செல்வி சொல்லி விட்டார்; எப்படியாவது கொடுக்கலாம், விதிமுறைகள் என்று எதுவும் இல்லை என்பதாக.
ஒழுங்கு என்பதெல்லாம் கிடையாது. பிடித்தவற்றில் சிலதை (கவனிக்க, சிலதை மட்டுமே) இங்கு குறிப்பிடுகிறேன்.
அப்படியே என் வலையுலக உறவுகள் சிலரையும் உங்களுக்கு அறிமுகம் செய்யலாம் என்று எண்ணம்.
என் முதல் இடுகைக்கு வந்த பின்னூட்டங்கள் மறக்கமுடியாதவை.
எழுதலாமா வேண்டாமா!
என்ன எழுதுவது!
சரியில்லை என்று யாராவது வந்து சொல்லி விடுவார்களோ!
யாரும் வராமலே விட்டுவிடுவார்களோ! இப்படி ஒரு முழுநீள சந்தேக லிஸ்ட்டை மனதில் வைத்துக் கொண்டு, வலைப்பூவில் எனது முதலாவது இடுகையை வருடம் பிறந்த அன்று (இங்கு அது ஒரு நாள் முன்னதாக வந்திருந்தது) வெளியிட்டேன். செபாஅம்மாவிடம் கூடச் சொல்லவில்லை. ;)
அப்படி இருக்க... தன் மோப்ப சக்தியைப் பயன்படுத்தித் தேடி ஓடி வந்து முதல் ஆளாக
எனக்கு பின்னூட்டம் மெய்லில் வரும் என்று கூடத் தெரியாது அப்போ. பார்த்ததும் அப்படி ஒரே சந்தோஷம். (அப்போ ஜீனோ வலைப்பூ ஒன்றுக்குச் சொந்தக்காரராக இருக்கவில்லை.) 'அறுசுவை'யில் என்னை 'இஞ்சி டீ, பால்டீ, ஆன்ட்டீ' என்று விழித்துக்கொண்டு இருந்ததால் நானும் சந்தோஷமாக 'என் செல்ல மருமகன்' ஆகத் தத்து எடுத்துக் கொண்டேன். ;D
ஜீனோ கொடுக்கும் பின்னூட்டங்கள் எல்லாமே என்னைச் சிரிக்க வைக்கும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இரண்டாவதாக வந்த
முக்கியமான தகவல், இமா 'வலையில்' இடறி விழுந்தால் கை கொடுக்கும் இருவரில் முக்கியமானவர் இவர். இரண்டாவது... ம்..ஹூம், சொல்ல மாட்டேன். பெயர் சொல்லித் திட்டு வாங்க விருப்பமில்லாததால் ___ ஆக விட்டு விடுகிறேன். ;)
அருண்மகனும் மருமகனும் வாழ்த்தியபடியே 2010 எனக்கு நல்லபடி போகிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
3. என் மனதைத் தொட்ட பின்னூட்டம் வாணியுடையது.
சமீபத்தில் வாணி வலைப்பூவில் (
Iris Folding )
மனதைத் தொட்டது, மகிழ்வளித்தது, மனநிறைவு தந்தது.
என்றும் என் மனதில் இடம்பெறும் இந்தப் பின்னூட்டம். @}->-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
4. தானும் சிரித்து எல்லோரையும் சிரிக்க வைக்கும்
athira has left a new comment on the post "
ச்ச.. இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்.. ":
சுஜாதா சாரோட செல்லம்//// ஜீன்ஸ்... என்னால முடியல்லே.... கிக்...கிக்... கக்..க...காக்க்க்க்க க்காஅக்க்க்க்கீஈஈஈஈஈஈஈஈ( குறை நினைக்கப்படாது அக்காவுக்கு சிரிச்ச்.... கிக்...கிக்..கீஈஈஈஈஈ /////
அப்பாடி. ;) என்னாலையும் முடியேல்ல. ;)
இது ஜீனோவின் வலைப்பூவில் வந்த பின்னூட்டம். ;)
இந்த அதிராக்காவின்ட அலுப்புத் தாங்க முடியாது. ;) எப்பிடித் தான் தட்டுறாவோ! 'கீ' போர்ட்ல 'k' அழிஞ்சு போயிருக்கும் இவ்வளவுக்கும். ;) ஆனால் கொடுமை கிடையாது. சிரிச்சுச் சிரிச்சே கொல்லுவாங்க. என் உலகத்திலும் இவரது பின்னூட்டங்கள் ஏராளம், இருந்தாலும் சமீபத்தில் சிரிக்கவைத்த பின்னூட்டம் என்பதால் இது. :)
என்னவோ தெரியேல்ல.. நான் நினைக்கிறதை, நினைச்சும் எழுதாமல் விடுறதை இவங்க எழுதீருவாங்க - சுருக்கமாச் சொன்னால்.. இமா அடக்கி வாசிக்கிறதை இவங்க 'ஓபினா' வாசிப்பாங்கள். ;) என் அதே அலைவரிசையில் இன்னொரு ஒலிபரப்புச் சேவை. நிறைய கரட் சாப்பிடுற ஆள் இவ. மற்றவங்க கண்ணில் படாதது எல்லாம் இவவுக்குப் பட்டுரும். ;) உ+ம் ஜீனோவின் ஆல்பம் பார்த்த விதம். எப்பவும் தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பாங்க உ+ம் இமாவைப் பார்க்காமல் இமாவுக்குப் பின்னால தெரிஞ்ச பூச்சியை! பார்த்தது!!.
மொத்தத்தில் அதிரா ஒரு 'ஊட்டமான ஊசி ' ;)
பின்தொடருங்கோ ...