Thursday 3 October 2013

மைக்ரோ எள்ளுருண்டை

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டாமா! ;)))

மகியின் ஆங்கில வலைப்பூவில் கொடுக்கப்பட்டிருந்த கருப்பு எள்ளுருண்டை குறிப்பின் கீழ், பாதிக்குப் பாதி வெள்ளை எள்ளும் கருப்பு எள்ளும் கலந்து செய்வதாகக் கருத்துச் சொல்லியிருந்தேன்.

இதற்கு முன் கருப்பு எள்ளு வாங்கியதில்லை. முதல் தடவையாக சாப்பிட்டிருக்கிறோம். வாங்கி வைத்தது இதிலும் தளகுளி நன்றாக வருமா என்பதை முயற்சிப்பதற்காக.

காற்கோப்பை கருப்பு எள், காற்கோப்பை  வெள்ளை எள் சேர்த்து வறுத்து....
4 மேசைக்கரண்டி அளவு சர்க்கரையை உடைத்துப் போட்டு ஆறவிட்ட எள்ளை அதனோடு சேர்த்து சுற்றி எடுத்தேன். சின்னதாகப் பிடிக்க முயன்றேன். இயலவில்லை. பத்து செக்கன் மைக்ரோவேவ் செய்து, கலந்து, மீண்டும் பத்து செக்கன் மைக்ரோவேவ் செய்து, கலந்துவிட்டு குட்டிக் குட்டியாக (பெரிய கோலி அளவு) 21 உருண்டைகள் பிடித்து வைத்தேன்.

படம் சுமார்தான், பொறுத்தருள்க. ;)

அடுத்த தடவை bring a plate for morning tea என்றால் பாடசாலைக்கு எடுத்துப் போகலாம். கட்லட்டும், கில் மீ டேட்ஸும், பட்டீஸும் எல்லோருக்கும் பிடித்திருந்தாலும் பழகி விட்டது. வித்தியாசமான உணவுப் பொருட்களை முயற்சித்துப் பார்க்க விரும்புபவர்கள் அவர்கள். இது சற்றுப் புதுமையாக இருக்கும். சுவை... நிச்சயம் அவர்களுக்குப் பிடிக்கும். எனக்கும் சிரமமில்லாத சமையல்.

மகியின் விதவிதமான எள்ளுருண்டை குறிப்புகள் இங்கே.

19 comments:

  1. ஐ...க்யூட்டா அழகா இருக்கு மைக்ரோ எள்ளுருண்டை! :)

    தாங்க்ஸ் ஃபார் இலவச விளம்பரம் ரீச்சர்! ஹோப் எவ்ரிபடி லைக்ட் இட்! ஸ்கூலுக்கு கொண்டுபோயிட்டு வந்து ரிசல்ட் சொல்லுங்க! :))

    ReplyDelete
    Replies
    1. கட்டாயம் சொல்றேன். :-) நன்றி மகி.

      Delete
  2. சுவையோடு நலமும் தரும் எள்ளுணவு

    அருமை இமா
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சீராளன். :-)

      Delete
  3. 'மைக்ரோ எள்ளுருண்டை' என்றதும் ஏதாவது கருவிகளைக்கொண்டுவந்து தேடிக்கண்டுபிடிக்க சொல்லுவீங்களோ என்று பார்த்தால்....ஹா ஹா ஹா

    உருண்டைகளைப் பார்க்க சின்ன வயசுல சாப்பிட்ட 'கமர்கட்' மாதிரியே இருக்கு.'தளகுளி'______பெயர் மட்டுமல்ல,உருவமும் புதுசா இருக்கு.காரல் அடிக்கும்னு,இடித்த எள்ளை அடுத்த நாளுக்கு வைக்க மாட்டோம்.

    எதுக்கும் தயாரா இருங்க, சாப்டு பாத்துட்டு,இன்னொரு நாளுக்கும் கேட்கப்போகிறார்கள்!

    ReplyDelete
    Replies
    1. ;)))) ஏமாந்தீங்களா! ;)

      //'கமர்கட்' மாதிரியே இருக்கு.// ஷேப்தானே? சாப்பிட்டு இருக்கிறேன். போன தடவை இந்தியாவில் ஒரு ஃப்ரெண்ட் வாங்கிக் கொடுத்தாங்க.
      //பெயர் மட்டுமல்ல,உருவமும் புதுசா இருக்கு.// அது சிங்களவர் ஸ்பெஷல். //காரல் அடிக்கும்னு,// நீங்க சொல்லவும்தான் யோசிக்கிறேன். ஆனா மாசக்கணக்கில வைப்போம். காரலடிக்கிறதே இல்லை. ரெடிமேட் பாக்ல ஒரு வருஷம் கழிச்சு எக்ஸ்பைரி போட்டிருக்காங்க.

      //இன்னொரு நாளுக்கும் கேட்கப்போகிறார்கள்!// அந்த வழக்கம்லாம் கிடையாது. மேசைல வைப்பேன். பெல் அடிச்சதும் வந்து உட்காருவாங்க. நான் காஃபி எடுத்துட்டு வந்து பார்க்க தட்டு வெறுசா இருந்தா நாமா புரிஞ்சுக்க வேண்டியது. அது ஒரு பாசக்காரக் கூட்டம். ;D

      Delete
  4. எள்ளுருண்டை! எங்கள் வீட்டில் முன்னோர்களுக்கு மரியாதை செய்யும் காலத்தில் செய்வோம்! எனக்கு மிகவும் பிடிக்கும். சர்க்கரை சேர்க்காமல் வெல்லம் சேர்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. //சர்க்கரை சேர்க்காமல் வெல்லம்// வெல்லம்தான் சேர்த்திருக்கிறேன் ஸ்ரீராம். சர்க்கரை (சீனி) சேர்க்கவில்லை.
      என் இலங்கைத் தமிழைப் பொறுத்தருள்க. :-)

      //முன்னோர்களுக்கு மரியாதை செய்யும் காலத்தில்// விபரம் சொல்லுங்களேன். அறிந்துகொள்ள ஆவல். எதிர்பார்க்கிறேன்.

      Delete
  5. அழகாக உள்ளது மைக்ரோ எள்ளுருண்டை...

    செய்து பார்ப்போம்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. //மைக்ரோ// அது சும்மா. ;) முதலில் மினி என்றுதான் எழுத நினைத்தேன். மைக்ரோவேவ் செய்ததையும் சேர்த்துக் குறிப்பிட விரும்பியதில் அப்படிப் பெயரிட்டாயிற்று.

      Delete
  6. படம் சுமார்தான், பொறுத்தருள்க. ;)//என்ன இமா இப்படி சொல்லிவிட்டீர்கள்.படத்தைப்பார்த்ததுமே ஒன்றை எடுத்து சாப்பைட வேண்டும் போல் இருக்கிறது.லைட்டாக சுடுநீர் தெளித்து அரைக்கவில்லையா?

    ReplyDelete
    Replies
    1. //லைட்டாக சுடுநீர்// இல்லை ஸாதிகா. சர்க்கரையோ சீனியோ எது சேர்த்தாலும் நீர் சேர்க்காமல் செய்துதான் பழக்கம். நீர் சேர்த்தால் டெக்க்ஷர் மாறிராதா!

      Delete
  7. அழகு... சச்சசா...சிரிக்கின்றது...ஆசை சச்சசா...சாப்பிட அழைக்கின்றது.... ஒன்னு எடுத்து வாயில போட்டேன். சூப்பர் இமா...:)

    ReplyDelete
  8. எள்ளுருண்டை எல்லாம் மறந்தே போச்சு.முன்பெல்லாம் எள்ளை வறுத்து அரைத்து வெல்லம் சேர்த்துச் சிமிலி உருண்டை என்று ஒன்று செய்வார்கள்!சூப்பர்!

    ReplyDelete
  9. இது எப்படி என் கண்ணிலிருந்து தப்பிக்கிச்சுது...கர்ர்ர்...:)

    எனக்கு ரொம்பவே பிடிக்குமே.. ஆனா இப்படி செஞ்சா பிடிபடுமா.... பிடிபடாட்டால்.... பிடிக்க வேறை என்னதான் செய்யலாம்ம்ம்ம்....:)))

    ரொம்ப அருமை இமா! செய்து பார்க்கிறேன் மைக்ரோவேவில்... அதிலையே வறுத்தும் பார்க்கணும் எள்ளை...:)

    டாங்ஸ் மா...:)

    ReplyDelete
  10. ஆஹா சூப்பரா இருக்கே இமா.. டக் டிக் டோஸ் என.. ஒரு நொடியில் செய்திடலாமே? உருண்டை இலகுவாக இருக்கோ கல்லாக இருக்கோ?

    அடுத்து இதில் நீங்க சக்கரை எனக் குறிப்பிட்டிருப்பது இந்தைய சக்கரையா? இல்ல இலங்கைச் சக்கரையா?.. ஏனெனில் இந்தியாவில் சீனியைத்தானே சக்கரை என்பினம்.. கிளியர் மை டவுட் பிளீஸ்ஸ்ஸ்... விரத காலத்தில் செய்யலாமோ தெரியவில்லை... செய்யலாம் எனில் செய்யப்போறேன்ன்.

    ReplyDelete
  11. நாவூறுகிறது...என் மனைவிக்கு மிகவும் பிடிக்கும்...

    ReplyDelete
  12. ஆஹா மைக்ரோ செகண்டில் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளலாம் போல இருக்கிறதே...
    எங்கள் வீட்டிலும் வெல்லத்தை தான் சக்கரை என்போம், மற்றதை சீனி என்போம். ஆனால் நாங்கள் இலங்கை அல்லவே :) செய்து பார்த்து சொல்கிறேன் இமா!

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா