Fridge Magnet கேள்விப்பட்டிருப்பீர்கள். இங்கு உள்ளது... Dishwasher Magnet.
பாடசாலைப் பாத்திரம் கழுவும் இயந்திரத்தை ஒழுங்காக இயக்குவது ஒரு போராட்டம். இங்கு வந்தபின் வேலை செய்த இரண்டு பாடசாலைகளிலும் இது ஒரு பிரச்சினைதான். பொறுப்பானவர் பாத்திரங்களை நிரப்பி, சவர்க்காரத் தூளை நிரப்பி ஓடவிட்டிருப்பார்; பாதியில் யாராவது கவனிக்காமல் திறந்து மூடி விடுவார்கள். பாத்திரங்கள் அரைகுறையாகக் கழுவியதோடு நின்றிருக்கும். சிலசமயம் கவனிக்காமல் சுத்தமான பாத்திரங்களுக்கு இடையில் அழுக்குக் கிண்ணங்களை அடுக்கி விடுவதும் உண்டு.
தற்போதைய பாடசாலையில் Clean, Dirty என்று தட்டச்சு செய்து லமினேட் செய்த அட்டைகள் - காந்தம் ஒட்டப்பட்டவை உள்ளன. அவற்றை ஒழுங்காக ஒட்டி வைத்தாலும் குழப்பி வைப்பவர்கள் இருக்கிறார்கள். (தமக்கெனத் தனிக் கிண்ணங்கள் வைத்துப் பயன்படுத்துவோர் அணியில் நானும் உள்ளேன். எம் பாத்திரங்களை நாமே கழுவி வைத்துவிடுவோம்.)

எங்கள் வீட்டிற்கு முதன்முதலில் இயந்திரம் வந்தபோது ஆரம்பித்த வழக்கம், ஒரு காந்த ஸ்மைலி. அது சிரித்தால் - சுத்தம்; தலை கீழாக இருந்தால் - அழுக்கு. பிறகு அம்மா வீட்டிலிருந்து கிடைத்தன சில காந்தக் குண்டுகளும் குச்சுகளும். அவை எதனோடு வந்தன எனத் தெரியவில்லை. ஸ்மைலியை குச்சி மனிதன் ஆக்க உதவின அவை.
சமீபத்தில் சேகரிப்பில் கிடந்த 'ஸ்ரபிள்ஸ்' எழுத்துக்கள் கண்ணில் பட்டன. இவை முன்பு செஞ்சிலுவைச் சங்கக் கடையில் வேலை செய்த சமயம் சேகரித்த குப்பைகள். இரண்டு காந்தங்கள் செய்யக் கூடிய அளவு எழுத்துக்களே கிடந்தன. ஒரே காந்தத்தில் தலைகீழாக இரண்டு சொற்களையும் ஒட்டியிருக்கிறேன். முதலில் எழுத்துக்களை ஓர் தடித்த அட்டையில் ஒட்டிக் கொண்டேன். பெரும்பாலும் ஸ்ரபிள்ஸ் எழுத்துக்கள் பின்புறம் குழிவாக இருக்கும். மெலிந்த விளிம்புகளிலும் இரண்டு எழுத்துக்கள் எங்கு தொடுகைக்கு வந்தாலும், அங்கும் super glue பூசி ஒட்டினேன். நன்கு உலர்ந்தபின் அட்டையைக் காந்தத்தோடு (குளிரூட்டியில் ஒட்டியிருந்த பழைய நாட்காட்டிகளைக் காந்தமாகப் பயன்படுத்தினேன்.) ஒட்டி, பாரம் வைத்து உலரவிட்டேன்.
அழகாகக் பொதிசெய்து மூத்தவருக்கு அன்பளிப்பாக்கினேன். சந்தோஷமாக இயந்திரத்தை ஓட விட்ட சமயம் ஒட்டி வைத்தார். :-) பாத்திரங்கள் உலரும் சமயம் கதவு சூடேற... காந்தம் ஒட்டுக் கழன்றுவிட்டது.
மகன் வேறு உறுதியான பசையைப் பயன்படுத்தி ஒட்டிக் கொண்டார்.
பயன்படுத்தும சமயம் தான் இது போன்றவை நேரும். இது ஓர் பாடம்.