Monday 22 March 2010

பிடித்த 10 பின்னூட்டங்கள் (5-7)

திரும்பவும் நினைவுபடுத்துகிறேன்.. இது ஒழுங்கு முறை அல்ல. பிடித்த அனைத்தும் அல்ல. ;)

5 . 'அறுசுவை அனானி' ஒருவர் அவ்வப்போது வந்து பின்னூட்டம் + :) இடுவார். நானும் 'யாரோ' என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ;) இங்கு அவர் பெயரையும் (அ. அ) சேர்ப்பது என்று நினைத்துக் குறித்து வைத்திருந்தேன்.
என்ன ஆச்சரியம்! நேற்று அவரிடமிருந்து ஒரு பின்னூட்டம், ஆனால் மெய்லில். (யாரும் 'யார்?' என்று கேட்கக் கூடாது. சொல்ல மாட்டேன்.) ;)

மெய்லில் இருந்து முக்கியமான வரிகளை மட்டும் தருகிறேன்.

//இன்னிக்கு ஒரு நிமிஷம் PRAY  பண்ணினேன்  நீங்க 8  மணிக்கு ஜெபம் பண்றதா சொல்லி இருந்தீங்க. டைம்  FOLLOW பண்ணல மறந்துட்டேன்.// கண்கள் பனித்தன.
நன்றி தோழி.

நீங்க எதுக்கு உங்களை அனானி என்று குறிப்பிடுறீங்க!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
6. எனக்கு முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் திடீரென்று ஒரு நாள் பின்னூட்டம் கொடுத்து இருந்தார். ஒரு நாள், பொழுது போகாமல் கிறுக்கிய ஒரு கிறுக்கல் என்னும் இடுகையின் கீழ் வந்த

அண்ணாமலையான் said...
athu sari rendu mm potta இம்மா ல வரும்? இமாக்கு imaa la சரி? பொழுது போகலேன்னா இத சரி பாக்க வேண்டியதுதானே?/////
இன்னொருமுறை வந்து 'பங்களாவாசியா நீங்க?' என்று கேட்டு வைத்தார். நிறைய சந்தேகம் வரும் அண்ணாமலையானுக்கு. ;)
 
இமா, இவருக்காக அப்பப்போ 'சிரி'யஸ் பதில்களை விட்டு விட்டு, சீரியஸ் பதில்கள் போட வேண்டி இருக்கு. ;)
 
தொடர்ந்து வாங்க அண்ணாமலையான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
7. ஒரு முறை, இடுகைக்குக் கருத்து எதுவும் தோன்றாமல் சும்மா எடுத்த ஒரு படத்தைப் போட்டுத் தலைப்பிடக் கோருகிறேன். அங்கு வந்து அழகாக...


செந்தமிழ் செல்வி said...
உச்சாணிக் கொம்பில் ஒரு ஊர்கோலம்!!?? /////
அதற்கு என் பதிலில் ஒரு பகுதியாக //இப்ப எனக்கு ஒரு மாதிரியா இருக்கு, படம் இதை விட அழகா எடுக்க முடியலையேன்னு. அடுத்த க்ளிக் அடிபடுறதுக்குள்ள கலைவு கண்டு பறந்துட்டாங்க.. ;( // என்று போட்டிருந்தேன்.
இனிமேல் ஒழுங்கான படம் மட்டும் தான் போடுவது. ;)
ஜோக்குட்டி கூட வருவதால் இவங்க பின்னூட்டங்கள் விசேடம். அவர் வளர்ந்தால் இவங்களும் வளருவாங்களோ!! ;)

இது நான் ரசித்த அழகான பின்னூட்டம். பாராட்டுக்கள் செல்வி. ;)
தொடரும்... 
பி. கு 
போரடிக்கிறேனா!! :) வேறு வழி இல்லை. ;) நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கதையாக இருக்கிறது என் கதை. நேரம் கண்டால் 'நெட்'டைக் காணோம். நெட்டைக் கண்டால் நேரம் காணோம். ;) இதில் இரண்டு 'சங்கிலிகள்' வேறு. ;) பிழை பொறுத்தருள்க. 

14 comments:

  1. ஏன் இப்டி? சரி நடத்துங்க...

    ReplyDelete
  2. உங்களைப் பற்றி நல்லாத்தான் சொல்லி இருக்கேன். சிரிங்க. ;)

    ReplyDelete
  3. பரிசு புகைப்படம் அருமை இமா.. நானும் இத கத்துக்கனும்..

    அனானி :))))))))))))))))))))))) இன்னிக்கு உங்க கால் தரையில படாது.. பறங்க பறங்க :)

    ReplyDelete
  4. மிக்க நன்றி என்னையும் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுத்தற்கு . கார்டு ரொம்ப அழகா இருக்கு நன்றி மெயில் இன்னும் ரெண்டு நாள் கழித்து அனுப்பி இருக்கலாமோ :))

    முதல் பின்னூட்டம் கொடுக்கும்போது பேர் போடாம விட்டுட்டேன் அப்ப நீங்க அறுசுவையில் இருந்து
    வந்த அனானி அப்படின்னு சொன்னதால இது கூட நலால்தான் இருக்கு அப்படின்னு அதையே போட ஆரம்பிச்சுட்டேன் ...

    சந்தனா நன்றி :)
    அறுசுவை அனானி :)

    ReplyDelete
  5. //நலால்தான் //
    நல்லாதான்
    அறுசுவை அனானி

    ReplyDelete
  6. இமா, ஏன்ன்ன்ன்ன்ன் என் பதிவை டிலீற் பண்ணினனீங்களோ? இதிலே பெரிய பதிவு குப்புறக்கிடது ரைப்பண்ணிப் போட்டேனே.. ஏன் அழிச்சனீங்களோ? என்ன நடதது? காணவில்லையே? எனக்கு இப்போ உண்மை தெரிஞ்சாகோணும்?????? இல்லாவிட்டால் உடனே நீதிமன்றம் வரவும்.

    ஸ்கூலால வந்து சாப்பிட முதல்:) எனக்கு பதில் வேணும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    ReplyDelete
  7. இமா, நான் கொடுத்த பின்னூட்டத்திலேயே அது தான் கொஞ்சம் உருப்படியானதுன்னு நினைக்கிறேன். அதையும் விடாமல் நீங்க செலக்ட் பண்ணிட்டீங்க! நன்றி!நன்றி!
    பகுதி பகுதியாக பிரிச்சுப் போட்டாலும் கலக்கலா போட்டு விட்டீர்கள்! தொடரை தொடர அழைக்கவும் நைசா எஸ்கேப்பா? இமா, ஜாக்கிரதை!நம்மாளுங்க அதை விட உஷார்:-) பார்ப்போம், யார் வந்து வலிய மாட்டறாங்கன்னு;0

    ReplyDelete
  8. அன்பு அதிரா,
    //ஸ்கூலால வந்து சாப்பிட முதல்// பதைச்சுப் போய் ஓடி வாறன், பதில் போட.
    முதலும்... விஜி எண்டு நினைக்கிறன் இப்பிடிக் கேட்டவ. நான் என் பதிவு தவிர இதுவரை எதையும் அழிக்க இல்ல. இது வரை எனக்கு வந்த எந்தப் பதிவும் எனக்கு சங்கடமானதாக இருக்கேல்ல. நீங்கள் சொல்றது செபா வலைப்பூ பின்னூட்டம் பற்றி என்றால் - ஓம். முக்கியம் இல்லாத வரிகள் முக்கியமானதின்ர முக்கியத்துவத்தை மறைச்சுப் போடக் கூடாதே எண்டுற ஆர்வக் கோளாறில எடுத்து விட்டு மீதியைக் குறிப்பிட்டு இருக்கிறன். வேற பதிவு எண்டால் எனக்குத் தெரியாது, கூகிளாண்டவர்ட்டக் கேளுங்கோ. ;)

    ~~~~~~~~~~

    என் இனிய தோழி செல்விக்கு,
    //நைசா எஸ்கேப்பா?// அதெல்லாம் இல்லை. ;)

    இது இமா.

    இது தான் இமா.

    இது imaavin ulakam. ;))

    "Oops. The transliteration service is not available." - ithu google aandavar ;)))))))))))

    ReplyDelete
  9. இமா, நீங்க அழிக்கமாட்டீங்கள் என எனக்கும் தெரியும், அழிக்கும் அளவுக்கும் அதில் ஒன்றும் இல்லை, இருப்பினும் எதுவாயினும் உடனே கேட்டு தெளிவாகி உடனே மறந்திடோணும் அதுதான் அதிரா. இந்த சந்துதான்.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    லெட்டர் பாட் அழகா இருக்கு இமா? நீங்கதான் வரைந்தீங்களோ?.

    ......................................
    இனி விஷயத்துக்கு வாறேன்....

    ///கண்கள் பனித்தன./// நாங்கள் குப்புறக்கிடந்து பந்தி பந்தியாக எழுதினாலும் “பனிக்காதாக்கும்”.. இட்ஸ் ஓக்கை:).

    ///தொடர்ந்து வாங்க அண்ணாமலையான். /// அப்போ நாங்க??????:)

    ///இனிமேல் ஒழுங்கான படம் மட்டும் தான் போடுவது. ;)///அப்போ இதுவரை போட்டதெல்லாம்??? அதைப்பார்த்து நல்லாருக்கு நல்லாருக்கு எனச் சொன்ன நாங்களெல்லாம் லூஷோ????:).

    சீ..சீ.... இல்ல சே...சே... ஆறவே முடியேல்லை என்னால...

    ///இது இமா.

    இது தான் இமா.

    இது imaavin ulakam. ;))/// என்ன நடந்தது? பிறீயா மருந்து அல்லது ஊசி வேணுமே.... அதி... எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  10. கொடுமையா இருக்கு நீங்க பண்றது. ;) இதுக்கு மேல என்னால சிரிக்க முடியல. ;)

    ReplyDelete
  11. இமா!!! அதிராவைச் சொல்லல இல்ல???:)

    ReplyDelete
  12. no.. no.... ;))) Annaamalaiyaan ennaik kanakkach chirikka vaikkiraar inru. ;) ithoda vidella. michchap pinnoottam paarunko athees. ;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா