Tuesday 2 March 2010

நான் வரைந்த ஓவியமே! - 2

 
நேற்று இவ்வளவுதான் நடந்து இருக்கிறது. ;(

கிடைக்கும் நாற்பது நிமிட இடைவேளையில் மாணவர்களைப் 'பாக் அப்' பண்ண வைத்து, உணவுக்கு முன் செபம் சொல்ல வைத்து வெளியேற்றி விட்டு ஏனைய ஆசிரியர்களுக்கு முன்னால் சமையல் இடத்தை அடைந்து ப்ரிஜ்ஜில் இருக்கிற மதிய போசனத்தை மைக்ரோவேவில் சுட வைத்து அவசரமாக ஒரு கரண்டியையும் தூக்கிக் கொண்டு 21 வது அறையை அடைந்து மேலே ஒரு கோர்ட்டை மாட்டி (அது இல்லாமல் வரப்படாது என்று ஆர்டர் இருக்கிறது)  பிரஷ்ஷைக் கையில் எடுக்கையில் பாதி பாதி இடைவேளை முடிந்திருந்தது. 

இமா எப்போதும் ஸ்பீட். அதனால் எனக்கு மட்டும் மற்றவர்கள் போல் அல்லாது பெல் அடிக்கையில் தட்டில் பாதிப் பெய்ன்ட் மீதம் இருந்தது. முன்னாலேயே ரூத் எல்லோரையும் பாக் அப் பண்ண ஆரம்பித்து விட்டார். அடுத்து அதே வகுப்பில் அவருக்கு மாத்ஸ் எடுக்க இருந்தது.எனக்கும் வகுப்பு இருந்ததே. சரி, மீதியை அடுத்த வகுப்பில் பார்த்துக் கொள்ளலாம் என்று நானும் கிளம்பி விட்டேன்.

18 comments:

  1. முற்றிலும் முடிந்தபின்புதான் கொமென்ட் சொல்வேன்.. அதிராவோ கொக்கோ?:)

    ReplyDelete
  2. நானும் தான்.

    ReplyDelete
  3. //முற்றிலும் முடிந்தபின்புதான் கொமென்ட் சொல்வேன்.. அதிராவோ கொக்கோ?:)//


    ஹாஹ்ஹா.. சிரிப்பரசியே.. என்ன ஆனாலும் இப்படிச் சிரிக்க வைக்கக் கூடாது :)

    நானும் தான் :))

    ReplyDelete
  4. 'வானம் நல்ல நீளமா / நீலமா இருக்கு' எண்டாவது சொல்ல வேணாமா!!

    ச்சே! வாழ்க்கையே வெறுத்துப் போச்சு. இப்ப வருசையா எல்லாரும் வந்து இப்பிடியே சொல்லப் போகினம். இந்தப் படம் முடிய ரெண்டு தவணை (ஜூலை அளவு) எடுக்கும் எண்டு நினைக்கிறன். அது மட்டும் இப்பிடித் தான் பின்னூட்டம் போடப் போறீங்களோ!!!

    அதீஸ்... நீங்க என்னட்டக் கேட்கிறதை நான் இப்ப உங்கள்ட்டக் கேட்கிறன். அனுப்புறீங்களோ ஒரு பெட்டி!! ;;;;;(((

    ReplyDelete
  5. ம்ம்ம்... ரொம்ப நல்லா இருக்கு , நான் கருத்து சொல்லிவிட்டேன் போதுமா இமா

    ReplyDelete
  6. இமா,
    அழகா இருக்குன்னு இப்ப சொல்ல மாட்டேன்:-)
    இதற்கு பயன்படுத்தும் பெயிண்ட் என்ன வகை? படிப்படியாக போடுங்க. நானும் கத்துக்கறேன்.

    ReplyDelete
  7. :)) இம்ஸ்.. என்னோட தொடர்கதைய விட மெதுவா போகும் போலயிருக்கே :))

    ReplyDelete
  8. என்ன சந்தூஸ், 'இம்ஸ்' 'சை' ஆக இருக்கா? வேற ப்ளான் யோசிக்கிறேன், பார்க்கலாம். ;)

    ~~~~~~~~~~

    selvi, athellaam paarkkak kooda innum neram varala. next week viparamaa solren.

    ReplyDelete
  9. //முற்றிலும் முடிந்தபின்புதான் கொமென்ட் சொல்வேன்.. அதிராவோ கொக்கோ?:)// ஹா..ஹா..சிரிச்சு சிரிச்சு வயித்து வலி வந்துடும் போல இருக்கு அதிரா! காமெடி உங்க கூடவே பிறந்து வளர்ந்திருக்கா என்ன?

    இமா..உங்க ப்ளாக் வந்தா மனசு லேசாகற மாதிரி சிரிச்சுட்டே போக முடியுது..குட் வொர்க்!! தொடருங்க.

    //'வானம் நல்ல நீளமா / நீலமா இருக்கு' எண்டாவது சொல்ல வேணாமா!!// சாரி,,நீங்க சொன்னப்புறம்தான் நான் வானத்தைப் பாத்தேன்.:) அது வரைக்கும் டார்க் ப்ளூ கலர் மட்டும்தான் கண்ணுல பட்டுது.

    சரிங்க..நீங்க அடிக்க வரதுக்குள்ள நான் கிளம்பறேன்!

    ReplyDelete
  10. //காமெடி உங்க கூடவே பிறந்து வளர்ந்திருக்கா என்ன?// சொல்றது யாரு என்று பாருங்க. நம்ம உலகப் பிரசித்தி பெற்ற இட்லி டீச்சர்.

    மகி மனதை லேசாக்கும் மகிமை என் உலகிற்கு இருக்கிறதா!!! சந்தோஷம், தொடர்ந்து வந்து சிரிச்சுட்டுப் போங்க. அடிக்க எல்லாம் மாட்டேன், ஓடிராதைங்க.

    பி.கு
    ஒரு சீரியஸ் பதிவு போடறதா இருந்தேன். இப்போ போட யோசனையா இருக்கே!

    ReplyDelete
  11. இமா,
    //பி.கு
    ஒரு சீரியஸ் பதிவு போடறதா இருந்தேன். இப்போ போட யோசனையா இருக்கே!//
    எனக்கு நினைக்கவே அழுவாச்சி அழுவாச்சியா வருது??
    மகியின் பெயர்கள் எல்லாமே நல்லா இருக்கு!!இட்லி டீச்சர், திருமதி. எலி. ஹா ஹா.....ஒரே நகைச்சுவையாக இருக்கு.

    ReplyDelete
  12. Imaa akkaa! I am fan of the comments you get... ROTFL :))

    ReplyDelete
  13. கண்ணைத் துடைச்சுக் கொள்ளுங்க வாணி. கனபேர் எதிர்ப்புத் தெரிவிக்கினம். ஆனபடியால் எழுதப் போறது இல்லை. அந்த யோசினையைக் கைவிட்டாச்சுது. மேல வெறுசாக் கிடக்கு. ;) யாரவது வந்து 'மேல வைங்கோ' எண்டு எதாவது எடுத்துத் தந்தால் நல்லது.

    ~~~~~~~~~~

    வாங்கோ இலா. எல்லோரும் வந்து சிரிக்க வேணும். அப்பதான் இமாவுக்குச் சந்தோஷமா இருக்கும். இங்க சரியான வெக்கையாக் கிடக்கு இலா. விசிறியக் காணேல்ல எண்டு தேடிக் கொண்டு இருக்கேக்க பார்த்து சரியா வந்தீங்கள். வந்து சும்மா விசிக்கிக் கொண்டு நிக்காமல் நீங்களும் என்னவாவது சொல்லி இருக்கலாம்தானே! உங்கட கண்ணுக்கு 'வெள்ளக் கலர் அடிச்சது மட்டும்தான் வடிவாத் தெரிஞ்சுது' எண்டாவது சொல்லி இருக்கலாம். நொந்து போய்க் கிடக்கிற இமா மனதுக்கு ஒரு ஆறுதலாயாவது இருந்திருக்கும். வாற கிழமை வந்து கட்டாயம் இப்பிடிச் சொல்லுவீங்கள் எண்டு எதிர்பார்க்கிறன். ;)

    ReplyDelete
  14. //நம்ம உலகப் பிரசித்தி பெற்ற இட்லி டீச்சர்.//

    இமா வாய் விட்டு சிரிக்க வைக்கறீங்களே..

    ReplyDelete
  15. ;) no comments. சில விஷயங்கள் பரிசீலனைல இருக்கு. ;)

    ReplyDelete
  16. //முற்றிலும் முடிந்தபின்புதான் கொமென்ட் சொல்வேன்.. அதிராவோ கொக்கோ?:)//

    நானும் இப்ப சொல்ல மாட்டேன், அதிராவை நினைத்து சிரிக்கிறேன்.

    ReplyDelete
  17. ம்... இனி எல்லோரும் படம் முழுசாப் பார்த்த பிறகே விமர்சனம் பண்ணுங்கோ. ;) எல்லா ஸ்டெப்ஸ்சையும் படம் எடுத்து வைத்து ஒன்றாகப் போடுறன்.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா