Friday 16 November 2012

வெண்;)காய சட்னி

தலைப்பைத் தட்டும் போது தோழமை ஒருவரை நினைத்துக் கொண்டதுதான் அந்த ஸ்மைலிக்குக் காரணம். ;)
எதற்கும் இருக்கட்டும் என்று... மீண்டும் ஒரு முறை  லிஃப்கோவைப் புரட்டிப் பார்த்து - வெங்காயம், வெண்காயம், onion மூன்றுமே ஒன்றுதான் என்று நிச்சயித்துக் கொண்டு தொடர்கிறேன். ;))

இது ஒரு பின்னூட்ட இடுகை. மகியின் சமையலறையிருந்து இமாவின் உலகிற்கு வந்திருக்கிறது இந்த சுலபமான, சுவை மிகுந்த வெங்காய சட்னி. இமா காரம் சேர்ப்பதில்லை என்பதால் மிளகாய்த்தூள் 1/2 தேக்கரண்டி மட்டும் சேர்த்தேன். வீட்டார் விருப்பத்திற்கிணங்க நேற்று மீண்டும் செய்தேன்.

8 comments:

  1. //இமா காரம் சேர்ப்பதில்லை//

    காரமில்லாதா ஆனால் சாரமுள்ள இனிமையான இமா வாழ்க வாழ்கவே!

    அன்புடன்
    கோபு அண்ணா

    ReplyDelete
  2. இமா..காரம் கொஞ்சமே சேர்த்தாலும் இந்த சட்னி கலரும் நன்றாகத்தான் உள்ளது..:)

    ReplyDelete
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா, ராதா & இராஜராஜேஸ்வரி அம்மா.

    ReplyDelete
  4. பொஹொம்ம ஸ்துத்தி இமா! :)


    பி.கு. இதற்கு சிங்களத்தில் பதில் சொல்வாதாயிருப்பின் அதனை தமிழிலேயே எழுதவும். நான் பூஸாரிட்ட ;) அல்லது வான்ஸ்கிட்ட கேட்டு விளக்கம் பெற்றுக் கொள்வேன். அல்லது எங்கட றீச்சர் ஒருவர் இருக்கிறார், அவரிடம் கேட்டு தெளிவடைவேன், நன்றி! ;):)

    ReplyDelete
  5. அவ்வ்வ்வ்வ் வெங்காயச் சட்னியா? கொஞ்சம் அனுப்புங்கோ இமா...

    ReplyDelete
    Replies
    1. அது... வீட்டுத் தோட்டத்தில முளைச்ச வெங்காயம் இல்ல. ;)

      Delete
  6. வெங்காய சட்னி யம் யம் இட்லி தோசைக்கு செம காம்பினேஷன் நோ wonder உங்க வீட்டுல இதை திரும்ப திரும்ப கேக்குறாங்க. நான் நேத்திக்கு உங்க ஊர் வெங்காய சீனி சம்பல் செஞ்சேனே. அதை ப்ரெட் இல் வைத்து இன்னிக்கு சான்ட்விச் வேலைக்கு எடுத்துகிட்டு போனேன். ஸூஊஊப்பெர் முதல் முயற்சி நல்லாவே வந்தது. ஆனா அவ்ளோ வெங்காயம் கட் பண்ணியும் கொஞ்சமா தான் வந்து இருக்கு. அடுத்த தடவை நெறையா பண்ணனும்

    ReplyDelete
    Replies
    1. //அவ்ளோ வெங்காயம் கட் பண்ணியும் கொஞ்சமா தான் வந்து இருக்கு.// ம்.. முதல் முறை போதாமல் போயிற்று. இப்போ தெரியும். ;)

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா