Monday 18 December 2017

வெயிலுக்கு முளைத்த‌ காளான்!

அவ்வப்போது கைவேலைக்காக‌ வாங்கிச் சேர்த்தவற்றில், சில செரமிக் பொருட்களை நேற்று வெளியே எடுத்தேன். யாருக்கு என்ன‌ அன்பளிப்பு என்பதை   யோசித்து குறித்து வைத்தாயிற்று. செரமிக் பெய்ன்ட் இருந்த‌ பெட்டியில் எப்பொழுதோ ஒரு கைவேலைக்காக‌ வாங்கி மீந்து போன‌ மலிவு விலை வர்ணங்கள் தெரிந்தன‌. சிவப்பும் வெள்ளையும் மஞ்சளும் பாதி காய்ந்து இருந்தன‌. 

வீசாமல் பயன்படுத்த‌ முடியாதா! 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2003ல் இந்த‌ வீட்டை வாங்கினோம். வாங்கும் போது ஒரு ப்ளம் மரம் & நிறைய‌ புல்லும் களைகளும் அவற்றின் நடுவே களையாக‌ வளர்ந்திருந்த‌ ப்ளம் கன்றுகளுமே இருந்தன‌. தோட்ட‌ வேலையை ஆரம்பித்தேன். 


அந்த‌ வருட‌ நத்தாருக்கு சின்னவர் எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தது... ஒரு காளானை. $ கடைகள் சின்னவர்களுக்கு ஒரு பெரிய‌ வரப்பிரசாதம். :‍-) கையிலிருக்கும் சொற்பப் பணத்தில் அழகாக‌ எதையாவது தேடி வாங்கிவிடலாம். 

பல‌ வருடங்கள் கழித்து அதன் வர்ணப் பூச்சுகளை இழந்தும் என்னைப் பிரியாமல் செடி மறைவில் இருந்துவந்த காளானை, சுரேஜினியின் கைவேலை ஒன்று வெளியே எடுத்து வரச் செய்தது. படிந்த‌ பாசியைத் தேய்த்துத் தேய்த்துச் சுத்தம் செய்வது நச்சுப் பிடித்த‌ வேலையாக‌ இருந்தது.
இந்த‌ நிலை வரைதான் கொண்டுவர‌ முடிந்திருந்தது. அழுக்குப் போகாவிட்டாலும் சிரிப்புப் போகவில்லை. ;-) மீண்டும் அழுக்காகி விடாமல் ஒரு அட்டைப் பெட்டியில் உறங்கப் போய்விட்டார் காளான் பிள்ளையார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தொட்டால் ‍ தூரிகையில் கெட்டித்தயிர் போல் ஒட்டிப் பிடித்தது தீந்தை. பளிச்! 

எங்கே என் காளான்! 
தேடிப் பிடித்தேன். 

பூசாமல் இழுபட்ட தீந்தை, காளான் மேல் கோடுகள் போன்ற‌ தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. காய்ந்த‌ பின் முகத்தை வரைந்தேன்.
 
அடிப்படை கரடுமுரடாக‌ இருந்ததால், மெல்லிய‌ கோடுகள் வரைவது சிரமமாக‌ இருந்தது.

மஞ்சள் பச்சக் பச்சக்! :‍) தூரிகையின் பின்புறத்தால் தொட்டு பொட்டுகள்வைத்தேன்.  பரவாயில்லை. 
கடும் வெயில் இங்கு.  சட்டென்று உலர்ந்துவிட்டது. என் தோட்டத்தில் எங்கே வைக்கலாம்!
                                     .. இந்தக் களைகளைத் தொலைக்க‌ முடியாமலிருக்கிறது. கர்ர். க்றிஸ்ஸிடம் சொல்லி தற்காலிகமாக‌ ஏதாவது விசிறச் சொல்ல‌ வேண்டும்.
 சின்னவர் ஓரிரண்டு நாட்களில் வருவார். நன்கு தெரியும் எனக்கு‍ ‍ காளானைப் பார்த்ததும் ஒரு சிரிப்புச் சிரிப்பார். ;-) அதன் கருத்து... "மம்மி இன்னும் சின்னப் பிள்ளை விளையாட்டு விளையாடுறா!"

10 comments:

 1. இடுகை பதிவானதுமே வந்துவிட்டீர்கள். :-) நன்றி சகோதரரே!

  ReplyDelete
 2. அழகு அக்கா. நானும் காளான் குரோசட்டில் செய்யலாமா என்ரு யோசித்து கொண்டிருக்கேன்.இங்கும் டாலர் கடைகள் உண்டு.ஆனால் இதெல்லாம் கிடைக்காது.

  ReplyDelete
  Replies
  1. //காளான் குரோசட்டில்// ஆகா! செய்து குறிப்பாகக் கொடுங்கள். நானும் முயற்சி செய்து பார்ப்பேன்.
   //டாலர் கடைகள் உண்டு.ஆனால் இதெல்லாம் கிடைக்காது.// இப்போது இங்கும் காணோம். அதனால்தான் இருந்ததைத் தேடி எடுத்து புத்துயிர் கொடுத்திருக்கிறேன்.

   Delete
 3. ஹை :) சூப்பர் இமா ..காளான் அழகா குறும்பு சிரிப்பு சிரிக்கிறார் :)
  ரெட் கலர் தான் நல்லா ப்ரைட்டா இருக்கு இவருக்கு ..

  ReplyDelete
 4. சும்மா கிடந்த காளானும் இமாவின் கைபட்டு
  அழகைச் சொரிகிறது!..:)

  அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. சிரிக்கும் காளான் ரொம்ப அழகாக இருக்கு...

  ReplyDelete
 6. அழகாய் இருக்கிறது! பாராட்டுகள்....

  ReplyDelete
 7. மழைக்குத்தானே காளான் முளைக்கும்..:) இமா வீட்டில் வெயிலுக்கும் முளைக்குதே.. அழகு.. ஆனா ரொம்பக் குட்டியாக இருக்கிறாரே காளான் பிள்ளை..

  ReplyDelete
  Replies
  1. இங்க‌ இப்பதானே கைவேலை செய்யிறதுக்கு சமர் விடுமுறை! :‍)
   குட்டி இல்லை அதீஸ். என் கையளவு. :‍)

   Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா