வீட்டில் இடம் நெருக்கடியாகத் தோன்றிய ஒரு சமயம் ஒன்றாய் தொலைக்காட்சிப் பெட்டியும் இடறல் செய்ய... சுவரில் மாட்டுவதுபோல் ஒன்று வாங்கிவிட்டால் இடத்தை மிச்சம் பிடிக்கலாமென்று வாங்கி மாட்டியும் ஆகிற்று. மீதிப் பொருட்களை எங்கே வைப்பது என்று சிந்திக்க, மூத்தவர் கொடுத்த யோசனை, சுவரில் ஒரு தட்டு அடிக்கலாம் என்பது.
இது முன்னோட்டம்.
கிடைத்த பழைய கதவு ஒன்று. ;) வெண்மையாக இருந்தால் அழகாக இருக்குமா அல்லது 'வார்னிஷ்' பூச்சு அழகாக இருக்குமா!
தட்டு எந்த வடிவில் இருக்கவேண்டும் என்பது பற்றி ஆலோசனை நடந்தது. இறுதியாக வீட்டில் ஏற்கனவே செய்து வைத்திருந்த தேநீர் மேசைக்குப் பொருத்தமாக அமைப்பது என்று முடிவானது.
மேசை மேல் புதினத்தாளை விரித்து வைத்து வெளி வடிவத்தைப் பிரதி எடுத்தேன். பொருத்தமாக நீளத்தைச் சரிசெய்து கொடுத்தேன். பிறகு க்றிஸ் வேலையை ஆரம்பித்தார்.
பலகையை வெட்டி, முதல் முறை பூச்சுக் கொடுத்துக் காயவைத்தாயிற்று. வெள்ளைப் பலகையை எடுத்துவிட்டு சுவரில் இதை வைத்துப் பார்த்தோம். பிறகு இந்தச் சட்டம்...
பின்னால் உள்ள கம்பியை அழகாக மறைப்பதற்காக பொருத்தப்பட்டது.
எல்லாம் சீராக்கி, அரம் & அரத்தாள் கொண்டு தேய்த்து மீண்டும் பூச்சுப் பூசி மாட்டி இப்போ இப்படி இருக்கிறது. பலகைக்சுவர்; இடையே எங்கு மொத்தமான சட்டங்கள் இருக்கின்றன என்பதைக் கவனத்தில் வைத்தே தொலைக்காட்சிப் பெட்டியையும் தட்டையும் மாட்டவேண்டியிருந்தது. சரியாக நேராக மாட்ட இயலவில்லை. ;(
யாராவது எதையாவது கீழே போட்டு தட்டின் கீழ் குனிந்து நிமிர்ந்து... தலையில் தட்டிக்கொள்ளாமல் இருக்க... அதன் கீழ் இந்தக் குட்டித் தோட்டம்.