Tuesday 14 January 2020

சின்னச் சின்னக் கூடைகள்

பல வருடங்களின் முன், ஏதோ ஓர் பொதி சுற்றப்பட்டு வந்த நாடாக்களைக் கொண்டு சின்னதாக ஓர் கூடை பின்னி வைத்திருந்தேன்.

ஆசிரியத் தோழி ஒருவர் வீட்டில் விருந்து. அவர் நிறைய சின்னச் சின்னக் கூடைகளைச் சேகரித்து பெரியதோர் சட்டத்தில் அலங்காரமாக வீட்டில் மாட்டி வைத்திருப்பார். என்னிடம் இருந்த கூடையை அவருக்குக் கொடுப்பதென முடிவு செய்து எடுத்து வைத்தாலும் புதிதாகச் செய்தால்தான் அன்பளிப்பு என்பது போல் ஓர் எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
 இன்னும் சின்னதாக ப்ளாத்திக்கு நாடாவில் ஒன்று செய்துகொண்டேன்.
இரண்டையும் அவருக்குக் கொடுத்துவிட்டேன். சமீபத்தில் மீண்டும் அவர் வீட்டிற்குச் செல்லும் சந்தர்ப்பம் அமைந்தது. என் கூடைகள் இரண்டும் அவரது சேகரிப்புச் சட்டத்தினுள் அமர்ந்திருந்தன. சின்னதாக மனதுக்குள் ஓர் மத்தாப்பூ. :-)

4 comments:

  1. வா.வ் சூப்பரா இருக்கு இமா. ஊரில் பின்னியது.

    ReplyDelete
    Replies
    1. அறிமுகமான ஆரம்பத்தில் எல்லோர் கையிலும் இதுதானே! இப்போது வயர் தேடுகிறேன், கிடைக்கவில்லை. :(

      Delete
  2. ஆஹா... அழகாக இருக்கிறது நீங்கள் செய்த குட்டிக் கூடைகள்.

    ReplyDelete
  3. மிக்க நன்றி சகோதரரே!

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா