Wednesday 27 December 2017

காகிதச் சொடுக்குகள்

புதினமாக‌ ஏதாவது தலைப்பு வைத்தால் நிறையப் பேரைக் கவரலாம். :-)

முன்பு ஒரு சமயம் பாடசாலைக்கு யாரோ ஒரு தொகுதி விளையாட்டு அட்டைகளை வழ்ங்கியிருந்தார்கள். வருட‌ இறுதி வாரம், சின்னவர்களுக்கு ஆளுக்கொன்று கொடுத்து குறிப்பிட்ட‌ பகுதியைப் பிரித்து அதில் கொடுக்கப்பட்டிருந்த‌ விளக்கக் குறிப்புகளைப் பயன்படுத்தி 'கிராக்கர்ஸ்' செய்யச் சொன்னோம். எனக்கும் அந்தச் சத்தம் பிடித்திருந்தது. சில நாட்கள் முன்பாக‌ எனக்கென்று எடுத்து வைத்திருந்த‌ கிழிந்து போன‌ வெடியைக் கண்டேன், ஓர் பெட்டியில். இன்று இந்தப் பதிவுடன்... அந்தக் காகித‌ வெடி குப்பைக்குப் போகிறது. :‍)

செய்முறை 

ஒரு 4A கடதாசியில் 4 செ.மீ நீளத் தீரைகள் வெட்டிக் கொள்ள‌ வேண்டும்.

அதை ஒரு முறை இரண்டாக‌ மடிக்க‌ வேண்டும்.

பிறகு விரித்து வைத்து...
ஒவ்வொரு பக்கத்தையும் தனித்தனியே நடுக் கோட்டுடன் இணையுமாறு பிடித்து ....

உள்நோக்கி மடித்துக் கொள்ள‌ வேண்டும்.


இப்போது மொத்த‌ அகலம் 2 செ.மீ இருக்கும்.

மீண்டும் நடு மடிப்பு வழியே மடிக்கவும். இப்போது அகலம் 1 செ.மீ  இருக்கும்.
மீண்டும் இரண்டாக‌.....
....பின்பு நான்காக‌ மடித்து எடுக்க‌ வேண்டும்.
W  / M  வடிவில் மடிப்பது முக்கியம்.


M கீழ் நடு மடிப்பை இடது கையில் பிடித்துக் கொள்ளுங்கள். மடித்திருக்கும் மேல் துண்டுகள் இரண்டும் இடது கைக் கட்டை விரல் & சுட்டு விரல்களின் மேல் இருக்கும். இப்போது வலது கையை மேல் நோக்கி 
இழுத்தால், 'டிக்' என்று சொடுக்குச் சத்தம் கேட்கும். கடதாசி உயிரை விடும் வரை வேலை செய்யும் இந்த‌ க்ராக்கர்.

இங்கே பதிவு செய்தால் தேடுவது சுலபம்; நட்பு வட்டத்திற்குக் காட்ட‌ வேண்டி இருந்தாலும் சட்டென்று கைபேசியில் தேடிக் கொடுக்கலாம்.... என்பது வரை தட்டச்சு செய்து தயாராக‌ இருந்தது இடுகை. படங்கள் மட்டும் பிற்பாடு எடுத்து இணைக்க வேண்டி இருந்தது.

24 /12/2017
வருடா வருடம் நானே 'க்றிஸ்மஸ் க்ராக்கர்ஸ்' தயார் செய்வேன். பெரும்பாலும் அவை இன்னாருக்கு இன்னது என்பதாக‌ தனித்துவமான‌ அன்பளிப்புகள் & சிரிப்புத் துணுக்குகளுடன் தயாராகும்.

இம்முறை சின்னவர்களை ஏமாற்றக் கூடாது. கடைசி நேரத்தில் போய்த் தேட‌, க்ராக்கர் ஸ்னாப்ஸ்' கிடைக்கவில்லை. மனம் தளராமல், 'சரி, ஒரு வித்தியாசத்திற்கு காகிதச் சொடுக்குகளை வைக்கலாம்,' என்று செய்ய‌ ஆரம்பித்தேன்.

க்ராக்கர்ஸை எடுக்கும் போது எல்லோரும் எங்கே பிடித்து இழுப்பது என்று தலையைப் பிய்த்துக் கொண்டார்கள். ;‍) சாதாரணமாக‌, சொடுக்குகளின் முடிவுகளைக் கையில் பிடித்துக் கொண்டு இழுத்தால்தான் சப்தத்தோடு வெடிக்கும். இம்முறை பிய்த்து உள்ளீட்டை எடுத்துக் கொண்டு பிறகு சொடுக்கி விளையாடினோம். :‍)

6 comments:

  1. சிறு வயதில் இந்த மாதிரி செய்திருக்கிறேன். மீண்டும் இங்கே பார்த்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் சிறு வயதில் இதைக் கண்ட‌ நினைவு இருக்கிறது. அப்போ எல்லாம் நாமே செய்துகொள்ளும் விளையாட்டுப் பொருட்கள் தானே அதிகம். கொப்பியிலிருந்து கடதாசியைக் கிழித்து எதையாவது செய்துவிட்டு பேச்சுக் கேட்போம். ;)))

      Delete
  2. அருமையான செய்முறையில் காகிதச் சொடுக்குகள்....

    நல்லா இருக்கு...பசங்கட்ட காட்டுறேன்...

    ReplyDelete
    Replies
    1. அவற்றின் 'டிக், டிக்' சத்தம் சின்னவங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

      Delete
  3. ஹை நல்லாருக்கே

    ReplyDelete
    Replies
    1. :‍) ஹாய் ஏஞ்சல்! இலுப்பைப்பூ சர்க்கரை!

      அடுத்த‌ வருடத்திற்கு எப்படியாவது ஸ்னாப்ஸ் வாங்கி வைக்க‌ வேண்டும். முன்பு வாங்கியது 3 வருடங்களுக்குப் போதுமானதாக‌ இருந்தது. நிறைய‌ வாங்கி வைக்கவும் பயமாக‌ இருக்கிறது. நாட்பட்டால் வேலை செய்யாது அவை. இம்முறை இவை கை கொடுத்தன‌.

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா