.
Love you kutties. :-)
Thursday, 4 April 2013
Engraved Eggshell
வியாழன் - விடுமுறைநாள்.
முட்டை பெரிதாகப் பிடிக்காது, ஆனாலும் சாப்பிடலாம் என்று நினைத்தேன்.
உடைத்து, ஊற்றி, அடித்துப் பொரித்துச் சாப்பிட்டாயிற்று.
முட்டையோட்டில்... ட்ரிக்ஸி
முதல் முயற்சி; சும்மா ஒரு கிறுக்கல்தான்.
'நன்றாக இருக்கிறது.' என்கிற கருத்துக்கு மட்டுமே அனுமதி உண்டு. ;)
இதனை உடையாமல் பாதுகாப்பாக வைக்க ஒரு வழி பார்க்கவேண்டும்.
Thursday, 8 November 2012
Tuesday, 6 November 2012
நான் வரைந்த ஓவியமே!
ரூத் பற்றி முன்பு சொல்லி இருக்கிறேன் இல்லையா! இது அவர் மேற்பார்வையில் இமா வரைந்த ஓவியம் - Twin Oak Drive in Cornwall Park. (Images of the Park பக்கத்தில் நான்காவது படம், இது வேறு கோணத்திலிருந்து வரையப்பட்டிருக்கிறது.) ஓரளவு திருப்தியாக வந்திருக்கிறது.
இம்முறை ஓவியத்திற்கான கருத்தெரிவு என்னுடயது. சற்று அதிகமாகவே சக ஆசிரியர்கள் அனைவரது பொறுமையையும் சோதித்து விட்டதால் ஒவ்வொரு வகுப்பிலும் எனக்கு அர்ச்சனை செய்தபடியேதான் வரைந்தார்கள். ;)
உலர்வதற்காகக் காத்திருந்து இப்போதுதான் வீடு வந்து சேர்ந்திருக்கிறது. வீட்டிற்கு வந்த மூத்தவரும் நட்பும் பார்த்ததும், நான் சொல்லாமலே சரியாக இது எந்த இடம் என்பதைச் சொல்லி விட்டார்கள். இப்போது பூரண திருப்தி.
~~~~~~~~~~~~~~
பிண்ணிணைப்பு 08/11/2012 - This is an oil painting on canvas.
ஹ்!ம்... இந்தத் தொடர் ஆரம்பித்து ஒழுங்காக முடிக்காது விட்டிருக்கிறேன். ;( விடுமுறை வந்ததும் எப்படியும் சரிசெய்துவிட வேண்டும்.

Friday, 20 April 2012
Imma is Spring Cleaning

இந்தப் படம் கண்ணில் பட்டதும், முன்பொரு இடுகையில் கொடுக்கப்பட்டிருந்த மகியின் பின்னூட்டம் நினைப்பு வந்தது. இன்று பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றிற்று.
'ஆடத் தெரியாதவள் அரங்கு கோணல் என்றாளாம்; வரையத் தெரியாதவள்... model கோணல் என்றாளாம்.' ;)))
Saturday, 21 January 2012
Friday, 20 January 2012
என் சின்ன மகன்

ஓவ்வொரு வருட இறுதியிலும் வீட்டை ஒருமுறை முழுமையாகச் சுத்தம் செய்வது வழக்கம். சென்ற வருடம் ஊருக்குச் சென்றிருந்ததால் சில இடங்கள் தொடப்படாமல் அப்படியே கிடந்தன. இவ்வருடம் எப்படியாவது சுத்தம் செய்யலாம் என்று ஆரம்பித்து, பலவருடங்களாகத் தேங்கிக் கிடந்த பாடசாலைக் காகிதங்களைப் புரட்டி தேவையற்றவற்றை வீசிக்கொண்டிருந்தபோது.... கண்ணில் பட்டது இது. கூடவே இன்னும் சில.
நாம் நியூசிலாந்து வந்து இறங்கிய ஆரம்பகாலம், எப்போதும் பரபரவென்று இயங்கிப் பழகி இருந்த எனக்கு பொழுதுபோகவில்லை; கிறுக்கி வைத்திருக்கிறேன்.
பார்த்ததும் சந்தோஷத்தோடு சின்னவர் சொன்னார் இது தன் உருவம் என்று. வரைந்த தேதி 28/02/2000. (அப்போது சின்னவருக்கு 10 வயதும் 7 மாதங்களும் நடந்துகொண்டிருந்தது.) அரை மணி நேரம் எடுத்திருப்பேன் வரைய. மீண்டும் touchup செய்யவில்லை. கைவிரல்கள் அமைப்பாக வரவில்லை. சரிசெய்ய முயலவில்லை அப்போதும், இப்போதும். அவரது சிரிப்பு மட்டும் அப்படியே வந்து ஒட்டிக் கொண்டிருக்கிறது. ;)
பழுப்பு நிற மீழ்சுழற்சிக் காகிதத்தில் வரைந்தமையாலும் வரைந்து பல வருடங்கள் ஆகிவிட்டமையாலும் தெளிவு குறைவாக இருக்கிறது. இனிமேலாவது உள்ளது உள்ளபடி இருக்கட்டும் என எண்ணி ஸ்கான் செய்தேன்.
Tuesday, 20 July 2010
குட்டித் தேவதைகளின் குட்டித் திறமைகள்
விடுமுறையில் ஓர் நாள் எங்கள் குட்டித் தோழி வீட்டுக்குப் போயிருந்தோம். தனது ஓவியம் ஒன்று கண்காட்சிக்காகத் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லி அழைப்பு வைத்தார்.
அழகழகாய் எத்தனை சித்திரங்கள்!! ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித அழகு, வரைந்த மழலைகளின் மனம் போல.
Subscribe to:
Posts (Atom)