Thursday 15 November 2012

மறைவாக ஒரு மரப் பெட்டி

 என்ன எடுக்கிறார் க்றிஸ்!
 தோட்டவேலைக்கான கருவிகள்....
 
இரண்டாவது பகுதியில் மேலதிக தேவைக்கானவை.
 
மேலும் சிலது மூன்றாவது பிரிவில்.
நான்காவது பிரிவில்...
இரண்டு பிரிவுகளுக்கிடையே ஒரு மறைவிடம். மேலே கொழுகொம்புகள். ;)
 இவையெல்லாம் இருப்பது இந்த... பெட்டகம் ;) அலுமாரி, மரப்பெட்டி, ராக்கை பெயர் என்ன வேண்டுமானாலும் உங்கள் இஷ்டத்துக்கு வைத்துக் கொள்ளுங்கள். ;)) 
 மறுபுறம் இருந்து பார்த்தால் இப்படித் தெரியும்.
 அந்தப் பெட்டகம் அமைந்து இருப்பது வேலியோடு வேலியாக, மறைவாக இந்த இரண்டு குறுக்குச் சட்டங்களுக்கும் இடையில் உள்ள இடைவெளியின் மீதிப் பகுதியில் சில வருடங்கள் முன்பாக அடித்தார். திடீரென்று எப்போவாது நினைத்தாற்போல் பிடுங்கி வைப்பார். அதற்குள் உங்களோடு பகிர்ந்து வைக்கிறேன். ;)
வேலியின் நிறத்தை இப்போதான் கவனிக்கிறேன். கர்ர்... ;( நிறைய வேலை இருக்கிறது தோட்டத்தில்.
அதனால் இமா அடிக்கடி வலைப்பூவுக்கு வரமாட்டார்.... நிம்மதி என்று மட்டும் நினைக்க வேண்டாம். செய்யும் தொழிலெல்லாம் இங்கு டமாரமடிக்கவாவது வருவேன். ;)

19 comments:

  1. இது வித்தியாசமாக இருக்கே... நல்ல பெட்டகம்...

    ReplyDelete
    Replies
    1. எங்கே என்ன பெட்டியைப் பார்த்தாலும் நீங்களும் ஜீவனும்தான் நினைவுக்கு வருகிறீர்கள் தனபாலன். :))

      Delete
  2. சூப்பர் ஐடியா. ஆனா பாரம் அதிகமானால் வேலி விழுந்திடாது?.. கொஞ்சம் காற்று ஊண்டி அடித்தாலே சில இடங்களில் அப்படியே பொத்தெனச் சரிஞ்சு போகுது வேலி.

    கட்டாயம் பலகைக்குப் பெயிண்ட் அடிக்கோணும் இமா, இல்லையெனில் விரைவில் உக்கிடுமாம்.

    ReplyDelete
    Replies
    1. //பாரம் அதிகமானால் வேலி விழுந்திடாது?// விழும்தான் அதீஸ். அதனால்தான் பாரமில்லாத பலகைகள் தெரிந்திருக்கிறோம். முன்பக்கம் / கதவு மட்டும்தான் மேலதிகமாக வந்திருக்கிறது. உள்ளே வைப்பவையும் பாரமில்லாதவைதான்.

      //விரைவில் உக்கிடுமாம்.// அது பலகையையையும் இருக்கும் இடத்தையும் பொறுத்தது. இது (cupboard front & doors only) seasoned timber இல்லை. தற்காலிக அமைப்புத்தானே, பரவாயில்லை என்று மலிவு விலைப் பலகைதான் வாங்கினோம். வளைந்து போகும். மேலே இருப்பதால் உக்கும் என்று நினைக்கவில்லை. பார்க்கலாம்.

      Delete
  3. Replies
    1. :) கருத்துக்கு நன்றி நேசன்.

      Delete
  4. சுவாரசியமான கட்டுரை. creative.

