Saturday 13 March 2010

'அரடாகி'

'பின்னேரம் வந்து கதை சொல்கிறேன்' என்று நான் அதிராவிடம் சொல்லிவிட்டுப் போன 'பின் நேரம்' இப்போதான் வந்திருக்கிறது. ;)
'அரடாகி' போனது ஒரு பெரிய 'குட்டீஸ்' கூட்டத்தோடு என்பதால் படப்பிடிப்பு எல்லாம் நடாத்த இயலவில்லை. குட்டீஸை நடாத்திச் செல்வதே பெரும் பிரம்மப் பிரயத்தனமாக இருந்தது. எனவே சில வாரங்கள் முன்பாக மருமகளோடு சுற்றுலாவிய காலத்தைய படங்களைப் பயன்படுத்த எண்ணி இணைத்துள்ளேன்.
(இது 'லுக்அவுட்' பகுதியில் இருந்து எடுத்தது.)
'Arataki' ஒரு பாதுகாக்கப்பட்ட அழகிய வனம். மனிதனால் அழிக்கப்பட்டு பண்ணையும் விவசாயமும் செய்யப் பயன்படுத்தப்பட்ட பூமியை மீண்டும் வனமாக்கும் வளமான முயற்சியில் உள்ள பிரதேசம்.
வருடா வருடம் எட்டாம் ஆண்டு மாணவர்களை அழைத்துச் செல்வோம். இது வரை பத்துத் தடவைகள் சென்றிருக்கிறேன். அலுத்ததில்லை ஒரு போதும்.

என் பதினைந்து வயதான, ஆறு வயது மாணவர் கல்விச் சுற்றுலா என்ற பேச்சு ஆரம்பித்த நாளில் இருந்து 'Mrs. Chris, I no going anywhere,' என்று நினைவு வந்த போதெல்லாம் என்னிடம் வலியுறுத்திக் கொண்டு இருந்தார். இவருக்கு தன் பெற்றோர் வாகனத்தைத் தவிர வேறு எந்த வாகனமும் பிடிக்காது. சென்ற வருடம் பணத்தைக் கட்டிவிட்டு, பயணிக்க வேண்டிய அன்று காலை 'டமி பக்' ;) என்று ஆரவாரித்து 'நனா' வீட்டில் போய் செட்டில் ஆகிவிட்டார். இந்தத் தடவை 'அங்கு பெரிய ஊஞ்சல் இருக்கும், ஆடலாம்,' என்று விஞ்ஞான ஆசிரியர் ஆசை காட்டி அழைத்துப் போனார். குட்டியர் (இவர் நான் அண்ணா....ந்து பார்க்கும் உயரத்தில் இருப்பார்.) அரைமணிக்கொரு தடவை வந்து நேரம் கேட்பார், மூன்று பதினைந்துக்கு 'பிக்கப்' பாடசாலைக்கு வந்து விடும், அதற்குள் போய் விடுவோமா! என்கிற கவலை இருந்தது அவருக்கு.
'யூ ஆர் ஃபிட் மிஸ்,' என்று ஆச்சர்யத்தோடு எனக்குப் புகழாரம் சூட்டியபடியே உருண்டு உருண்டு நடந்த இருவர், இரண்டு முறை நடுவே தரித்து ஆத்ஸ்மா மருந்தை இழுத்துவிட்டு வந்த ஒருவர், 'ரேஞ்சர்' கத்தியதைப் பொருட்படுத்தாது அவரைத் தாண்டி உல்லாசமாக ஓடி சர்ரென்று பாதைப் பக்கச் சரிவில் சரிந்து உருண்ட ஒருவர் என்று... விதம் விதமான... என்ன சொல்வது! ;) அழகு மலர்க் கூட்டம் அது. ;) அடுத்த ட்ரிப் போகும் போது என்னோடு வாங்க, புரியும். ரசிப்பீங்க. ;) குழந்தைகள் நடுவே.... தினமும்... எனக்குக் கிடைத்துள்ள ஆசீர்வாதங்களில் மிகப் பெரியது இது. ;) 
~~~~~~~~~~~~~~~~~~
எனக்கு மிகப் பிடித்த தாவரம் இந்தப் பன்னம் - silver tree fern (ponga in Maori) http://en.wikipedia.org/wiki/Silver_Tree_Fern
   
இது 'nikau palm'.
