Saturday 8 June 2013

ஃபீஜோவா கேக்

பலமாகக் காற்று வீசிய ஓர் நாளில் ஃபீஜோவா மரம் ஏராளமாகக் காய்களை உதிர்த்துவிட... நண்பர் ஒருவர் கொடுத்த குறிப்பு இது.
Feijoa Cake
தேவையானவை

சுத்தம் செய்து சிறிதாக நறுக்கிய ஃபீஜோவா - 1 கோப்பை (25ml)
சிறிதாக நறுக்கிய... glazed ginger - 1/4 கோப்பை

மா- 2 1/2 கோப்பை                           
பேக்கிங் பௌடர் - 2 தே.க             
பேக்கிங் சோடா - 1/2 தே.க
வேர்க்கொம்புத்தூள் - 2 தே.க


பட்டர் - 175 கிராம்
சீனி - 1 கோப்பை
முட்டை - 3
வனிலா எசென்ஸ் - 1 தே.க
sour cream - 250 ml

முதலில் இஞ்சியையும் ஃபீஜோவாவையும் வெட்டி வைக்க வேண்டும்.

உலர்பதார்த்தங்கள் அனைத்தையும் ஒன்றாகச் சலித்து வைக்க வேண்டும்.

பட்டரையும் சீனியையும் நன்கு குழைத்து முட்டைகளையும் சேர்த்து அடிக்கவேண்டும்.

பிறகு, வனிலா சேர்த்துக் கலந்து ஃபீஜோவா & இஞ்சித் துண்டுகளையும் சேர்த்துக் கலக்கி....

அதனோடு சலித்து வைத்துள்ள உலர்பதார்த்தங்கள் அனைத்தையும் சேர்த்துக் கலக்கி...

இறுதியாக sour cream சேர்த்துக் குழைத்து....
180°cயில் 65 நிமிடங்கள் வைத்து எடுக்க வேண்டு...மாம்.

சாதாரணமாக வீட்டார் எல்லோரும் விருப்பும் சமையற்  குறிப்புகளை pantry cupboard கதவின் உள்ளே க்ளூடாக் போட்டு ஒட்டி வைப்பேன். இப்போது இடமில்லை. அதனால் இங்கே ஒட்டி வைக்கிறேன்; என்னோடு மற்றவர்களுக்கும் (பழம் கிடைத்தால்) பயன்படட்டும்.
~~~~~~~~~~~~~~~~~~~
முதல் முறை சமைத்த போது கிடைத்த காய்கள் பெரியவை.
அன்று கையில் அகப்பட்டது பெரிய silicon ring cake mould ஒன்று.  முப்பது நிமிடங்கள் வேகவிட்டேன். இறுதியில் cream cheese frosting பூசும்படி சொல்லி இருந்தார்கள். எங்கள் வீட்டாருக்கு இந்தக் கேக்கை தனியாகச் சுவைக்கத்தான் பிடித்திருந்தது. 
ஃபீஜோவா கேக் - 2
நீர்த்தன்மை அதிகமுள்ள சிறிய வகைக் காய்கள் கொண்டு செய்த கேக் இது. மேலே குறிப்பில் குறிப்பிட்டுள்ள அளவுக்கு மேலதிகமாக 1 மேசைக்கரண்டி இஞ்சியும் 1/2 தேக்கரண்டி வேர்க்கொம்புத்தூளும் சேர்த்தேன். நீள்சதுர குக்கி ட்ரேயில் ஊற்றி 25 நிமிடங்கள் வேக விட்டு எடுக்க மெத்தென்று அருமையான கேக் கிடைத்தது.
சூடாக இஞ்சிச்சுவையுடன் தொண்டையிலிறங்க...இதம்!
~~~~~~~~~
மேலும் சில ஃபீஜோவா குறிப்புகள்...
ஃபீஜோவா ரெலிஷ்
ஃபீஜோவா பை