ட்ரிக்ஸிப் பொம்பிளை வந்த நாளில செய்ய விரும்பினது, கொஞ்சம் லேட்டாப் போச்சுது போல. புற்தரையில வோக் கூட்டிப் போகவேண்டும் எண்டு ஆசை. ஒரு ஹானஸ் வாங்கப் போனேன். வாங்கி வந்து ட்ரிக்ஸியைப் பிடித்து மாட்டப் பார்த்தால்... இந்தம்மா மகா சைஸ் ஆக இருந்தார். ;( அதைக் கடையில் திருப்பிக் கொடுத்துவிட்டு நாலு வைக்கோல் கட்டு வாங்கிவரலாம் என்று போனன்.
கடைக்காரப் பொம்பிளை, "பூனைக்கான ஹானஸ் சரியாக இருக்கும். அதுதான் பெரிய முயலுக்கு விற்கிறனாங்கள்," என்று எடுத்துத் தந்தா. அதில எழுதி இருந்துது... Trouble Trix என்று. அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வாங்கியாச்சுது. இல்லேல்ல, வித்தாச்சுது. (முன்னையதை விட இது விலை குறைவாக இருந்துது என்று கையில $3.00 கிடைச்சுது.)
வீட்ட வந்து ட்ரிக்ஸியைக் கூப்பிட்டு மாட்டினன். முதல் நாள் என்னையும் இழுத்துக்கொண்டு சந்தோஷமாக வளவெல்லாம் ஒரே ஓட்டம். பத்து நிமிஷம் கழிஞ்சு களைச்சுப் போய் பொத்தென்று ஒரு இடத்தில படுத்தாச்சுது ஆள். பிறகு தூக்கி வந்துதான் கூட்டில விட்டனான்.
அடுத்த நாள் ஹானஸ் கட்டின பாதியில பிடுங்கிக் கொண்டு ஓடீட்டா ட்ரிக்ஸி. சரியென்று விட்டாச்சுது. இப்ப என்னடா என்றால்... ஊதா கலர்ல (ஊதாவா அது!!) ரிபன் மட்டுமில்ல, என்னத்தை கண்டாலும் ஒரே ஓட்டம் கூடுக்குள்ள. தன்னை கட்டாமல் சுதந்திரமாக புல்லில ஓட விடட்டாம். அப்பிடியே பேஸ்மண்ட்டுக்குள்ள ஓடினால் நான் பிறகு எப்பிடிப் பிடிக்கிறது! அதை விட ஒரு பெரும் பூனைப் படை இருக்கிற இடம் இது.
பின்னேரம் நான் வேலையால வந்ததும் கதவடியில போய் நிற்கிறா. திறந்து விட்டால் (ஒரு தட்டி மறைப்பு வைச்சிருக்கிறம்.) பத்து நிமிஷம் புல்லில குதிச்சுப் போட்டு உள்ள வந்துருவா. நாங்கள் உள்ள வந்தாலும் வெளியில நிற்க மாட்டா. தனிய நிற்கப் பயம் போல இருக்கு.
அடைக்கவேணும் என்று எப்ப நினைச்சாலும் ஊதா!! கலரில எதையாவது காட்டினால் வேலை ஆகீருது. ;))
தமிழ் விளங்கினால்...
'ஊதா கலர் ரிப்பன்' பாட்டுக் கேட்டாலும் ஓட்டம் பிடிக்கும் போல. ;)))) ஆமாம், ஒரு சந்தேகம் எனக்கு. பாட்டில் வாறது நீலக் கலர் ;)) ரிபனாக இருக்க ஏன் 'ஊதா... கலர்' என்கினம்! ஒருவேளை எனக்குத்தான் கண் சரியாத் தெரியேல்லயோ! ;)))
அந்த ரிபன் வடிவா பாம்பு மாதிரி டான்ஸ் ஆடுது. ;)))