Friday 18 October 2013

வசந்தம் வருது

காட்சி இங்கே
கவிதை... அங்கே!

29 comments:

  1. என்னவொரு அழகு!...

    கண்களைச் சொக்க வைக்கும் சுந்தரி இங்கே..
    மனசை சொக்க வைக்கும் வரிகள் அங்கே...

    அற்புதம்! அருமை!

    இணைத்துப் படைச்சிருந்தா என்னவாம்..
    இன்னும் நல்லா இருக்குமே...;)

    வாழ்த்துக்கள்!...

    ReplyDelete
    Replies
    1. //இணைத்துப் படைச்சிருந்தா// கவிதையை அறுசுவைக்கு அனுப்ப விரும்பினேன். அங்கு படம் சேர்க்க வழி இல்லை. அங்கு வெளியானதன் பின்னால் எனக்கு உரிமை இல்லை.

      மிக்க நன்றி இளமதி.

      Delete
  2. வசந்தம் தரும் வரிகள்... முடிவில் ஆறுதலாய் "பொம்மை இருக்கு... பொழுது போய்விடும்...!"

    ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. //ஆறுதலாய்// :-) ஆமாம், என்னை நானே தேற்றிக் கொள்ள எழுதியது அந்த வரி. சில சமயம் பார்க்கப் பாவமாக இருக்கிறது தனபாலன்.

      Delete
  3. வணக்கம் சகோதரி,
    அய்யோ! அவ்ளோ அழகு முயல் குட்டி பொம்மையுடன் விளையாடும் காட்சி. தங்கள் பதிவு எப்பவும் வித்தியாசமாக இருக்கும். காட்சி இங்கே கவிதை அங்கே வித்தியாசமான சிந்தனை. கவிதைகள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது. பகிர்வுக்கு நன்றீங்க.

    ReplyDelete
    Replies
    1. :-) _()_ மிக்க நன்றி பாண்டியன்.

      //முயல் குட்டி பொம்மையுடன் விளையாடும் காட்சி// அது நேரில் பார்க்கவேண்டும். அழகு. என்னோடு கோபிக்கிற மாதிரி பொம்மைகளோடு கோபிக்க மாட்டாங்க. ;D

      Delete
  4. கவிதையிலுள்ள "பொம்மைக் குழந்தை" என்பதை சரியாகக் கவனிக்காமல் பழைய இடுகைகளைப் புரட்டிப் பார்க்கப் போயிட்டேன் 'ட்ரிக்ஸ(ன்)'னைத்தேடி.

    "எலி பெற்ற பிள்ளை போல் கோணற்தலையும் குண்டுக் கண்ணும் குட்டி வயிறும் குச்சு வாலுமாய்"_________ 'காக்கை' பழமொழி எலிக்கு பொருந்தாதோ?

    உங்கள் கற்பனைகளை 'ட்ரிக்ஸி'யின் மூலமாக சொல்லவைத்ததை ரஸித்தேன்.அவரை மாதிரியே அவரது பொம்மைப் பாப்பாவும் அழகா இருக்காங்க.

    ReplyDelete
    Replies
    1. உங்க இந்த கமண்ட் ரொம்ப பிடிச்சிருக்கு சித்ரா. இதற்காக உங்களுக்கு ஒரு @}->--

      காக்கை - எலி ம்...
      முதலாவது பழமொழியைப் பயன்படுத்தி (இமா) எழுதிய வரிகள். ட்ரிக்ஸி காக்கையை அறியாது. இங்கு இல்லை.
      இரண்டாவது ஒப்பீட்டுக்காக எழுதப்பட்டது. ட்ரிக்ஸி கண்ணால் கண்ட நிஜம் அது.

      நிறைய சிந்தித்தபடியேதான் எழுதினேன். என்னதான் சொன்னாலும்... காக்கை அம்மா கொஞ்சம் சுயநலவாதிதான். குயிற்குரல் இனிமை; காக்கைக்குரல் கரமுரா. பாசமாக ஊட்டி ஊட்டி வளர்த்துவிட்டும் கூட தன் குஞ்சு அல்ல என்பது தெரிந்ததும் துரத்திவிடுகிறது. பரிதாபம் இல்லையா குயிற்குழந்தையின் நிலை! ;((( திடீரென்று வீடிழந்து, குடும்பம் இழந்து, பறக்கப் பழக்கவும் யாருமில்லாமல். ;(

      //எலி பெற்ற பிள்ளை// ;D உண்மையில்... முயற்குட்டியும் எலிக்குஞ்சும் (அணிற்பிள்ளையும்) பிறக்கும் போது ஒரே மாதிரித்தான், ரோஜா வர்ணத்தில் //கோணற்தலையும் குண்டுக் கண்ணும் குட்டி வயிறும் குச்சு வாலுமாய்// இருக்கும். ட்ரிக்ஸி வளர்ந்தபின் வேறு முயற்குட்டிகளைக் கண்டதில்லை. எலிக்குஞ்சுகளைக் கண்டிருக்கிறார். அவருக்கு தன் பிள்ளையும் எலிக்குஞ்சு போலத்தான் பிறக்கும் என்பது தெரியாது. ;D

      Delete
  5. தாயாகப்போகும் தங்கத்துக்கு வாழ்த்துக்கள். பிள்ளை பெறுமுன் எத்தனை முன்னேற்பாடுகள். முதற்பேறோ? மெத்தை அமைக்கும் அழகும் நேர்த்தியும் மனம் கொள்ளை கொண்டன. இத்தனைக்கும் மத்தியில் எலிக்குஞ்சு பற்றியென்ன ஏளனப்பேச்சு? ம்ம்... ட்ரிக்ஸியின் மனத்தில் உள்ளதை அழகான கவியாக்கிய உங்களுக்குப் பாராட்டுகள் இமா.

    ReplyDelete
    Replies
    1. //பிள்ளை பெறுமுன் எத்தனை முன்னேற்பாடுகள்.// ஆமாம். இயற்கை உந்துதலில் இத்தனையும் நடக்கிறது. //முதற்பேறோ?// இரண்டு முறை வளை தோண்ட ஆரம்பித்தாங்க. தப்பி ஓடிருவாங்க. பூனை பிடிச்சுரும். கல்லைப் போட்டு மூடி வைத்திருக்கிறேன். தனியாகத்தான் இருக்கிறாங்க. அதனால் பொம்மைக் குழந்தைதான் தற்போதைக்கு. 2014ல் ட்ரிக்ஸிக்கு ஒரு தத்துக் குழந்தை கிடைக்கலாம்.

      //மெத்தை அமைக்கும் அழகும் நேர்த்தியும்// எனக்கு அழுகை வந்துரும். கற்றை கற்றையாகப் பிடுங்கி வைக்கிறாங்க. வலிக்காதோ தெரியாது. ;( //எலிக்குஞ்சு பற்றியென்ன ஏளனப்பேச்சு? // ;)))
      ட்ரிக்ஸி சாப்பாட்டைத் திருடுறவங்க அவங்க. அதான். ;D

      நன்றி கீதமஞ்சரி. உங்களுக்கும் ஒரு @}->--

      Delete
  6. //என் பிள்ளைக்கில்லாதது
    எனக்கு மட்டும் எதற்காம்!// தாய்மை!! எந்த உயிராய் இருந்தால் என்ன?
    கவிதையின் ஒவ்வொரு வரியும் அழகு..உங்கள் முயலும் பட்டுப்போல அழகு! பகிர்விற்கு நன்றி இமா!

    ReplyDelete
    Replies
    1. //தாய்மை!! எந்த உயிராய் இருந்தால் என்ன? // இயற்கையின் அற்புதம் இது.

      Delete
  7. கவிதையை அங்கே ஏற்கனவே படித்துவிட்டேன், கருத்துப் போடத்தான் நேரமில்லாமல் போய்விட்டது. டிரிக்ஸியின் பொம்மை க்யூட்டா இருக்கு இமா!

    நம் சுயநலத்திற்காய் இயற்கையின் சுழற்சியைப் பாதிக்கிறோமோ என்ற குற்ற உணர்ச்சியைத் தூண்டிவிடுகிறது உங்கள் பதிவு. விரைவில் ஏதாவது செய்யுங்க.. ஹரி அப்! பாவம் குட்டிப் பொண்ணு!

    ReplyDelete
    Replies
    1. "ஹரி அப்! பாவம் குட்டிப் பொண்ணு"_________ மகி சொல்வதும் சரிதான். சொல்ல நினைத்து எழுதாமல் விட்டுவிட்டேன்.சீக்கிரமே இளவரசனை தேட ஆரம்பிங்கோ!

      மகி, நீங்களும்தான், ஜீனோவின் 'ஜீனி'யையும் பார்க்க ஆசை.

      Delete
    2. //மகி, நீங்களும்தான், ஜீனோவின் 'ஜீனி'யையும் பார்க்க ஆசை.//சித்ராக்கா, இங்கே தத்து எடுக்கும்/ வாங்கி வளர்க்கும் வளர்ப்புப்பிராணிகளுக்கு கட்டாயம் அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஜீனோவுக்கு அதெல்லாம் ஏற்கனவே செய்துட்டாங்க. அதனால் ஜீனி தேட அவசியமில்லை, அதுவுமில்லாமல் இன்னொருவர் வந்தால் இவனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பகிரப்படும், ஏங்கிப் போயிருவான்! :)

      Delete
    3. வளர்ப்புப் பிராணிகளை இரண்டு அல்லது அதற்கும் மேல் என கூட்டிச் செல்லும்போது பார்க்கவே சந்தோஷமா இருக்கும், அவர்கள் மொழியில் அவர்களுக்குள் ஏதாவது பேசிக்கொள்வார்களே என்று.தனியாக பார்த்தால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.

      நீங்க சொல்லும் விஷயத்தை இப்போதான் புதுசா கேள்விப்படுகிறேன்.

      Delete
    4. //தனியாக பார்த்தால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.//கஷ்டமே படாதீங்க சித்ராக்கா! தனியே இருக்கும் ஆட்களுக்குதான் செல்லம், கவனிப்பு, அன்பு எல்லாமே அபரிமிதமாகக் கிடைக்கும். :)

      //இரண்டு அல்லது அதற்கும் மேல் என கூட்டிச் செல்லும்போது பார்க்கவே சந்தோஷமா இருக்கும், அவர்கள் மொழியில் அவர்களுக்குள் ஏதாவது பேசிக்கொள்வார்களே என்று.// :)) அது சரிதான்! :)) ப்ளான் செய்து வாங்கும்போதே 2 என்று வாங்கிவிட்டால் ஈஸி..முதலில் ஒருவரை மட்டும் வாங்கிவிட்டு பிறகு கம்பெனிக்கு ஆள் தேவை என வாங்கிப் பழக்குவது சற்றே சிரமம். sometimes, they get along well, sometimes its not! :) மொத்தத்தில் இங்கே இவர்களும் குழந்தைகள்தான்! நாம் "Pet parents"..they are our "Babies", you see! :D

      உங்களுக்குப் புது விஷயம் சொல்லிட்டேனா, ரொம்ப சந்தோஷமா இருக்கு! :)

      இமா றீச்சர், இங்கே வந்து அரட்டை பண்ணறோம் என பனிஷ் பண்ணிராதேள்!!! மீ த எஸ்கேப்பூ!! ;)))

      Delete
    5. Nope. Same pinch Mahi. I am thinking... what will I do if Trixie doesn't accept the new arrival!! I can't return either of them. ;(

      Delete
  8. //குற்ற உணர்ச்சி// yup. ;( niRaiya irukku. Will get her a companion asap Mahi.

    ReplyDelete
  9. மிக எளிதாக துணைக்கு ஒருவரை வாங்கச்சொல்லிவிட்டு போய்விட்டேன். வளர்ப்பவர்களுக்குத்தானே தெரியும், பராமரிப்பிலுள்ள கஷ்டங்கள்.

    ReplyDelete
  10. கவிதை அருமை..எலிக்குஞ்சுக்கும் அதன் குஞ்சு பொன்குஞ்சுதானே...

    ReplyDelete
  11. இமா, சூப்பர் ட்ரிக்ஸி. கவிதை இன்னும் படிக்கவில்லை. தாய்மை என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது தானே.

    ReplyDelete
  12. புகைப்படங்கள் மிக அழகு!
    கவிதை மிக அருமை!

    ReplyDelete
  13. வசந்தம் வருது//// ஆருக்கு?:))

    என்னாது டிக்‌ஷிக்கு பேபியா??? ஆவ்வ்வ்வ்வ் அப்போ இமா இனி பாட்டியாஆஆஆஆஆஆஆஆஆ?:)))

    ReplyDelete
  14. புகைப்படங்களே கவிதைதாம்

    ReplyDelete
  15. புகைப் படங்கள் புதுக் கவிதை
    மிக நன்று இமா.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. இந்த "வெள்ளச்சி காவியம்" அங்கே உள்ளத்தை உருக்கிடுச்சு இமா :) -Arutselvi

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா