Showing posts with label ;). Show all posts
Showing posts with label ;). Show all posts

Thursday, 21 December 2017

யார் இவர்?


இவரைப் பற்றி....


அறிந்தவர்கள் விபரம் சொல்லலாம். 

Tuesday, 19 December 2017

அழகுக் குறிப்பு!

படித்ததில்.........
பிடித்தது! 
:-)

Saturday, 20 July 2013

என் வலி தனீ... வலி!!

துடைப்பம்.....
 
 
 
 
பிஞ்...சுரும்!

Tuesday, 27 November 2012

வெஜிடபிள் பிரியாணி

புதினாச் செடியின் படம், வெஜிடபிள் பிரியாணி-ன்னு டைட்டில்!  இந்த ரெண்டுக்கும் என்ன சம்பந்தம்னு இந்நேரம் நீங்களே கண்டுபுடிச்சிருப்பீங்க..கரெக்ட்டா? பின்னே.. மகி'ஸ் ஸ்பேஸ் ரீடர்ஸ்-ஆ கொக்கா?! :))))))

Monday, 10 September 2012

மாமா, யமி, பாட்டி & இமா

இவர் எங்கள் யமி.

அறுசுவையில் அடிக்கடி 'அமானுஷ்யம்' இழை முகப்பில் வருகிறது. எனக்கு யமி நினைப்பு வந்தது. படத்தைத் தேடிப்பிடித்தேன். கூடவே செபாவின் ஒரே தம்பியின் நினைப்பும் வந்தது. ;(

'இமாவின் பாட்டி கண்ட 'அது' என்னும் தலைப்பில் ஒரு பேய்க்கதை ;) எழுதினேன். 1997 செப்டெம்பர் 13 - 15 க்கு இடைப்பட்ட காலப்பகுதியின் நிகழ்ந்த உண்மைச் சம்பவம் அது.

15வது வருட நிறைவையிட்டு அனுபவங்கள் இரைமீட்கப்படுகின்றன.
பாட்டி இறந்து பதின்மூன்று வருடங்கள் நிறைவாகிவிட்டது. யமி இறந்தும் பத்து வருங்களாகிவிட்டது.

விரும்பினால் படிக்கலாம். ;) எச்சரிக்கை - கதை சிறியதுதான் ஆனால் அடுத்தடுத்த பக்கங்களிலும் தொடர்ச்சி இருக்கும்.

Saturday, 8 September 2012

பூ முடித்தாள் இந்தப் பூங்குழலி

;) _()_

பூ வைக்க இந்தப் பூவைக்குக் கொள்ளை ஆசை, அதிலும் சரம் வைக்க. ஆனால் ஊசி நூல் கொண்டு கோர்க்க மட்டும் வரும்.

எப்போதோ பக்கத்து வீட்டுக் கலியாணத்திற்கு அவர்கள் சொன்னது போல் கட்டிக் கொடுத்துவிட்டு மறந்து போனேன். பிறகு ஒரு இந்தியத் தோழி (Aunty) காட்டிக் கொடுத்தார்கள். திரும்பவும் மறந்தேன். டச் விட்டுப் போச். பூ இருந்தால்தானே டச்.

சமீபத்தில் ஒரு இணையத்தோழி உதவ.... செய்முறை கிடைத்தது. ஆனால் பூ!! இருந்த மல்லிகையை வெட்டியாயிற்றே!! காலை செபா வீட்டுக்குப் போய் வெளியே வருகையில் கண்ணில் பட்டது இந்த மல்லிகையின் சக்களத்தி. ;))

பிடுங்கி வந்தேன். வீட்டில் இறங்கும் போது ஒருமாதிரி மயக்கமாக இருந்தது, அவ்வளவு வாசனை.

இரவெல்லாம் மழை. பூக்கள் நிறையவே நீரை உறிஞ்சிவைத்திருந்தன. காம்பும் சின்னது. எப்படியோ மல்லுக்கட்டி.... சரம் கட்டி...

கூந்தலில் சூடினால் படம் பிடிக்க ஆள்!!! க்றிஸ் உதவிக்கு வந்தார். ஏதோ கலியாண ஃபோட்டோ ஷூட் போல அரைமணி நேரம் சுட்டு மீந்தது இந்த இரண்டும்தான். அதற்குள் பாதிப் பூக்களுக்கு பாதிப்பு வந்து கொட்டிப் போய் விட்டது.

ஒரு ஆன்டிஹிஸ்டமைன் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்.... தங்கள் கனிவான கருத்துக்களை எதிர்பார்த்து. ;)))))

நன்றி _()_

Friday, 27 July 2012

பூ மீது யானை!!! கார் மீது காண்டாமிருகம்!!

பூ மீது யானை, பூ வலியைத் தாங்குமோ!!!
பாடல் கேட்கும், காட்சி பார்க்கும் ஆசையில் இணையத்தில் தேடினேன்.

கிடைத்தது.... இந்தப் பூ மீது யானை. ;)

மால்குடி சுபா பாடிய 'பூ மீது யானை' பாடற்காட்சி பார்க்க யாராவது உதவுவீர்களா!!

இடுகை சிறிதாக இருப்பதால்... என் கடந்த விடுமுறையில் நான் சிறைப் பிடித்த.... 'கார் மீது காண்டாமிருகம்' உங்கள் பார்வைக்கு.
;) வெலிங்டனில் உள்ள மியூசியம் ஹோட்டல் வாயிலில் நிற்கும் காண்டாமிருகம் இது.
28 / 07 / 2012 பி.கு:- அந்த 'நீர்யானை' ஹோட்டல் வாசலில் மேலே நின்றது. கார் தெருவைத் தாண்டி தொலைவில் நின்றது. இமா நின்றது அதிலிருந்து மிகத் தொலைவில். உயரம் பொருத்தமாக வரும் விதமாக என் உயரத்தைச் சரிசெய்து ;) எடுத்தது இந்தப் படம்.

Sunday, 17 June 2012

மனமுண்டானால்...

"ச்சிப்! ச்சிப்! ஹாய்ய்ய்!"
எல்லாருக்கும் பாங்க்ல, ஹௌசிங் லோன் குடுக்கிறாங்கள். எங்களுக்கு மட்டும் தரமாட்டினமாம். ;( ஷூரிடி கேட்கினம்.
கதவடைப்பு சத்தியாக்கிரகம்; ம்... இவங்கட காசை இவங்களே வைச்சுக் கொள்ளட்டும் எண்டு, நாங்கள்.....
பாங்க் சுவரிலயே ஹௌஸ் கட்டியாச்சுது.
இப்ப....
எங்களுக்கு ரெண்டு பிள்ளைகளும் இருக்கினம். இனிமேல் பின் கதவைத் திறக்க முடியாது இவை."
~~~~~~~~~~~~
வங்கி பின்புறம் வாகனத்தை நிறுத்திவிட்டு க்றிஸ் உள்ளே போய்விட்டார். என் கவனத்தைக் கலைத்தது மெல்லிய "கீச்கீச்".
 தந்தை... மேலே உடலுலர்த்த... தாய்ப்பறவை பறந்து பறந்து இரை தேடிக் கொடுத்தது.

"பாங்க்ல களவு போனால் முதலில என்னைத்தான் பொலிஸ் தேடி வரும்," என்று க்றிஸ் சொன்னதைக் கவனிக்காமல் ஃபோட்டோ எடுத்து இருக்கிறன். ஒண்டும் ஆகாமல் இருக்கவேணும் எண்டு மன்றாடுங்கோ மக்கள். ;)

Friday, 13 January 2012

வலையுலக உறவுகளுக்கு நன்றி ;)

Have a feast! ;)


வாழ்த்திய அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

எங்கும் என் பிறந்ததேதியை வெளியிட்டதில்லை. ஆனாலும் சிலர் எப்படியாவது மோப்பம் பிடித்துவிடுகிறார்கள். ;) சென்ற வருடம் 'அமைதியாக இருக்கவேண்டும்,' என்று சிவாவை எச்சரித்திருந்தேன். இம்முறை வேலைப்பழு... மறந்துவிட்டது. என்னிடம் திருத்ததிற்காக வந்திருந்த இடுகையை அவசரமாக ஒரு பார்வை பார்த்துத் திருத்தி அனுப்பிய பின்பும்.... "எடிட் பண்ணிட்டுப் போடுறேன்," என்று சிவா சொன்னதன் கருத்து இதுதான் என்று இடுகை வெளியானதும்தான் புரிந்தது. ;))

வேண்டாம் என்று தோன்றினாலும்... சந்தோஷமாக இருந்தது / இருந்தேன் என்பதை மறுக்கமாட்டேன். ;)
  • 'என் பக்கம்' முகப்பில் பளபள பட்டாம்பூச்சியும் அழகு தங்க ரோஜாச்செண்டுமாக வாழ்த்திட்டு மகிழ்வித்த அன்புத்தோழி அதிரா
  • அதிகாலை தொலைபேசியில் அழைத்து வாழ்த்தி மகிழ்வித்த வலையுலகத்தோழி அம்முலு
  • 'டிஸ்கி' போட்டு வலையுலகுக்கெல்லாம் என் பிறந்தநாளை பறைசாற்றி வைத்த செல்லக்குட்டி சிவா ;) & அங்கு வாழ்த்தியோர்
  • ARUSUVAI-யில் அமைதியாகப் பதிவிட்டு வாழ்த்திய மயில்
  • நிலாவுக்கு உதவியாக இருந்ததுபோலவே... எப்போதும் ரகசியமாக எனக்கும் உதவியாக இருந்து ஆலோசனைகள் உ(கு)ரைக்கும் ஜீனோ ;)
  • தொலைவிலிருந்தாலும் மறவாமல் நினைவு வைத்து வாழ்த்துச் சொன்ன அன்புமகன் அருண்
  • கருத்துப் பெட்டியில் வாழ்த்துரைத்தோர்
  • 1,2,3 சொல்லி வாழ்த்தியவர்கள் - முக்கியமாக VGK அண்ணா
  • மின்னஞ்சலில் வாழ்த்தியோர்
  • முகப்புத்தகத்தின் மூலம் அமைதியாக வாழ்த்தியோர்
  • வேறு யாரையாவது விட்டிருந்தால்.... (அவர்கள் அது தற்செயலாக நிகழ்ந்தது மட்டுமே, என்று கொள்ளுமாறு வேண்டி....)
அன்பு நன்றி கூறி விடைபெறுகிறேன்.
_()_




ஃபோட்டோக்கள் எவையும் நான் எடுத்தவை அல்ல. 

Thursday, 29 September 2011

Who is online?


Surely not imma. ;)

It's U...
You are online now. ;)

Tuesday, 13 September 2011

!!! - 'ஜூம்...'


~~~~~~~~~~~~
பின்னிணைப்பு - 14/Sep

;) பிறந்தநாள் பையனுக்காக கொஞ்சமா 'ஜூம்' போட்டு...

நிறைய 'ஜூம்ம்ம்' ;)
பிறகு....
கீழே இன்னொருவர் வந்தார்.
குரல் கேட்டு மற்றுமொருவரும் சற்று நேரத்தில் ஓடி வந்தார்.
போர்மூட்டத்திற்கான அறிகுறிகள் தென்பட்டன.
என்மேல் குதிக்காதிருக்க வேண்டுமே என்கிற பயத்தில் நான் 'எஸ்...' ;)

Tuesday, 30 August 2011

காத்திருப்பு!


இந்த ரெஸ்டோரண்ட்லதான் லஞ்ச் எண்டு சொன்னவர்.

இன்னும் ஆளைக் காணேல்ல. ;(

இங்க நல்ல காத்தா இருக்கு. சுகமாக் கொஞ்ச நேரம் இருப்பம்.

எவ்வளவு நேரம்தான் நான் காத்து இருக்கிறது!!! ;(
எங்க சைட் அடிச்சுக் கொண்டு இருக்கிறாரோ தெரியேல்ல. ;((
போய்த் தேடிக் கொண்டு வாறன்; பொறுங்கோ.

எங்க ஆளைக் காணேல்ல!! இங்கதானே இருக்கிறதெண்டு சொன்னவா!!

எங்க!!!

ஒரு வேளை!!!!! அங்கிள்தான் உரிச்சு வச்சுப் போட்டு சமைக்க குறிப்பு தேடுறாரோ!!!

பார்க்கிற பார்வையைப் பார்த்தால்... வண்டியையும் பார்த்தால்... என்னையும் பிடிச்சு ரோஸ்ட் பண்ணீருவார் போல கிடக்கு!

என்ன செய்யிறது நான் இப்ப!!!

இதென்ன!! உள்ள அவனில லைட் பத்துது. 
ஒரு வேளை!!!!
கடவுளே!!
அப்பிடி ஒண்டும் ஆகி இருக்கப்படாது. ;((

கொக்! கொக்!
எங்க எல்லாம் தேடுறது உங்கள!!
நீங்களும் உங்கட லஞ்சும். கொக்!
ஒண்டும் வேணாம்.
அந்த அங்கிளுக்குத் தெரியாம ஃபாம்ல போய்....

அங்க ஃபாமர் தாற மாஷையே சாப்பிடுவம் வாங்க.

இது பறவையூர்ல இருக்கிற பஸ் ஸ்டொப். ;)