'நிகோ' என்றால் 'தேங்காய் இல்லை' என்று அர்த்தமாம். ஆரம்பத்தில் நியூசிலாந்திற்கு வந்து சேர்ந்த Maori மக்கள் இதனைத் தென்னை என்று நினைத்தார்களாம். பிறகு, காய்கள் பெருக்காமல் பறவைகளுக்கு உணவாகிக் காணாமற் போகவும் வந்த காரணப் பெயர் இது. (இங்குள்ள தாவரம் விலங்குகள் என்று பலவற்றுக்கும் அவற்றின் பெயர் அமைந்தமைக்கு ஒரு காரணம் இருக்கும்.)

இன்றைக்கு இது போதும். ;) கடைசியாக... முகப்பில் 'பன்னக்குருத்துப் போல என் ரசனைகள்,' என்று எழுதி இருப்பேன், பார்த்திருப்பீர்கள். இதோ அழகாக ஒரு koru.

12 comments:

  1. Beautiful!!! You are a beautiful person Imaa!!!

    ReplyDelete
  2. அரடாகி நல்லாயிருக்கு இமா. இருப்பினும் குட்டீசோடு போனதால படமெடுக்க முடியவில்லை என, கமெராவும் கையுமாகத் திரியும் நீங்கள் சொன்னமையால் அதிராவால நம்பமுடியேல்லை, நீங்கள் உண்மையில் போனனீங்களோ என:) இது நமக்குள் இருக்கட்டும்.

    குட்டியர் (இவர் நான் அண்ணா....ந்து பார்க்கும் உயரத்தில் இருப்பார்.)//// இது எங்களுக்கு எப்பவோ தெரியுமே.. கிக்..கிக்...கிக்..

    உந்தப்பன்னம் இங்கும் திரும்பும்பக்கமெல்லாம் இருக்குது இமா. வெட்டி எறிந்தாலும் எப்படியும் ஒரு வேர் இருந்து முளைத்துவிடும்.


    குழந்தைகள் நடுவே.... தினமும்... எனக்குக் கிடைத்துள்ள ஆசீர்வாதங்களில் மிகப் பெரியது இது. ;) ////
    நட்பில இருக்கிற குழந்தைகளோடு, ஸ்கூலிலும் குழந்தைகள் உங்களுக்கு.. கொடுத்து வைத்தனீங்கள்..

    அழகான படத்தோடு அழகாகக் கதைசொன்னமைக்கு நன்றி!!!!

    ஓஓஓ இலாஆ... என்ன இப்படி.. ஐஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அதி எஸ்ஸ்ஸ்ஸ்:)

    ReplyDelete
  3. சூப்பரா இருக்கு இடமும், உங்க வர்ணனையும்.நாங்க பாடசாலை நாளில் டூர் போன ஞாபகம் வந்ததை தவிர்க்கமுடியவில்லை.இந்த பன்னம் இங்குமுண்டு.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. இமா, அழகிய படங்கள். என் கணவரும் இன்று நான் பார்க்கும் போது உங்கள் ப்ளாக் பார்த்தார். அவருக்கு உங்கள் கும்புடுபூச்சி படம் மிகவும் பிடித்து விட்டது.

    மேலே வையுங்கோ!!!

    ReplyDelete
  5. tkz 4 ur compliments Ila. ;) ஆனால் இலா மனசு அதை விட ரொம்ப அழகு என்பது எனக்குத் தெரியுமே. ;)

    ReplyDelete
  6. //கொடுத்து வைத்தனீங்கள்..// மெய்தான் அதிரா. ஆனால் அங்க உங்களுக்குத் தான் பெரீய கூட்டம் இருக்கு. ;)

    //கமெராவும் கையுமாகத் திரி//ந்தும் இயலவில்லை. நம்புங்கோ. ஏதாவது ஒரு வால் தூக்கிக் கொண்டு போய் மரத்தில கொழுவினால் நான் என்ன செய்யுறது எண்ட பயத்தில அதை வெளியில காட்டவே இல்லை.

    //இது எங்களுக்கு எப்பவோ தெரியுமே// என்ன தெரியும்!! என்....ன தெரியும்ம்ம்!!!!! ;)
    நீங்க இங்க வாங்க. அந்தக் 'குட்டியர்' பக்கத்தில நில்லுங்க. பிறகு கழுத்துச் சுளுக்காட்டால் அப்ப கிக்..கிக்...கிக்.. சொல்லுங்க. எதுக்கும் டொக்டரையும் கூடக் கூட்டிக் கொண்டு வாங்கோ. ;)

    ~~~~~~~~~~

    அதீஸ் & அம்முலு,
    //உந்தப்பன்னம்// என்கட நேடிவ். நீங்கள் 'காடின் ஷொப்பில' காசு கொடுத்து வாங்கிக் கொண்டு போய் அங்க நட்டிருக்கிறீங்கள் போல இருக்கு. ;)) இது பேராதெனியவிலயும் (@ world end) இருக்கு.

    க்றிஸ் எப்படி //வெட்டி எறிந்தாலும் எப்படியும் ஒரு வேர் இருந்து முளைத்துவிடும்// அதனால்தானே எனக்குப் பிடிக்கிறது. ;).

    ~~~~~~~~~~

    வருகைக்கு நன்றி அம்முலு. அப்பிடியே தொடர்ந்துவாங்கோ. ;)

    ~~~~~~~~~~

    //அவருக்கு உங்கள் கும்புடுபூச்சி படம் மிகவும் பிடித்து விட்டது.// அப்ப.. இடுகை பிடிக்கேல்ல, எழுத்துப் பிடிகேல்ல. ;(

    பரவாயில்லை திரு. வாணி. ;( நான் பூஸ் வாலால கண்ணைத் துடைச்சுக் கொள்ளுறன். ;( ;D

    நன்றி வாணி. ;)

    !!!!!!!!!
    என்னது! ஒரு இடுகை அளவுக்குப் பின்னூட்டம் பெருத்துப் போச்சுதே!! ;)

    ReplyDelete
  7. இமா, திரு.வாணிக்கு(haha...) இதெல்லாம் படிக்க நேரமில்லை(நான் எழுதுவதையே படிக்க நேரமில்லை என்பார்). நான் தான் படித்து விட்டு சுருக்கமாக சொல்வேன். படங்கள் எடுப்பதில் மிகவும் ஆர்வம். அதனால் படங்கள் மட்டும் பார்த்து கருத்துக்கள் சொல்வார்.

    //ஏதாவது ஒரு வால் தூக்கிக் கொண்டு போய் மரத்தில கொழுவினால் நான் என்ன செய்யுறது எண்ட பயத்தில அதை வெளியில காட்டவே இல்லை.//
    அங்கு குரங்குகளும் இருக்கே, இமா.

    ReplyDelete
  8. //அங்கு குரங்குகளும் இருக்கே,// nope ;)

    ReplyDelete
  9. இமா.. 6:15 குட்டீஸ் கதய படிச்சதும் கண் கலங்குது.. யூ ஆர் ரியல்லி க்ரேட்..

    ReplyDelete
  10. u r right. great thaan. ;) i'm neither 6 nor 15. ;)

    atheeess.... ;)

    ReplyDelete
  11. Very Interesting :)
    இதுதான் ஃபர்ஸ்ட் டைம் உங்க உலகத்துக்குள் பிரவேசிப்பது...
    ரொம்ப சந்தோஷம் உங்க அறிமுகம் கிடைத்ததற்கு....
    உங்களைத் தொடர்கிறேன்... எனக்கு இது ஒரு வண்ணமயமான பயணமாக இருக்கும் என்று நம்புகிறேன் அதற்கு இந்த புகைப்படங்களே சாட்சி!! :-)

    ReplyDelete
  12. ;) மிக்க நன்றி பிரபு. நல்வரவு.

    இர்ஷாத் சும்மா சொல்லி இருக்காங்க. (என்னமோ பழைய பகை போல.) நீங்களும் நம்பிட்டு பின்தொடர்றீங்க. ;)) கடவுள்தான் காப்பாற்றணும் உங்களை. ;)))

    நான் 'முன்'தொடர்றேன். உங்களுக்குத் தெரியவராது. ;))))

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா