Monday 31 December 2012
Sunday 16 December 2012
Wednesday 12 December 2012
இது மார்கழி மாதம்
பகிர்விற்கு ஏராளமானவை காத்திருக்கின்றன.
விடுமுறை ஆரம்பித்தாயிற்று. ஆயினும் ஆரம்பிக்காதது போலவே இருக்கிறது - தினம் மின்னஞ்சலில் ஒரு வினா... பதில்... மீண்டும் வினாக்கள் என்று தொடர்கிறது. இம்முறை மனதும் பாடசாலை நாட்களுக்காக ஏங்குவது போல் தெரிகிறது.
இறுதி நாளன்று அறைகளை ஒதுக்கும் போது கண்ணில் பட்ட, மாணவர்களது ஆக்கங்கள் சில உங்கள் பார்வைக்கு.
Tuesday 4 December 2012
Thursday 29 November 2012
தொலை... பேசுகிறேன்
ஆமாம், தொலைந்து போன பழங்கதை இது. ;)
எங்கள் வீட்டுக்கு முதல்முதலில் தொலைபேசி இணைப்பு வந்தது 1996 மே மாதம். இணைப்புக்காக பணம் கட்டி விட்டுக் காத்திருந்தோம். (ஒரு கொரியன் நிறுவனம் இணைப்புக் கொடுக்கும் முயற்சியில் டெலிகொம் சேவையில் இணைந்திருந்தது அப்போது. )
மூத்தவர் பிறந்தநாளுக்கு செய்தது இந்த கேக்.
தொலைபேசி எண்ணின் இறுதி = வயது
இலக்கங்கள் - kandos slab ஒன்றை சூடான கத்தியால் நறுக்கி வைத்தேன்.
ஊ.கு
அப்போதைய படங்கள்; மங்கலாக இருக்கின்றன. ஸ்கான் செய்து, எடிட் செய்தது இது. தரம் குறைவாக இருக்கும், பொறுத்தருள்க.

Tuesday 27 November 2012
வெஜிடபிள் பிரியாணி
புதினாச் செடியின் படம், வெஜிடபிள் பிரியாணி-ன்னு டைட்டில்! இந்த
ரெண்டுக்கும் என்ன சம்பந்தம்னு இந்நேரம் நீங்களே
கண்டுபுடிச்சிருப்பீங்க..கரெக்ட்டா? பின்னே.. மகி'ஸ் ஸ்பேஸ் ரீடர்ஸ்-ஆ
கொக்கா?! :))))))
Sunday 25 November 2012
பச்சைப் பூக்கள்!
பொழுது போதாமலிருந்தும்... போகாமலிருந்த ஒரு பொழுதில்... இமா இனிமையாக, இனிமையான இலைகள் செய்துகொண்டிருந்தேன். இலைகள் போதும் எனும் கட்டம் வர... பச்சை நிறத்தில் வேறு என்னவாவது செய்யலாமென்று ஒரு ப.பூ. ;)
ஊரில் ஒரு செடி வளர்த்தேன். அதன் பூக்கள் மஞ்சள் என்றுதான் எல்லோரும் சொல்லுவோம். என் மைத்துனர் மட்டும், "அது பச்சைநிறம்தான்," என்பார்.
இங்கு வந்து உண்மையாகவே ப.பூ கண்டேன். ஊரிலும் இருந்திருக்கும். கவனித்தது இல்லை. ம்.. இங்கு நான் கண்டது வேங்கை போல சின்னது. (படம் எதுவும் கிடைக்கவில்லை.) அது பூவா காய்தானாவென்று சரியாகத் தெரியவில்லை. வேங்கை மரத்துப் பூ எப்படி இருக்கும்!! உலர்ந்த விதைகள் காற்றிற் பறப்பது பார்த்திருக்கிறேன். பூ!! யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்! மஹோகனி மரத்துப் பூக்கள் பச்சைநிறமாக இருக்குமா! அவசியமில்லாத ஆராய்ச்சிதான். ஆனாலும் பல காலங்களாக மனதில் புதைந்திருக்கும் தேடல் இது. ;) யாராவது பதில் தெரிந்தால் பதிவிடுங்கள். இப்போதே நன்றியாக....
இந்த, க்ரைஸ்ட்சேச் (2009) தாவரவியற் பூங்காவில் சுட்ட மலர்க்கொத்து.
இது... பச்சையா!! நீலமா!!

Tuesday 20 November 2012
இது கீவி நேரம்
நேரம் பற்றாக்குறையாக இருக்கிறது. ;(
எல்லோருக்கும் இருக்கிற அதே 24 மணி நேரம் இமாவுக்கும் கிடைத்தாலும்... கொஞ்சம் இடிபாடான மாதம் இது.
காரணம்....
1. பாடசாலையில் வருட இறுதி - பரீட்சை, முன்னேற்ற அறிக்கை, புதிய ஆண்டுக்கான ஆயத்தங்கள்
2. பாடசாலையில் வீட்டிலும் பிறந்தநாட்கள். முன்னதில் 4 + வீட்டில் ஒன்று
3. இங்கு முன்கோடை - தோட்டம் செப்பனிடல் + செய்து முடிக்க வேண்டிய வெளி வேலைகள். காற்றுள்ள போதே தூற்ற வேண்டும். வெயில் உள்ள போதே முடிக்க வேண்டும்.
நேரம் கிடைத்தால் ஒரு வலைப்பூ; மறுமுறை இன்னொன்று என்று உடனே இல்லாவிட்டாலும் எப்படியாவது அனைவரையும் தரிசிக்க வருவேன். அதுவரை தயை கூர்ந்து பொறுத்தருள்க நட்புக்களே.
ஒரு குட்டிக் கதை மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்புகிறேன். ;)
பரீட்சைக்கு முன்பாக மீட்டல் வகுப்புகள் நடந்துகொண்டிருந்தன. காலை இடைவேளையில் ஒரு ஆசிரியை - கொஞ்சம் சின்னவர், முகம் சிவந்து சிரிப்பாக வந்து அமர்ந்தார்.
எல்லோரையும் ஆளுக்கு இரண்டு மணிக்கூட்டு முகங்கள் வரையச் சொல்லி இருக்கிறார். பின்பு இவர் குறிப்பிடும் நேரத்தை (முட்களை) அவர்கள் வரைந்து காட்ட வேண்டும்.
ஒரு மாணவி ஒரே ஒரு வட்டம் மட்டும் வரைந்து விட்டு வானம் பார்த்து (சுற்றிலும் ஏராளமாள கண்ணாடி ஜன்னல்கள்) இருக்க, அருகே போய் எண்களைக் குறிக்க உதவி விட்டு, அதை முடித்த பின் இரண்டாவது வட்டம் வரைந்து குறித்து வைக்கச் சொன்னாராம் ஆசிரியை.
வரைந்து முடித்து மாணவி கொண்டுவந்து காட்டிய மணிக்கூட்டில்.... 13 முதல் 24 வரை எண்கள் இருந்தனவாம். ;D

Friday 16 November 2012
பீட்ஸா பண்
பீட்ஸா சாப்பிட ஆசையாக இருந்தது. மாவைப் பிசைந்து வைத்தேன்.
வீட்டில் சமைக்கும் போது சுவையோடு நிறையுணவாக அமைவது போலவும் சமைக்கலாம். (இருக்கிற எல்லாக் கீரை, காய்களும் போட்டு வைக்கலாம். ;)) sauce சரிவராத பொழுது அதற்குப் பதிலாக hammus அல்லது vegimite பூசலாம்.
தோட்டத்தில் உலாவி விட்டு வந்து வேலையை முடிக்கலாம் என்று பார்த்தால்... சீஸ் தீர்ந்துபோய் இருந்தது. ;(
இங்கு வந்தபின் கிழங்கை காய்கறியாகப் பயன்படுத்துவதை வெகுவாகவே குறைக்க வைத்து விட்டேன். அது விருந்துச் சாப்பாடாக மட்டும் இருக்கிறது இப்போது.
வெகு காலம் கழித்து கிழங்குக் கறி வைத்து குட்டி கறிபண்களாகப் பிடித்து cup cake mould களில் வைத்து சுட்டு எடுத்தேன். பார்வைக்கு ஒன்று...
மீதி கூடையினுள்ளே பாதுகாப்பாக இருக்கிறது. குறிப்பு கேட்காமல், ஆளுக்கொன்று எடுத்துச் சுவைக்கலாம். :)

வெண்;)காய சட்னி
தலைப்பைத் தட்டும் போது தோழமை ஒருவரை நினைத்துக் கொண்டதுதான் அந்த ஸ்மைலிக்குக் காரணம். ;)
எதற்கும் இருக்கட்டும் என்று... மீண்டும் ஒரு முறை லிஃப்கோவைப் புரட்டிப் பார்த்து - வெங்காயம், வெண்காயம், onion மூன்றுமே ஒன்றுதான் என்று நிச்சயித்துக் கொண்டு தொடர்கிறேன். ;))
இது ஒரு பின்னூட்ட இடுகை. மகியின் சமையலறையிருந்து இமாவின் உலகிற்கு வந்திருக்கிறது இந்த சுலபமான, சுவை மிகுந்த வெங்காய சட்னி. இமா காரம் சேர்ப்பதில்லை என்பதால் மிளகாய்த்தூள் 1/2 தேக்கரண்டி மட்டும் சேர்த்தேன். வீட்டார் விருப்பத்திற்கிணங்க நேற்று மீண்டும் செய்தேன்.

இரண்டாவது பொன்குஞ்சு
முன்கதைச் சுருக்கம்.... http://imaasworld.blogspot.co.nz/2012/11/blog-post_9.html
முன்கதையில் சொல்லியிருந்த பொன்குஞ்சுக்குத் தனிமை போக்கவென்று, மேலும் நான்கு குஞ்சுகள் வாங்கி வந்து, பையோடு குளத்து நீரில் வைத்து, நீர் வெப்பநிலையை மெது மெதுவே சமப்படுத்தி... வெளியே விட்டிருந்தேன்.
நேற்று பின்னேரம் சும்மா எட்டிப் பார்த்தால், சொந்தக் குழந்தை & இரவல் குழந்தைகளோடு பெரியவர்கள் இருவரும் ஒன்றாக மேலே வந்து பாசியை மேய்ந்து கொண்டிருந்தார்கள்.
பார்த்துக் கொண்டே இருக்க... ஒரு ஆச்சரியம்... கருப்பு நிறம் கலந்த இருவர் மேலே வந்தார்கள். :) உள்ளே இன்னும் எத்தனை பேர் ஒழிந்து இருக்கிறார்களோ தெரியாது. அப்போது படம் எடுக்க இயலவில்லை. இன்று ஒருவரை மெதுவே என் கையில் சிறைப் பிடித்தேன்.
அழகாக இருக்கிறாரல்லவா!

Thursday 15 November 2012
மறைவாக ஒரு மரப் பெட்டி
என்ன எடுக்கிறார் க்றிஸ்!
தோட்டவேலைக்கான கருவிகள்....
இரண்டாவது பகுதியில் மேலதிக தேவைக்கானவை.
மேலும் சிலது மூன்றாவது பிரிவில்.
நான்காவது பிரிவில்...
இரண்டு பிரிவுகளுக்கிடையே ஒரு மறைவிடம். மேலே கொழுகொம்புகள். ;)
இவையெல்லாம் இருப்பது இந்த... பெட்டகம் ;) அலுமாரி, மரப்பெட்டி, ராக்கை பெயர் என்ன வேண்டுமானாலும் உங்கள் இஷ்டத்துக்கு வைத்துக் கொள்ளுங்கள். ;))
மறுபுறம் இருந்து பார்த்தால் இப்படித் தெரியும்.
அந்தப் பெட்டகம் அமைந்து இருப்பது வேலியோடு வேலியாக, மறைவாக இந்த இரண்டு குறுக்குச் சட்டங்களுக்கும் இடையில் உள்ள இடைவெளியின் மீதிப் பகுதியில் சில வருடங்கள் முன்பாக அடித்தார். திடீரென்று எப்போவாது நினைத்தாற்போல் பிடுங்கி வைப்பார். அதற்குள் உங்களோடு பகிர்ந்து வைக்கிறேன். ;)
வேலியின் நிறத்தை இப்போதான் கவனிக்கிறேன். கர்ர்... ;( நிறைய வேலை இருக்கிறது தோட்டத்தில்.
அதனால் இமா அடிக்கடி வலைப்பூவுக்கு வரமாட்டார்.... நிம்மதி என்று மட்டும் நினைக்க வேண்டாம். செய்யும் தொழிலெல்லாம் இங்கு டமாரமடிக்கவாவது வருவேன். ;)

Subscribe to:
Posts (Atom)