Tuesday 14 May 2013
Thursday 9 May 2013
பக் பக் பயணம்
வாழ்க்கையில்...
பயணங்களற்ற பொழுதுகள் பல
'பக் பக்' 'திக் திக்'
இப்படி இருக்க...
'பக் பக் பயணம்' என்று
எதைச் சொல்ல!
எதை விட!
மொத்த வாழ்க்கையுமே
பக் பக் பயணம்தானே!
பயணங்களற்ற பொழுதுகள் பல
'பக் பக்' 'திக் திக்'
இப்படி இருக்க...
'பக் பக் பயணம்' என்று
எதைச் சொல்ல!
எதை விட!
மொத்த வாழ்க்கையுமே
பக் பக் பயணம்தானே!
கடக்கையில்...
திக்திக்!
இதுவும் கடந்து போகுமென்று,
பல் கடித்துக் கடந்து முடித்திட...
'அப்பாடா!
நிம்மதிப் பெருமூச்சு.
பெரிதாய்த் தெரிந்த,
முதல் வந்த 'பக் பக்',
அடுத்து வந்த பெரிதொன்றால்,
மனதின் ஓர் இருள் மூலையில்.
அடுத்து வந்தது...
அதையும் விடப் பெரிது.
பெரிதா!
பெரிதாய்த் தோன்றிற்றா!!!!
வருடா வருடம்
கோடையும் குளிரும்
தப்பாமல்...
தப்புத் தப்பாய் வருகிறது.
"போன வருடத்தை விட
இம்முறை கொடுமை!'
தப்பாது சொல்கிறோம் நாமும்.
சிந்தித்துப் பார்க்கிறேன்,
இவை,
வெறும் தோற்றம்தானோ!
கோடையில் விசிறிக் கொள்ளலாம்;
குளிரில் கம்பளி போர்த்தலாம்.
மறுவருடம் மறந்து
அதையே சொல்லலாம்,
"போன வருடத்தை விட
இம்முறை கொடுமை!'
பக்கென்றதெல்லாம்
பத்திரமாய் உறங்குகிறது.
உறக்கட்டும் நிம்மதியாய்
விழிக்கும் போது விழிக்கட்டும்.
நான்...
அதன் உறக்கம் கலைக்க வேண்டாம்
என் உறக்கம் தொலைக்க வேண்டாம்.
திக்திக்!
இதுவும் கடந்து போகுமென்று,
பல் கடித்துக் கடந்து முடித்திட...
'அப்பாடா!
நிம்மதிப் பெருமூச்சு.
பெரிதாய்த் தெரிந்த,
முதல் வந்த 'பக் பக்',
அடுத்து வந்த பெரிதொன்றால்,
மனதின் ஓர் இருள் மூலையில்.
அடுத்து வந்தது...
அதையும் விடப் பெரிது.
பெரிதா!
பெரிதாய்த் தோன்றிற்றா!!!!
வருடா வருடம்
கோடையும் குளிரும்
தப்பாமல்...
தப்புத் தப்பாய் வருகிறது.
"போன வருடத்தை விட
இம்முறை கொடுமை!'
தப்பாது சொல்கிறோம் நாமும்.
சிந்தித்துப் பார்க்கிறேன்,
இவை,
வெறும் தோற்றம்தானோ!
கோடையில் விசிறிக் கொள்ளலாம்;
குளிரில் கம்பளி போர்த்தலாம்.
மறுவருடம் மறந்து
அதையே சொல்லலாம்,
"போன வருடத்தை விட
இம்முறை கொடுமை!'
பக்கென்றதெல்லாம்
பத்திரமாய் உறங்குகிறது.
உறக்கட்டும் நிம்மதியாய்
விழிக்கும் போது விழிக்கட்டும்.
நான்...
அதன் உறக்கம் கலைக்க வேண்டாம்
என் உறக்கம் தொலைக்க வேண்டாம்.
அதனால்... ;)
Sunday 5 May 2013
வேண்டும் வரம்
வரத்துக்காக ஓர் வரம்!
வரமொன்றாய் வந்து
வாழ்வையே வரமாக்கியவனே!
குறும்புக் குழந்தையாய்,
தம்பியாய்த் தமையனாய்
தட்டிக் கேட்கும் ஆசானாய்,
பொறுப்பான மகளாய்
உற்ற தோழனாய்
சமயத்தில் தாயுமாய்
யாவுமான என் செல்வமே!
நீ இரவல் பெற்றுக் கொடுத்த
இருபத்தாறு வருடங்களும்
வளமான வசந்தம்.
திரும்பிப் பார்க்கிறேன்...
கல்லும் முள்ளுமாய்க்
கடந்து வந்த பாதை,
இன்று பச்சைப்புல் பதித்து
கரையெலாம் பூப்படுக்கை.
இனி எத்தனை முறை
நடக்க நேர்ந்தாலும்
வலிக்காது என் கால்கள்
தளராது என் உள்ளம்.
இன்றொரு வரம் கேட்கிறேன் இறையை
வேண்டும்...
இன்னும் ஈரிருபத்தாறு வருடம்
உன்னோடு,
உனக்காக.
Many happy returns of the day Mahan. @}->--
God bless you.
- 05/05/2012
Friday 3 May 2013
பொற்கிழி!
சாத்தாவாரி இலைக்குப் பெயர் சொல்ல முனைந்த அனைவருக்காகவும் இந்த இடுகை.
2007 செப்டெம்பரில் கான்பரா சென்றிருந்தோம். நண்பர் Royal Australian Mint -க்கு அழைத்துப் போனார். அன்று ஏதோவொரு காரணத்தால் பல பிரிவுகள் மூடி இருந்தது. இருந்தாலும் என் சின்னவர் கண்ணில் இந்த ஆல்பம் பட வாங்கிவந்தோம். என்னிடம் இருந்த நாணயங்களுக்கு அது போதாதென்று தெரிந்தது. மேலதிகமாக ஒரு refill வாங்கினோம்.
ஒரேயளவான நாணயங்கள் அவற்றுக்கான பைகளில்.
'ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம்,' போல coin album ஒன்றுக்கு ஒரு தனிப் பக்கம். ;)
ஆல்பம் வைக்கும் இந்தப் பை செபாவின் அன்பளிப்பு
ஒன்றிரண்டு டோக்கன்கள் இருக்கின்றன. ;) வெலிங்டன் கேபிள் கார் மியூசியத்திலிருந்த இயந்திரத்தில் நான் அடித்தெடுத்த செப்புத் தகடும் இருக்கிறது.
இந்த அட்டைப் பெட்டி... சின்னவர் ஒரு கிறிஸ்மஸுக்கு எனக்கு வாங்கிக் கொடுத்த அன்பளிப்பு வந்திருந்த அட்டைப் பெட்டி.
2007 - South Island விடுமுறையின்போது சின்னவர் வாங்கிக் கொடுத்த notepadகள்.
28/01/2011- சென்னை விமானநிலையத்தில் வாங்கியது.
சட்டத்திலுள்ளது, அவர் லண்டனுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது வாங்கிவந்தது.
'கலெக்டபில்ஸ்' எங்கு கண்டாலும் வாங்கிச் சேர்ப்பேன்.
'கலெக்டபில்ஸ்' எங்கு கண்டாலும் வாங்கிச் சேர்ப்பேன்.
ஒருமுறை என் சேகரிப்பைப் பார்த்த நண்பரொருவர் தனக்குத் தெரிந்த நாணய விலைமதிப்பீட்டாளர் ஒருவரை அழைத்து வந்தார். விலைமதிப்பான நாணயங்கள் என்றில்லாவிடினும் 'என் பல வருடசேமிப்பு' என்பதற்கான பெறுமதி உண்டல்லவா? அவரது அறிவுறுத்தலின்படி அப்போதிருந்து இவற்றை வீட்டில் வைப்பதில்லை.
Thursday 2 May 2013
இலையொன்று காண்பீர்!
1. தாமதத்திற்கு வருந்துகிறேன். ;(
2. முன்கதைச் சுருக்...come ;) இங்கே
3. பதில் சொல்லாமல் நழுவியவர்கள் அனைவர்க்கும் இமாவின் உலகம்... 'நழுவல் திலகம்' என்கிற பட்டம் கொடுத்து கௌரவிக்கிறது. ;)
4. வந்திருந்த பதில்கள் :-
வெந்தயக்கீரைடில்சோம்பு, fennel, சீரக இலை, ajwainசவுக்கு&க்றிஸ்மஸ் ட்ரீரோஸ்மெரிமயிர் மாணிக்கம்Aniseed... (தாவரங்களின் படங்கள் பார்க்க விரும்பினால் அங்கங்கே சொடுக்கவும். இணைப்பு கொடுத்திருக்கிறேன்.)
evergreen, fern, சாத்தாவாரி - இந்த மூன்றிலொன்று சொல்லி இருந்தால், "விடைக்குப் பக்கமாக வந்துவிட்டீர்கள்," என்று சொல்லியிருப்பேன்.
5. முடிவு
ஈட்டி என்றேன்.
ஈட்டிக்கு ஆங்கிலம்.. என்ன?
ஈட்டி என்றேன்.
ஈட்டிக்கு ஆங்கிலம்.. என்ன?
என்ன!!
என்..ன!?!?
spear... பதில்...as..pa..ra..gus ;)
Subscribe to:
Posts (Atom)