    தோட்ட வேலைக்கு ஆயுதம் வேண்டாமே? கருவி போதுமே?

    ReplyDelete
    Replies
    1. சுட்டிக் காட்டியமைக்கு என் அன்பு நன்றிகள். மாற்றிவிட்டேன் சகோதரரே.

      Delete
  5. //பாரம் அதிகமானால் வேலி விழுந்திடாது?..// அதானே? நல்லாக் கேழு;)ங்கோ அதிரா! [மக்கள்ஸ்--நோட் திஸ் பொயின்ட்! பூஸார் கிட்டினி;) துருப் புடிக்காமத்தான் சுறுசுறுப்பாகத்தான் வேலை செய்கிறது. :))))]

    நல்ல ஐடியா இமா! வேலிக்கெல்லாம் நல்ல பிங்க், பேப்புள்;) இந்த மாதிரி அயகான கலரா அடிச்சு வையுங்க. :)

    ReplyDelete
    Replies
    1. ;)))) //நல்ல பிங்க், பேப்புள்//
      க்றிஸ் எல்லாம் வாசிச்சு சிரிச்சுக் கொண்டு இருக்கிறார். ;)))))

      Delete
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) விழுந்தால் இமா பிடிப்பா:).

      நோஓஓஓஒ பிங் பேப்பிள் எல்லாம் என்ர கொப்பிரைட் கலர்கள் ஜொள்ளிட்டேன்ன்ன்:).

      Delete
  6. ஸ்..ஸ் அப்பா இப்பவே கண்ணைக்கட்டுதே.நல்ல ஸ்ரங்க். ஊரில (நான் சொல்லும் பெயர் சரியோ தெரியாது.டீச்சர்கண்டுபிடிச்சிடுவா.)சொலிக்கன் என்று சொல்வார்கள்.பூச்சிகள் அரிக்காமல் இருக்க,மழைக்கு,வெயிலுக்கு, பழுதாகாமல் இருக்க அதை பூசிவிடுவார்கள்.இங்கு அந்த முறை இருக்கு.நாங்கள் கார்டன் ஹவுஸிற்கு அடித்திருக்கிறோம். (ஊரில் கூடுதலா கறையான் அரிக்காமலிருக்க பூசிவிடுவார்கள்.)
    sehr gut idee chris anna

    ReplyDelete
    Replies
    1. //சொலிக்கன்// ஆமாம் அம்முலு, ஊரில கறையான் அரிக்காமல் இருக்க கப்புகள், வளைகளுக்கெல்லாம் சொலிக்னம் (solignum) அடிக்கிறனாங்கள்.

      சிலர் அதற்குப் பதிலாக, கராஜ்ல பழைய engine oil (வாகனங்களுக்கு engine oil மாற்றேக்க கிடைக்கிற பழசு - கரி சேர்ந்துபோய் crude oil texture & நிறத்தில் இருக்கும் இது.) வாங்கி அதையும் பூசுறவங்கள்.

      இங்க கறையான் இல்லை. அனேகமானவை பலகை வீடுகள்தான். ஆனாலும் வீடு கட்டேக்க, வேலி போடேக்க மண்ணுக்க புதைபடுற பகுதிக்கு கட்டாயம் சொலிக்னம் அடிச்சிருப்பினம்.

      Vielen Dank Ammulu. Ich werde Ihnen sagen Chris.

      Delete
  7. நல்ல கற்பனை. சிறந்த வடிவமைப்பு. நிறைந்த உபயோகங்கள். ஐடியாவுக்கும், பகிர்வுக்கும், பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள், இமா. ;)

    ReplyDelete
    Replies
    1. :) தங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி அண்ணா.

      Delete
  8. வித்தியாசமான பெட்டகம்தான்! நன்றி!

    ReplyDelete
  9. நன்றி ஜலீ. ;)
    மிக்க நன்றி சுரேஷ்.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா